தோழிகளே என்னை கேள்வியை கொஞ்சம் பருங்கப்பா.

ஹாய் தோழிகளே அனைவரும் நலமா?சுரேஜினி எப்படி இருக்கீங்க,இப்பொலுதுதான் கொஞ்சம் வாமிட்டிங் சிம்டம்ஸ் குறைந்துள்ளது.*)நான் தினமும் என்ன உடற்பயிற்சி செய்வது,
1)குழந்தை ஆரோக்கியத்துக்கு என்ன உணவுகள் சேர்த்து கொள்வது
2)சுக பிரசவத்திற்க்கு என்ன உணவுகள் முறைகளை கடைபிடிப்பது.எல்லோரும் கேட்கும் கேள்வியே நானும் கேட்பதாக நினைக்க வேண்டம்,மன்றத்தில் உள்ள எல்லாபதில்களையும் படித்து விட்டேன்.புதிய தகவல் இருந்தால் கொடுக்கவும்.நான் ஜீன் கடைசியில் இந்தியா.போகலாம் என்று இருக்கேன்.உங்கள் பதில் எதிர்பார்கிறேன்.நான் யூ ஸ் லா இருந்து,குழந்தை என்ன திங்ஸ் வாங்கிட்டு போகனும்.எது யூஸ்புல்லா இருக்கும்,சொல்லுங்க தோழிகளே

ஹாய் கவி ..வாந்தியெல்லாம் குறைந்தது கேட்டு சந்தோஷம்..இனிமே ஒரு பிடி பிடிங்க
12 வாரம் வரையாவது ஓரளவு ரெஸ்ட் எடுத்துட்டு சின்னதா வேலை தொடங்குங்க.ஒரு 18 வாரத்துக்கு பிறகு நல்ல உடற்பயிற்சிகள் போதும்.
இப்பொ எத்தனை வாரம்??இப்பத்திக்கி சராசரி வீட்டு வேலைகள் மற்றும் தினம் 30 நிமிட நடை போதும் பிறகு 1 மணிநேரம் வாக்கிங் மற்ற வீட்டு வேலைகள் செய்யலாம்
வாக்கிங் முன்பை போல் கைய்யை காலை வீசி வேகம் வேண்டும் என்று இல்லை உடம்பு அசைய வேண்டும் ரொம்ப அசதியாகிவிடவும் கூடாது
ஒரு 5 மாசத்துக்கு பிறகு கூட்டுவது ,துடைப்பது மாப் இல்லாமல் பழைய காலமுறைப்படி இதெல்லாம் மெல்ல செய்யலாம் வேற ப்ரcச்ஹனை எதுவுமில்லாவிட்டால்..அதுவே நல்ல எக்செர்சைஸ்.கடைசி 3 மாதங்களில் சேரில் உட்காரும்பொழுது இரு முட்டிக்கும் நடுவே நம் வலது உள்ளங்கையை சுருட்டி வைத்து முட்டையை உள்ளங்கைய்யோடு அழுத்த வேண்டும் அது என் மருத்துவர் சொல்லி தந்தது..இடுப்பெலும்பு விரிவடைய உதவுமாம்
இதெல்லாம் உங்களுக்கு எந்த ப்ரச்சனையும் இல்லாமல் இருந்தால் செய்ய கூடியது இப்பத்திக்கி மெல்ல சின்ன வீட்டு வேலை செய்துட்டு 5 மாச ஸ்கெனிங் செய்யட்டும் அதன் பிறகு மற்றது செய்யுன்ங்க
2)உணவை பொறுத்தவரை தினசரி ஜூஸ் இனிப்பு சேர்க்காமல்,பழங்கள் மற்ற சராசரி உணவுகள் சாப்பிடுங்கள்..சுகப்ரசவத்திற்கான உணவுகள் எனக்கு தெரியவில்லை
3)இந்தியாவில் டெலிவெரியா அங்கு கிடைக்காதது எதுவும் இல்லை தான் இருந்தாலும் அங்கு பயனம் ரொம்ப கஷ்டம் சீக்கிரம் களைத்து விடுவோம் .அதனால் முடிந்தவரை இங்கிருந்து வாங்கி செல்லுங்கள்
1)குழந்தையின் முதல் பிறந்தநாள் ட்ரெஸ்.நல்ல கலரோடு ரோம்பரும் மிட்டென்ஸ்(கைய்யுறை) மற்றும் சாக்ஸ் இருந்தால் அழகாக இருக்கும்..உங்களுக்கு குளிர்காலத்தில் பிறக்குமென்பதால் முழுவதும் கவராகும் உடுப்பு வாங்கலாம்..துணி மட்டும் மென்மையானதா பாத்து எடுங்க..இதை தினசரி எடுத்து பார்க்கும் சுகமே தனி
2)குழந்தையை கைய்யில் தூக்க வசதியாக பஞ்சு போன்ற துணிகள் கிடைக்கும் அதையும் வாங்கி கொள்ளுங்கள்
3)ஒரு 6 குட்டி குட்டி வீட்டில் போடும் வகை துணிகள்.சாக்ஸ்,குட்டி துணியால் ஆன ஷூ கிடைக்கும் அதையும் வாங்கி போடுங்கள்
4)குழந்தைக்கான தெர்மாமீடர் வாங்கி கொள்ளுங்கள்..விரும்பினால் ஒரு பாக்கெட் நல்ல டயபகள் தோழிகளிடம் கேட்டு வாங்குங்கள்..பேம்பேர்ஸ் வேண்டாம்
5)தரமான சோப் உபயோகப்படுத்த விரும்பினால் அங்கிருந்தே செபாமெட் சோப் வாங்கி கொண்டு செல்லுங்கள்
6)எதை மறந்தாலும் உங்களுக்கான பேட் வாங்க மறக்காதீங்க..டெலிவெரிக்கு பிறகு கொஞ்சம் சூப்பர் சைஸ் பேட்ஸ் சூப்பர் அப்சார்பிங் வித் காட்டன் கவர்ஸ்(முக்கியம்) வேண்டி வரும் அதையும் தோழிகளிடம் கேட்டு நல்ல ஆலோசித்து வாங்கி செல்லுங்கள்..
6)உள்ளாடைகளில் பால் கொடுக்க வசதியாக கிடைக்கிறது அதையும் விரும்பினால் வாங்கிக் கொள்ளலாம்.அதே போல் பால் கொடுக்கும்பொழுது மறைக்கும்விதம் எந்த பப்லிக் ப்லேசிலும் கொடுக்க வசதியாக நெர்சிங் கவர் அப்ஸ் கிடைக்கிறது அது ரொம்ப உபயோகமாக இருக்கும்
இதெல்லாம் நான் கொண்டு சென்றது அல்லது உங்களுக்கு இதையெல்லாம் சுலபமாக ஊரிலேயே வாங்கி விடலாம் என்று நினைத்தால் வேண்டாம்..நான் இன்னும் சில மூட்டைகளோடு சென்றேன்

தாளிக்கா நலமா?மிக்க நன்றி ரொம்ப தெளிவ விரிவான பதில் கொடுத்துள்ளீர்கள்.எனக்கு13 வாரம் முடிந்துள்ளது.கொஞ்சம் டிரஸ் வாங்கி இருக்கோம்.உங்க பதிவு உபயோகமா இருக்கு.நன்றி

தாளிக்கா நலமா?மிக்க நன்றி ரொம்ப தெளிவ விரிவான பதில் கொடுத்துள்ளீர்கள்.எனக்கு13 வாரம் முடிந்துள்ளது.கொஞ்சம் டிரஸ் வாங்கி இருக்கோம்.உங்க பதிவு உபயோகமா இருக்கு.நன்றி

ஹாய் தோழிகளே எனக்கு .டெலிவெரிக்கு பிறகு கொஞ்சம் சூப்பர் சைஸ் பேட்ஸ் சூப்பர் அப்சார்பிங் வித் காட்டன் வங்கவேண்டும்.US எங்கு கிடைக்கும்,என்ன பிரண்டு என்று சொல்லமுடியுமா?நான் இந்தியா செல்லும் போது வாங்கி செல்ல வசதியாக இருக்கும்,

இந்தியா செல்லும் போது குழந்தைக்கான dresses மட்டும் இல்லாது உங்களுக்கு Breast pads, nursing bras, nursing pillow, maternity pads மற்றும் lightweight nursing gown வாங்கி செல்லவும். மறக்காமல் postpartum maternity belt வாங்குங்கோ.

குழந்தைக்கு aveno products உபயோக படுத்துங்கோ. என் குழந்தைக்கு இந்தியாவில் இருக்கும் போது Johnsons உஸ் பண்ணினேன் பிறகு US வந்த பிறகு allergy ஆகிவிட்டது. ஆகையால் முதலிருந்தே Aveno உபயோக படுத்துங்கோ.

Maternity pads with wings வாங்கவும். Mothercare சென்று பார்க்கவும்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் ms.moorthyமிக்க நன்றி ,உங்கள் பதிவை இப்பொலுதுதான் பார்த்தேன்.உங்கலுக்கு தெரிந்த பிரண்டு சொல்லுங்க,நான் வாங்குவதற்க்கு எளிதாக இருக்கும்.

நீங்கள் Natracare ட்ரை பண்ணுங்க.....

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்