அறுசுவை குறிப்புகள் அனைத்தும் மற்றொரு தளத்திலும் அப்படியே வருவதெப்படி?...?

அன்புள்ள அட்மினுக்கு,
இன்று தற்செயலாக தாளம் இணையத்தளத்தில் நம் குறிப்புகள் அனைத்தும் ஜெராக்ஸ் எடுத்ததுபோல் அப்படியே இருக்க கண்டு...ஆச்சரியம்...அதிர்ச்சி...அது எப்படி...?நீங்கள் தாளம் இணையத்தளத்திற்கு அந்த மாதிரி உரிமை வழங்கி உள்ளீர்களா?அப்படியென்றால் சரி...
அது உங்களின் உரிமை.
ஆனால் அதுபோல் உரிமை எதுவும் வழங்கப்படாமல் அவர்கள் நம் இணையத்தளத்து பதிவுகளை தவறாக பயன்படுத்துகிறார்களோ என்ற கவலையும் சந்தேகமும் வந்ததால் அது பற்றி விளக்கம் கேட்க நினைத்துதான் இதை எழுதினேன்.
அப்படியே இருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு பதிவிலும் அறுசுவையிலிருந்து எடுத்தது என குறிப்பிடவேண்டுமல்லவா?
இல்லையென்றால் நாளடைவில் எது ஒரிஜினல்....?எது டூப்ளிகேட் ?என தெரியாமல் போய்விடக்கூடும்.
அன்புடன்
இளவரசி

நீங்கள் எங்கு பார்த்தீர்கள் எந்த தளத்தில் என்ற விவரம் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்க அட்மினுக்கு உபயோகமாக இருக்கும்

நம் நேற்றைய குறிப்புகள்வரை எல்லாமே உள்ளது

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அட்மின் அவர்களுக்கு,
நானும் பார்த்தேன், துஷ்யந்தி கலைவேந்தனின் 'மிதிவெடி' குறிப்பு அப்படியே இருந்தது. குறிப்புக் கொடுத்தவரது பெயர் எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை. இங்கு துஷ்யந்தி கொடுத்திருந்த மேலதிக குறிப்புகள் எதுவும் அங்கு இணைக்கப் பட்டிருக்கவில்லை.
இதனைப் பற்றிய உங்கள் கருத்தினை அறிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

:-0

என்னுடைய எல்லா குறிப்புகளும் சமீபத்திய கிட்ஸ் மஃபின் கேக் ரெசிப்பி வரை எல்லாம் பதிவாகியுள்ளது
என் பெயர் குறிப்பிடப்படவில்லை.
நான்/நாம் சொந்தமாக யோசித்து முயற்சி செய்த ரெசிப்பிகளை வேறொரு இணையத்தளம் தன் சொந்த குறிப்பு போல் போடுவது..நாகரீகமான செயல் இல்லையல்லவா...அறுசுவைக்கு மட்டுமே நாம் அந்த உரிமையை கொடுத்திருக்கிறோம்....அதுதான் வருத்தமாக இருக்கிறது..கைவசமுள்ள குறிப்புகளை
அனுப்புவதற்கு யோசனையாக உள்ளது

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி தற்போது அருசுவையின் முகப்பில் இருக்கும் மசாலா பாலும் தாளத்தில் வந்து விட்டது. என்ன சொல்றதூனு தெரியவில்லை. அட்மின் அண்ணாதான் ஏதாவது செய்யணும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நிறைய ரெசிப்பிகளை (யாரும் சமைக்கலாமில போட ) போட்டோக்களோடு
வச்சுக்கிட்டு எதற்கும் திரு.அட்மின் அவர்களின் பதிலை பார்த்துவிட்டு அனுப்பலாம் என்றுதான் காத்திருக்கிறேன்....

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி, நீங்கள் சொல்லித்தான் இப்படி ஒரு தளம் இருப்பதே தெரியும். போய் பார்த்தேன் நிறைய் ரெசிப்பிகள் அப்படியே காப்பி & பேஸ்ட் தான். அதிரா, துஷி, இன்னும் பலரின் ரெசிப்பிகள் அதில் இருக்கு. நீங்கள் ஏன் அட்மினுக்கு தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பி பார்க்கலாமே? ஏன் சொல்கிறேன் என்றால், அட்மின் உங்கள் பதிவை பார்த்திருந்தால் இந்நேரம் நடவடிக்கை எடுத்திருப்பார். குறை நினைக்க வேண்டாம்.
வாணி

gmail லில் இமைல் அனுப்பியிருக்கிறேன்...வாணி...
இன்னும் பதில் வர வில்லை.....காத்திருக்கிறேன்....
பார்க்கலாம்....நீங்கள் சொன்னதில் எந்த தவறுமில்லை..இதில் குறையாக நினைக்க ஒன்றுமில்லை..நன்றி...நல்ல கருத்திற்கு

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ம்ம்... என் குறிப்பு கூட 2 இருக்கு அங்க. பார்த்தேன் இப்ப தான். :)

இருக்கிறதுலயே அறுசுவைல இளவரசி, அதிரா குறிப்பு தான் ரொம்ப நல்லா இருக்கு போல... ;) அது தான் நிறைய இருக்கு. ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்