கூகுளில் நம் இந்திய மேப் அவமதிப்பு

இன்று தினமலர் இதழ் படித்த போது இதைக்கண்டு மனம் மிகவும் வேதனைப்பட்டது. அதை விட கோபம் அதிகமானது.
கூகுளின் மேப்பில் இந்தியாவில் இருந்து பார்த்தால்(http://maps.google.co.in) காஷ்மீர் மற்றும் அருணாச்சல் ப்ரதேசம் நம் இந்தியாவின் பகுதியாக காட்டப் பட்டுள்ளது. ஆனால் அதையே http://maps.google.com ல் பார்த்தால் இவை இரண்டும் பிரச்சினைக்கு உரிய பகுதியாக புள்ளியிட்ட கோடுகளால் காண்பிக்கபட்டுள்ளது.

தினமலரின் http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1583#249808 இந்த லின்க் பார்த்தால் எல்லாமே புரியும். மதத்தால் மொழியால் நாம் வேறுபட்டிருக்கலாம். ஆனால் இந்தியன் என்ற உணர்வோடு நாம் நம் எதிர்ப்பை காட்ட வேண்டும். வரைபடத்தில் கூட இந்தியா துண்டாடப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.
வாழ்க பாரதம்!!!

நெஞ்சு பொறுக்குதில்லையே இடத்துக்கு இடம் நிறம் மாற்றும் கூகுளின் செயலைக் காண்கையிலே

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி, எனக்கு தினமலர் சில நாட்களாகவே வருவதில்லை அதனால் என்னால் அதை பார்க்க முடியவில்லை. ஆனாலும் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இல்லை என்கிற அளவிற்கு இப்போது ஆகிவிட்டது நிலைமை:-( வெளி நாட்டு ஊடகங்கள் ஏறக்குறைய எப்பவும் இந்தியாவிற்கு தலையை எடுத்து விட்டுத்தான் காட்டுகின்றன:-(

நம் அரசாங்கம் கடுமையாக எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இதுவே சீனாவிடம் இப்படி வாலாட்ட முடியுமா?

உண்மைதான் வின்னி. முன்னாடி இந்தியாவின் தலையை வெட்டினார்கள். இப்போது இதோ தோள்பட்டையும் வெட்டப்படுகிறது. இதையெல்லாம் கவனிக்க அரசுக்கு நேரம் இருக்குமா?! எவன் எதை வெட்டினா என்ன? எனக்கு சொத்து சேருதா? எதிர்கட்சிக்கு குழி வெட்டினோமான்னுதானே இருக்கு நிலமை. வெட்கக்கேடு :-(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்