விளக்கு

விளக்கு ஏற்றியவுடன் அதில் உள்ள எண்ணை விளக்கின் அடியில் தேங்குகின்றன. எண்ணை ஒழுகாமல் இருக்க வழி உண்டா?

தங்களின் கேள்விக்கு விடையளிக்க நான் இதனை பதியவில்லை. ஒரு வேண்டுகோளை முன்வைக்கவே இந்த பதிவு.

இத்தனை அழகாக தமிழில் டைப் செய்யக்கூடிய தாங்கள் ஆங்கிலத்தில் பல கேள்விகள் கேட்பதன் காரணம் புரியவில்லை. இந்த தமிழ் இணைய தளத்தில் அனைத்தும் தமிழில் இடம்பெற்றால்தான் சிறப்பாக இருக்கும். தமிழில் டைப் செய்ய இயலாதவர்கள் ஆங்கிலத்தில் டைப் செய்தால் பரவாயில்லை. தங்களால் இயலும் பட்சத்தில் தாங்கள் தமிழிலேயே அனைத்து பதிவுகளையும் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். இந்தத் தளத்தினை பார்வையிடும் எல்லோருக்கும் தமிழ் நன்கு தெரியும். ஆனால் ஆங்கிலம் தெரியும் என்று உறுதியாக கூற இயலாது.

மன்னிக்கவும் அட்மின். இனிமேல் தமிழிலேயே அனைத்து பதிவுகளையும் செய்கிறேன்.எழுத்துதவி பக்கத்திற்கு சென்று டைப் செய்வது சிரமமாக உள்ளது. ஆதலால்தான் ஆங்கிலத்தில் டைப் செய்தேன்.

மன்னிப்பு கேட்கும் அளவிற்கு இது பெரிய குற்றம் அல்ல. எங்களது வேண்டுகோளை ஏற்றுகொண்டமைக்கு மிக்க நன்றி. தமிழில் டைப் செய்தல் என்பது ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், பழகியவுடன் மிகவும் எளிதாக இருக்கும். இதனை நீங்களே உணர்வீர்கள். எகலப்பை போன்ற மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவிவிட்டீர்கள் என்றால், எழுத்துதவி பக்கம் செல்லாமல் நேரிடையாகவே நீங்கள் தமிழில் டைப் செய்யலாம். இது குறித்து wikipedia வில் உங்களுக்கு உதவி கிடைக்கும். கீழ்க்கண்ட பக்கத்தினை பார்வையிடவும்.

<a href="http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help" target="_blank"> விக்கிபீடியா தமிழ் உதவிப் பக்கம் </a>

மிக்க நன்றி, அட்மின்.

ஹலோ வினோதா. விளக்கிற்க்கு தாங்கள் என்ன திரி பயன்படுத்துகின்றீர்கள் என்று தெரியவில்லை. சாதாரணமாக பயன்படுத்தும் துணியிலான திரி என்றால் தாங்கள் குறிப்பிடும் பிரச்சனை நேரிடலாம். ஆனால் பஞ்ஜினால் ஆன திரியை பயன்படுத்திப் பார்க்கவும். எண்ணெயும் கசியாது, சுடர் நன்கு நின்று எரியும். மற்றபடி விளக்கில் எண்ணெயை ஊற்றும் பொழுது முதலில் திரியை வைத்து அதை நன்கு உள்புறமாக இழுத்து வைத்த பிறகு எண்ணெயை ஊற்றவும்.விளக்கின் பாதியளவுக்கு எண்ணெய் இருந்தால் போதும். அது குறைய குறைய மேலுமூற்றிக் கொள்ளலாம். எப்படி கொளுத்தினாலும் எண்ணெயின் கசிவு கொஞ்சமாவது இருக்கும்.அதற்கு விளக்கின் அடியில் ஒரு சிறிய தாம்பாலத்தை வைத்து விட்டால் விளக்கு துளக்கும் பொழுது தட்டையும் சேர்த்து துளக்கிக் கொள்ளலாம். நன்றி.

மிக்க நன்றி.

மேலும் சில பதிவுகள்