வெளியூரில் 9 மாத குழந்தைக்கு உணவு-உதவுங்கள் தோழிகளே!

நான் அடுத்த மாதம் India செல்கிறேன்.அங்கு 1 வாரம் குழந்தையுடன் திருப்பதி செல்கிறேன் (வேண்டுதல்).குழந்தைக்கு அங்கு என்ன உணவு கொடுப்பது????அவனுக்கு இதுவரை தாய்பால் மற்றும் பருப்புசாதம்,ரசம்,தயிர்,பால்சாதம்,காய்கறிகள்,பழங்கள் வேகவைத்து கொடுத்துள்ளேன்.cerelac கொடுத்ததில்லை.போகும் இடத்தில் சமைக்க முடியாதே என்ன செய்ய???உதவுங்கள் தோழிகளே.please

ஹாய் சவிதா!
நீங்க இந்தியா போவதாக சொல்வதால், உறவினர்களும் வருவார்கள்தானே திருப்பதிக்கு.

உங்க குழந்தைக்கு அப்ப நீங்க இட்லி,தோசையெல்லாம் கொடுத்ததில்லையா?
இட்லி, கேழ்வரகு கூழ், செரிலாக் என்று ஏதாவது ட்ராவலில் கொடுக்க கத்துக்கொடுக்கவேண்டும்.
இப்பக்கூட நீங்க ஆரம்பிக்கலாம். அடுத்த மாதம்தானே இந்தியா கிளம்பறீங்க.பிஸ்கட்
வாழைப்பழம்கூட அவசரத்தேவைக்கு கொடுக்கலாம். இதற்குமுன் இதுபோல் யாரோ கேட்டு ஆலோசனைகளும் கொடுக்கப்பட்டதாக ஞாபகம் இருக்கு.

பழைய பதிவுகளில் தேடிப்பாருங்க. இட்லி கொடுத்து பழக்கிவிடுங்க. வெளியூர் போகையில் ஹோட்டலில் வாங்கி ஊட்டிவிடலாம்!
திருப்பதிக்கு எந்த சிரமமும் இல்லாமல் நல்லபடியாக சென்று நலமுடன் தரிசனம் செய்ய வாழ்த்துக்கள்!

டியர் சவிதா..நீங்க உங்க குழந்தைக்கு கீதா லஷ்மி சொன்னது போல வாழை.செரிலாக் இப்பவே டிரை செய்து ஊட்டி பழக்க படுத்துங்கள் இதெல்லாம் அவசரத்திற்க்கு மட்டுமே....மற்றபடி சின்ன ரைஸ் குக்கர் வைத்துகங்க.கூடவே அரிசி,பருப்பு இவைகளை குழந்தைக்கு தேவையான அளவில் சின்ன சின்ன பாக்கெட்டில் போட்டு வைத்துகங்க..அத்ஹோட ராகி,சத்ட்டுமாவும் வைத்துகலாம் நீங்க ஹோட்டலில் இருந்தால் கூட கரெண்ட் மூலம் குழைய வைத்து பருப்பு சாதம் ரெடி ச்எய்து தரமான பாக்ஸில் போட்டு எடுத்து சென்று சாப்பிடும் டைம் கொடுத்துகலாம்..இதே போலவே ராகி,சத்துமாவையும் தண்ணீரைல் கரைத்து வடிகட்டி ரைச் குக்கரிலேயே காய்ச்சி செரிலாக் பாட்டிலில் எடுத்து செல்லலாம்...இதெல்லாம் எடுத்து சென்ராலும் எப்பொழுதும் செரிலாக் அல்லது நெஸ்டம் எது தேவையோஅதை 2 வேளைக்கு தக்கவாறு எடுத்து செல்வதுடன் கூடவே அதை கரைத்து கொடுக்க சூடுபடுத்தி ஆறிய த்ண்ணீரையும் எடுத்துட்டு போங்க போகும் இடத்தில் ரிட்டன் வர டைமானால் கை வசம் இருப்பதை ஊட்டிடலாம்...இதோட நீங்க தங்கும் இடத்தில் காய்கறி கிடைத்தால் கூட ரொம்ப நல்லதுதான் சாதத்துடன் வேக வைத்து சமைக்கலாம்மே...முக்கியமா அவசரத்துக்கு கூட ஹோட்டல் சாப்பாடு கொடுத்துடாதீங்க...தோ என் பொண்ணு வந்தாச்சு அவளை கவனிக்கனும் ஓடிகறேன் :D

வேறு சந்தேகம் இருப்பின் கேட்கவும்
அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

ப்ரெட் வாங்கி பாலில் டிப் செய்து கொடுக்கலாம்.அதே போல் அவசரத்திற்கு பிஸ்கட்,இட்லி,வாழைப்பழம்,பொட்டுக்கடலை சீனி போட்டு பொடி செய்தும் பாலில் குழப்பி கொடுக்கலாம்.சிம்பிளாக நினைவு வந்ததை எழுதினேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.அறுசுவை உள்ளே நுழைய முடியவில்லை.நீங்கள் கூறியது போல் நிச்சயம் செய்கிறேன்.

மேலும் சில பதிவுகள்