ரொம்ப படுத்துற

ஹாய் தோழிகளே
என்னகு ஒரு பிரச்னை.என் மகளுக்கு இரண்டே கால் வயது.நாங்கள் இப்பொழுது தான் வேறு ஊரு மாறி இங்க வந்துள்ளோம்.ஒள்று மாதம் ஆகிறது.இங்கு வந்ததில் இருந்து என் பெண் ரொம்ப மாறி விட்டால்.எதற்கெடுத்தாலும் அடம்,இல்லனா என்ன thookka சொல்ற.வீட்டில் விளையாட்டு சாமான்லாம் தூக்கி எரியறது,லேப்டாப்,போன்லாம் எரியறது,

ஏன் இப்படி செயரனே புரில,வெளில போகணும்னு கூப்பிடற போன கைய பிடிகாம ஓடற. பழைய ஊருல ரொம்ப சமர்த்த இருந்த.என்ன பிரச்சனைனே புரில.என்னகு இன்னும் ஒரு மாசத்துல பிரசவம் அதனால என்னகும் உடம்பு முடியல.அப்பா,அம்மா வர இன்னும் ஒரு வாரம் ஆகும்.எப்படிசமாளிக்ரதுனே தெரில.

ஹாய் ப்ரீத்தி!
தாயாகப்போகும் உங்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.
பொதுவாவே பெரியவங்களான நமக்கே புது இடம், புது மனிதர்கள் என்று எல்லாம் செட் ஆக டைம் எடுக்கும்.
நமக்கு புரியும், இனி இதுதான் நம் இடம் இங்க நாம எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் போகனும்னு. ஆனா குழந்தைங்க அப்பிடி இல்லியே.
பழைய இடம், நண்பர்கள் எல்லாம் மறக்க கொஞ்சம் நாளாகும். நாம் எதுக்கு புது ஊருக்கு வந்திருக்கோம்னே புரியாத குழந்தைகள் இப்பிடி அடம் பிடிப்பார்கள்.
அவங்களுக்கு போரடிக்காம ஏதாவது இன்டோர் கேம்ஸ் விளையாடக்கத்துக்கொடுங்க.
இன்னும் ஒரு வாரம்தானே கவலைப்படாம இருங்க. அப்பா, அம்மா வந்ததும் குழந்தை சமர்த்தாய் ஆய்டுவாங்க.
அவங்களுக்கு புரியற மாதிரி சின்ன சின்ன கதைகள் சொல்லிக்கொடுங்க.
பொதுவாவே குழந்தைகளுக்கு அவங்களுக்குன்னு இருக்கிற டாய்ஸ் விட சமயலறை சாமான்கள் ரொம்ப பிடிக்கும்.
உங்களுக்கு தேவையில்லாத பாத்திரங்களை விளையாட அனுமதிங்க. ரொம்ப அழகாய் விளையாடுவாங்க.
நிறைய ஸ்டோரி புக்ஸ் வாங்கிக்கொடுங்க. அவங்களே பிக்சர் பார்த்து கதையை புரிஞ்சுக்கிற மாதிரி இருந்தா போரடிக்காது.
இந்த மாதிரி சமயத்தில் டென்ஷன் ஆகாம மனசினை ரிலாக்ஸா வெச்சுக்குங்க!
ஆல் த பெஸ்ட்!

கீதா சொல்றமாதிரி செய்ங்க...
நீங்கள் சமைத்து கொண்டிருக்கும்போது அவளையும் கிச்சனில் விளையாட விட்டுக்கொள்ளுங்கள்....
நீங்கள் துணிகளை மடிக்கும்போது அவளுக்கும் சின்ன துணிகளை கொடுங்கள் ...சில துணிகள் அழுக்கானாலும் பரவாயில்லை...குழந்தை சந்தோஷமாக இருப்பாள்...
நிறைய பேசுவதில்லை என்று ஒரு இழையில் கவனித்தேன்...இப்போதெல்லாம் தமிழிலும் டோரா முதலான எல்லா சிறுவர் கார்ட்டூனும் தமிழில் வருகிறதே அதை (பார்க்க சொல்லாமல் நீங்களும் )ரசித்துப் பாருங்கள்....
புது வீட்டில் அடுக்கும் வேலைகள் நிறைய இருக்குமே...இனியா இதை எங்கு வைக்கலாம் என்று அவளைக் கேளுங்கள்...இதுவும் இனியா ஹவுஸ் என்பதை புரிய வையுங்கள்...
நிறைய ப்ளான் செய்யாதீர்கள்...செய்தாலும் நடக்கவில்லையானால் கவலைப் படாதீர்கள்...
ஒரு வாரம் தானே இனியாவுடன் என்ஜாய் செய்யுங்கள் ..

ஹாய்
பதில் அளித்த உங்கள் இருவருக்கும் என் நன்றிகள்.
என் மகள் எப்பொழுதும் என்னக்கு கீரை ஆய்வது,லாண்டரி போடுவது என உதவி செய்வாள்.இங்க வந்ததில் இருந்து எதற்கு எடுத்தாலும் அழுகை,எல்லாவற்றையும் உடைப்பது என இருக்கிறாள்.

நான் விளையாட கூப்ட்டாலும் வருவது இல்லை.வெளியே வாக்கிங் அழைத்து சென்றால் கைய பிடிகம ஓடற.தூக்கத்துக்கு ஒரு அழுகை,சாப்பிட ஒரு அழுகை .என்ன செய்ரதுனே புரியல.யாராவது பசங்க கூட இருந்த விளையாடற.ஆனா இங்க யாரும் பசங்க இல்ல,இருபவங்களும் தெலுங்கு,என்னக்கு தெலுகு தெரியாது.அவங்களுக்கு ஆங்கிலம் புரில.அப்பயே பிச்சுகிட்டு ஓடிடலாம் போல இருக்கு.

டிவி ல கார்ட்டூன் பார்த்துகிட்டு தன சாப்டற.சமயத்துல நம்ப சொல்றத திருபி சொல்ற,ஆனா பெரும்போலும் நோ சொலிட்டு ஓடிடற.

ஏற்கனவே எங்க இருவர் வீட்டிலும் இரண்டவுது குழந்தைக்கு இவ்ளோ சீக்கிரம் எதுக்குனு சொல்லிடு இருகாங்க.இதுல இவள பார்த்துக்க முடியலன்னு சொல்லவே யோசனைய இருக்கு.என்னவோ போங்க.

Anbe Sivam

Anbe Sivam

உங்களின் வருத்தம் எனக்கு புரிகிறது...
குழந்தையும் எதனாலோ (இடமாற்றம்) பாதிக்கப் பட்டிருக்கிறாள் .....அவளை புரிந்து கொள்ளுங்கள்...மொழி ஒரு பிரச்னை இல்லை...தெலுகு மொழி பேசினாலும் பரவாயில்லை சைகை பாஷையாவது பேசுங்கள்...
அவள் அழுகிறாளே என்று பதற்றம் அடையாமல் நீங்கள் புன்முறுவலுடன் இருங்கள்(சொல்வது எளிது)...முயற்சியுங்கள்...
நிறைய க்ரேயான்ஸ் வாங்கி கலர் பண்ணச் சொல்லுங்கள்...
குழந்தைகள் திருப்பி பேசுவதில்லையே தவிர நாம் பேசுவதை நிறைய கவனிப்பார்கள் ...எனவே நிறைய பாசிட்டிவாக பேசுங்கள்.... இனியா ரொம்ப நல்ல பிள்ளையாம் ...அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்...இனியாவுக்கு தம்பி பாப்பா வர்றார் ,தாத்தா ,பாட்டி,வர்றாங்க....இனியா ஒரே பிசிதான்...அம்மாவை கண்டுப்பிங்களா... இப்படியெல்லாம் நிறைய டயலாக் பேசுங்கள்....இவை நிஜமே....
//ஏற்கனவே எங்க இருவர் வீட்டிலும் இரண்டவுது குழந்தைக்கு இவ்ளோ சீக்கிரம் எதுக்குனு சொல்லிடு இருகாங்க// என் அத்தை என்னையும் இப்படித்தான் கூறினார் ... முந்தைய பிள்ளை சிறியதாக இருக்கும்போதே அடுத்த குழந்தை என்றால் முந்தைய பிள்ளையை சவலைப் பிள்ளை என்பர் என்று குத்தாமல் குத்தினார்... எனக்கும் பிள்ளையை இப்படிச் சொல்கிறார்களே என்று கோபம் வந்தது அடக்கி கொண்டேன்... அப்புறம்தான் யோசிக்கிறேன் ...என் வீட்டுக்காரருக்கும் அவரது தங்கைக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம்... பேசியவருக்கு இது தோன்றவில்லை...
எனவே இரு வீட்டார் என்ன சொன்னாலும் சிரித்துக் கொண்டே எடுத்துக் கொள்ளுங்கள்...
இதில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது...
இரு குழந்தைகளும் ஒருவருக்கொருவர் விளையாடிக் கொள்வர்...
உங்களுக்கும் மருந்து முதற் கொண்டு எதுவும் மறந்திருக்காது ...
அனுபவம் பசுமையாகவே இருப்பதால் அடுத்த குழந்தையை கையாள்வது எளிது...
இருவரும் ஒன்றாகவே வளர்வர்...எனவே நீங்களும் உங்கள் மனதை எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்....
இனியாவை குறையாக எக்காரணத்தை கொண்டும் யாரிடமும் (உங்கள் அப்பா, அம்மாவிடம் கூட) சொல்ல வேண்டாம்.... அதுவும் அவள் முன்னால் முடிந்தால் பாசிட்டிவ்வாக மட்டுமே பேசுங்கள்....
இனியாவிற்கு என் அன்பு முத்தங்கள்...

ஹலோ தெரேசா
ரொம்ப நன்றீபா.என்னக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு உங்க பதில்.என்னக்கு எப்பயாவது கவலைய இருகுணா என் paatiகிட்ட பேசுவேன்.உங்க கிட்ட பேசினது அப்படி தன பீல் பண்றேன்.
இன்று காலைல இருந்து அவ கிட்ட ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன்,அவளும் ஒத்துழைக்கிற.பாப்போம்.என்னக்காக முடிந்தால் பிராத்தனை பண்ணுங்கள்.
அப்படியே முடிஞ்சா உங்க மெயில் id குடுங்க.பேசலாம்.
Anbe Sivam

Anbe Sivam

மிக்க மகிழ்ச்சி.
ஐடி theresethenmozhi@yahoo.com
நிச்சயம் பிராத்திக்கிறேன் ...

தெரேசா பெயர் சேர்த்துட்டேன்.ப்ரீயா இருகுரப வாங்க.Anbe Sivam

Anbe Sivam

நனைவரும் நலமா? நலமே.எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்.குழந்தைகளை அடிக்கக் கூடாது என 90 சதவிகிதம் கூறுகின்றனர்.அடிக்காமல் ,வசை பாடாமல் வளர்க்க முடியும் என எனக்கு தோன்றவில்லை. இதில் தோழிகளின் கருத்தை வரவேற்கிறேன்.
என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

மேலும் சில பதிவுகள்