சீக்கிரம் சொல்லுங்க தோழிகளே.

என் பையன் 26 அன்னைக்கு நடக்க ஆரம்பிச்சான். நான் சந்தோசப்படுறதுக்குள்ள அவன் நடக்கும் போதெல்லாம் லூஸ் மோஷன் ஆனது. முதல் முறை நடக்கும் போது அப்படி இருக்கும்னு நான் விட்டுட்டேன். ஆனா பாவம் இதில் சளி வேற பிடிச்சு சுத்தமா சாப்பிட மாட்டேங்குறான். நேத்து பயந்து போய் ஹாஸ்பிடல் போனேன். ஆனா இன்னும் சரியாகலை. மதியம் ஆப்பிள் வேகவைத்து மசித்து கொடுத்தேன். அதை அப்படியே வாமிட் பண்ணிட்டான். இப்போ லைட் பீவர் வேற. அவனை பார்க்கவே பாவமா இருக்கு. நான் என்ன பண்ண. டாக்டருக்கு போன் செய்தால் 3 நாள் அந்த சிரபை குடுத்து பார்த்துட்டு வாங்கன்னு சொல்றார். நான் அவனுக்கு என்ன சாப்பாடு இந்த நேரத்தில் கொடுக்கனும் சீக்கிரம் சொல்லுங்க தோழிகளே.

என் பையன் 26 அன்னைக்கு நடக்க ஆரம்பிச்சான். நான் சந்தோசப்படுறதுக்குள்ள அவன் நடக்கும் போதெல்லாம் லூஸ் மோஷன் ஆனது. முதல் முறை நடக்கும் போது அப்படி இருக்கும்னு நான் விட்டுட்டேன். ஆனா பாவம் இதில் சளி வேற பிடிச்சு சுத்தமா சாப்பிட மாட்டேங்குறான். நேத்து பயந்து போய் ஹாஸ்பிடல் போனேன். ஆனா இன்னும் சரியாகலை. மதியம் ஆப்பிள் வேகவைத்து மசித்து கொடுத்தேன். அதை அப்படியே வாமிட் பண்ணிட்டான். இப்போ லைட் பீவர் வேற. அவனை பார்க்கவே பாவமா இருக்கு. நான் என்ன பண்ண. டாக்டருக்கு போன் செய்தால் 3 நாள் அந்த சிரபை குடுத்து பார்த்துட்டு வாங்கன்னு சொல்றார். நான் அவனுக்கு என்ன சாப்பாடு இந்த நேரத்தில் கொடுக்கனும் சீக்கிரம் சொல்லுங்க தோழிகளே.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உமா... பயம் வேண்டாம். குழந்தைகளுக்கு இப்படி வாந்தி, பேதி இருக்குறது வழக்கம். நடக்க ஆரம்பிச்சதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. குழந்தை உடம்பில் நீர் சத்து குறையாம பார்த்துக்கங்க. சர்க்கரை, உப்பு கலந்த நீர், இல்லை அது போல் பவுடர் கூட தண்ணீரில் கலந்து குடுக்க டாக்டர் குடுப்பாங்க... அதை குடுங்க. சத்தான உணவு நல்லா ஜீரனத்துக்கு வர கூடியதா குடுங்க. வேறு ஒன்னும் பயம் வேண்டாம். டாக்டர் சொல்றதை கேளுங்க. விரைவில் குணமாயிடுவான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

dear uma,if your son's stool is in green colour it must be due to cold. apart from dr's medicine,morning &evening,you give him jatikkai paste with honey (less than small spoon)cold affects the child not to sleep properly.jathikkay induces sleep.if no proper sleep loose motion will start.honey helps the chiold to digest food.give him easily digestable food like idly & kanji.even you can follow this pattivaidhyam whenever he catches cold.

nanre sey;athuvum inre sey.

nanre sey;athuvum inre sey.

பயப்பட வேண்டாம் என் இரு பிள்ளைகளுக்கும் இருந்தது இவனுக்கு 10 மாசத்தில் மர்யத்துக்கு அர்சூனுக்கு வந்தமாதுரியேதான் வந்தது என் அனுபவம் இது குழந்தைக்கு இந்த பீரியடில் வரும்..மர்யத்துக்கு நடக்க ஆரம்பிச்சதும் வந்தது இது சகஜமே நடக்க,பல் வர,தவழ இப்படி டைமில் லூஸ் மோஷன் வரும்...நான் மர்யத்தை வைத்து படாத பாடு பட்டேன் அப்பப்பா அதையும் இப்ப பையனோட போராடியதையும் நினைக்க கூட முடியல...இந்த டைமில் நீக்க முக்கியமா செய்ய வேண்டியது தண்ணி சத்து இறங்காம பார்த்துகங்க..அதோட மெடிசன்களை ஒழுங்கா கொடுங்க முக்கியமா குழந்தை சாப்பிடாட்டாலும் எப்படியாவது சாப்பிட வைங்க..இதை மட்ட்ம் சரியா பார்த்துகங்க...மர்றபடி பயம் இல்லை இது முழுக்க என் அனுபன் தைரியமக இருங்க குழந்தையை சோர்வா படுக்க வைக்காதிங்க நல்லா விளையாட விடுங்க குழந்தை நார்மலான ஆக்டிவிடியில் மாற்றம் தெரிஞ்சா உடனே டாக்டர்ட்ட போய்டுங்க மற்றபடி பயம் இல்லை அர்ஜூன்க்காக நாங்க எல்லோரும் பிரே செய்கிறோம்...

இன்னும் எழுதலாம் என் பையன் ஆட்டம் தாங்கல...வனி உங்க பதிவை அந்த இழையில் பார்த்துதான் இதுக்கு வந்தேன் அதர்க்கு உங்களுக்கு தேங்ஸ்

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆப்பிள் கொடுக்காதீங்க,செரிலாக் போன்ற பால் ஐடத்தையும் தவிர்த்திடுங்க..நெஸ்டம் கீத் கஞ்சி..கர்ட் ரைஸ்..இபப்டி ஆகாரம் கொடுங்க அப்பா இவனோட முடியலப்பா டைப் செய்ய விடாம சிஸ்டத்தை ஆப் பண்ணிட்டே இருக்கான் :((( நான் போகிறேன் ஐயோ ஓடியே போகிரேன்

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

குழந்தைகளுக்கு நார்மலாக இருக்கும் விசயம்தான் என்றாலும் நமக்கென்று வரும்போதுதான் பயம் அதிகமாகும். காய்ச்சல் என்றாலே கஞ்சிதான் ( புழுங்கல் அரிசி) மோஷன் சரியில்லை என்றால் ஜவ்வரிசி கஞ்சிதான் . கஞ்சி வைத்து வெறும் தண்ணீரை மட்டும் கொடுங்க. காய்ச்சல் இருக்கும் வரை சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க.

ரொம்ப நன்றி வனிதா, மர்ழி, ராதா, பிரபா.இன்னிக்கி ஸ்டூல் டெஸ்ட் பண்ணி ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார். அப்புறம் ஏன் இப்படி இருக்குன்னு தெரியலை. பாவம் அவனுக்கு தெம்பே இல்லை. ஆனாலும் பிள்ளை சமாளிக்கிறான். சில சமயம் மட்டும் கடுப்பாகி கத்தி அழறான். நான் கூடவே இருக்கனும்னு அழறான். மடியிலயே தூங்குறான். தொட்டிலிலோ, பெட்டிலோ போட்டால் ரொம்ப அழறான். என்னால் எந்த வேலையும் செய்ய முடியலை. ரொம்பவே பிடிவாதம் பிடிக்கிறான். நேத்து அழுதுகிட்டே இருந்தேன். நான் அழுதால் இவனும் அழுதுகிட்டே என் முகத்தில் அடிக்கிறான். என்னன்னு புரியாத குழந்தைகளுக்கு ஏன் தான் இந்த பாழா போன நோய் வருதோ.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மோஷன் டெஸ்ட் செய்து ஒன்றுமில்லை என்றால் பயப்பட தேவையில்லை. நமது நடவடிக்கைகள், உணர்வுகள், எல்லாவற்றையும் குழந்தைகள் கவனிப்பார்கள். நமது கவலைகள் அவர்களை பயப்படவைக்கும். நீங்கள் கூடவே இருங்கள். எங்கள் வீட்டில் சின்னவருக்கு உடம்பு சரியில்லையென்றால் அனைவருக்கும் கஞ்சிதான். அவருக்கு கஞ்சியில் உள்ள தண்ணீர்,,எங்களுக்கு மீதி அரிசிக்கஞ்சி. கஞ்சிதண்ணீரை கொஞ்ச கொஞ்சமாக கொடுத்து கொண்டேயிருங்கள். சளி, காய்ச்சல், வயிறு பிரச்சனை என்று பாவம் குழந்தை. சீக்கிரம் சரியாக கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

ரொம்ப நன்றி பிரபா உங்க வேண்டுதலுக்கு. நேத்து நைட் இவனுக்கு உடம்பு ரொம்ப சூடா இருந்தது. ஆனா காய்ச்சல் இல்லைன்னு டாக்டர் டெம்ப்ரேச்சர் பார்த்து சொல்லிட்டார். இன்னும் மோஷனும் தண்ணியா தான் போறான். இன்னிக்கி வேற சிரப் கொடுத்திருக்கார். கஞ்சியுமே குடிக்க மாட்டேன்கிறான் பிரபா. எனக்கு அவன் மோஷன் போகும் போதெல்லாம் கண்ணை கண்ணீர் மறைக்கிறது. ஆனால் டாக்டர் பயப்பட வேண்டாம்னு சொல்றார். அவனுக்கு பேம்பர்ஸ் மாட்டமுடியாது, டிரஸ் பண்ணறதுக்குள் போதும் போதும்னு ஆகும். ஆனா இன்னிக்கி ஹாஸ்பிடல் போகும் போது டிரஸ் பண்ணால் அமைதியா படுத்திருக்கான். சிணுங்க மட்டும் செய்றான். இட்லி, கஞ்சி தவிர வேற என்ன குடுக்கலாம்னு சொல்லுங்க தோழிகளே. அதையாவது அவன் சாப்பிடுறானானு பார்க்குறேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உமா நான் இப்பதான் இந்த பதிவை பார்த்தேன்,அர்ஜூன் இப்ப எப்படி இருக்கார்.

உமா முதலில் நீங்கதான் தைரியமா இருக்கணும்,வீட்டில் நாம கொஞ்சம் டல்லா இருந்தாவே,பசங்க கணவர் எல்லாரும் ஒரு மாதிரி ஆயிடுவாங்க:)
அர்ஜூன் முன்னாடி நல்லா சிரிச்சிட்டு இருங்க (ரொம்ப கஷ்டம்தான் இருந்தாலும் முயற்சி பண்ணுங்க‌)அதுவே அவருக்கு பாதி குணமானமாதிரி, சொல்ற‌து ரொம்ப‌ ஈஸி அனுப‌விக்குபோதுதான் தெரியும் இருந்தாலும்....,டாக்ட‌ர்தான் க‌வலைப்ப‌ட‌ வேண்டாம்னு சொல்லிட்டாங்க‌ இல்ல‌ அப்புற‌ம் எதுக்கு க‌வ‌லை...அர்ஜூனுக்கு சீக்கிர‌மே ச‌ரியாகிடும்.

அவன் எதை விரும்பி சாப்பிடராரோ அதையே கொஞ்சம் காரம் கம்மியா இருக்கற மாதிரி கொடுங்க,வீணா மனசை போட்டு குழப்பிக்கதீங்க..

உமா நீங்க ஒரு நாளைக்கு,எந்த கவலையுமே இல்லையே'னு கவலைப்படப்போறீங்க பாருங்க:)

மேலும் சில பதிவுகள்