தினமொரு புதுக்கவிதை

யாருக்காவது கவிதை எழுத ஆசை இருந்தால் இந்த இழையை பயன் படுத்திக்கொள்ளலாம்.. எனக்கு தெரிந்த. வரை அதில் உள்ள நிறைகுறைகளை சொல்கிறேன்....

கவிதகைளை சரி பார்க்கும் அளவுக்கு நீ என்ன அர்த்தங்களின் குத்தகைகாரனா?வார்த்தைகளின் கனாக்காரனா என என்மேல் வினா தொடுத்துவிடாதீர்கள்!தேர்வு எழுதுபவனைவிட திருத்துபவருக்கே அதிகம் பிழை கண்ணுக்கு படுவதுபோல் வேளியே இருந்து பார்த்தால்தான் குறை நிறை தெரியும் என்ற நோக்கத்திலும் எண்ணத்திலும் ஆரம்பிக்கபட்டதே இந்த இழை!
வேறெந்த நோக்கமும் இல்லை..இல்லை!

எனக்கும் விமர்சிப்பவர்களூக்கும் நிறைய வித்தியாசம்!அவர்கள் நிலவில் கறை என்கிறார்கள்..நானோ கறையை சுற்றி நிலவு என்கிறேன்.நிலவு ஒரு பாலைவனம் என்கிறார்கள்..நான் இறைவன் இலவசமாய் தந்த குளிர்சாதனம் என்கிறேன்...எப்போதும் குறைகளை அலசி பார்ப்பது கூடாது..நேசிப்பவரின் தேகம் எழுபது சதவீதம் நீரினால் ஆனதே என நினைத்தால் காதலை தொடரமுடியுமா?-ஷேக்

என்னுடைய ஒரு கவிதை..

நீ என்னுள் நிரம்பிய பிறகு
சிந்திய துளிகள்
இந்த கவிதைகள் அனைத்தும்.....

kavidai nallla iruku.....lastela yedhooo kavingar name iruke...adha onnum puriyela..................

உன்னிடம் காதலைதானே கேட்டேன்
காதெலென்ன பூகம்பமா?
முன்னதாகவே தெரிவிக்க முடியாதென்கிறாய்?
நீ என்னை கனவு கான்கிறாய் என
நான் கனவு கான்கிறேனோ?
காதலில் மட்டும் நரசிம்மராவாய்
நரகம் காட்டாதே
சார்லின் சாப்லினாய் சொர்க்கம் காட்டு-கவிஞர்.ஷேக்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

காதல் சுற்றம்..
கனவுகளின் முற்றம்..
நித்தம்..நித்தம்..
உன் நினைவு..
நீங்காத தொடர் கனவு..
நிலத்திலும்..
நீரிலும்..
நிழலாக ...நீ..
நினைவுகளுடன்..நான்..!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

என்ன ஒரு இனிமை! என்ன ஒரு வார்த்தை!
உங்களுக்குள் இப்படி ஒரு கவி திறமையா?வாவ்..
சபாஷ் சரியான போட்டி....கவிஞரே....yogarani madam..keep it up

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்ன ஒரு இனிமை! என்ன ஒரு வார்த்தை!
உங்களுக்குள் இப்படி ஒரு கவி திறமையா?வாவ்..
சபாஷ் சரியான போட்டி....கவிஞரே....yogarani madam..keep it up

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

"வெற்றி"ஐ விரும்பும் நமக்கு
"தோல்வி"ஐ தாங்கும் மனம் இல்லை,
தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும்
வெற்றிதான்
எப்படி இந்த கவிங்கர் கோகி யின் கவிதை.

பாதி நிலவு தான்
தெரிகிறது...
அன்பே உன் முகத்தில்
விழும் கேசத்தை
ஒதுக்கு...
அட கண
நேரத்தில் தங்க நிலவு..

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஆழம் பார்ப்பதாய்
நினைத்துதான்
காலை வைத்தேன்...

மூச்சுத்திணறலில்தான்
தெரிகிறது
மூழ்கிப்போனது.... "காதல்"

காதல் என்பது அலையும் கரையும்

அருகிலும் இருக்கலாம் அனைத்தும் கொள்ளலாம்

நட்பு என்பது தண்டவாளம்
அருகில் இருக்கலாம்
அனைக்க முடியாது

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால்
பற்றிக்கொள்ளும்
இது காதல் மொழி

அருகில் இருந்தாலும் தன் பசிக்கு
இருதயத்தை இரையாக்காது இரைப்பை
இது நட்பின் புது மொழி

இருதய அரங்கத்தில் காதலுக்கு
இரண்டு இருக்கைகள்
நட்பிற்கு பல இருக்கைகள்

காதல் காமத்தின் கலப்பட பொருள்
நட்பு என்பது அக்மார்க் அன்பு

இலக்கணம் இன்றி கவிதை இயம்புவது எப்படி?

காதலின் இலக்கணம் நட்பு-SHEIK MOHI DEEN

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்றைக்காவது சூரியனக்கு முன்னதாக
எழுந்துருக்கிறாயா?
கிழக்கில் சந்தனமும் தங்கமும் ஒன்றாய்
கொழுந்துவிட்டெரியும் அற்புத காட்சி!
அது என்ன புற்களில் பனிதுளியா?
இல்லை...
சூரியனின் வருகைக்காக உழைத்த
விடியழின் வியர்வைத் துளி!

ஒரு மரத்தின் கிளையில்
குருவி ஒன்று
உடலில் தலைபுதைத்து
உதறிக்கொள்ளும் உற்சாகமாய்...

எல்லாம் உழைத்துகொன்டுதானிருக்கிறது

தூங்கிகொன்டிருக்கும் மனிதனை தவிர....

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்