கச்சேரி ஆரம்பம்... அரட்டை 1

இது படம் இல்லை... நம்ம அரட்டை ஏரியா!!! ;)

வாங்க வாங்க எல்லோரும் வாங்க.... அரட்டை அடிக்க!!! புது தளத்தில் ஆரம்பிச்ச காரணத்தால் பகுதி 1. :)

யார் அங்கே.... வாங்க இங்கே.... அரட்டை பகுதி நான் இல்லாமலே நெரம்பிடுச்சு.... மன்னிச்சுட்டேன் எல்லாரையும். ;) புது அரட்டைக்கு வாங்கப்பா...

மகேஸ்வரி, இமா, தேன், சுபா, சுகா, சுபத்ரா, சோனியா, செந்தமிழ் செல்வி, சவுதி செல்வி, இலா, ரேணூகா, ஆசியா, ஜலீலா, வாணி, வின்னி, மாலி, சாய் கீதா, கீதாலக்ஷ்மி, கௌரி, கீதாஜீ, ஷேக், யோகராணி, உமா ராஜ், பாப்ஸ், புது வரவுகள், இன்னும் யாரெல்லாம் இருக்கீங்க.... எல்லாரும் வாங்கப்பா... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வந்து விட்டேன் வனிதா மேடம்.நான் புது வரவு இல்ல.பழைய வரவு.ஓகே வா.அப்புறம்..எப்படி இருக்கீங்க?வீட்ல எல்லொரும் நலமா?உங்க நேட்டிவ் எது?இந்தியா ல உங்களுக்கு சொந்த ஊர் எது?சொல்லுங்க பா சொல்லுங்க

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தோழிகள் அனைவரும் நலமா??? 103'ல நிறைய தங்க்லிஷ் பதிவுகள். கிடைக்கும் கொஞ்சம் நேரத்தில் அத்தனையும் என்னால் படிக்க முடியல. தமிழ் பதிவுகள் மட்டுமே படிக்க முடிந்தது. மன்னிச்சுடுங்க. எனக்காகவாது எல்லாரும் தமிழில் பதிவு போடுங்க ப்ளீஸ். :) என்னையும் குழந்தைகளையும் விசாரித்த அனைவருக்கும் நன்றி. நாங்கள் நலம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஷேக் உங்க பதிவுகளை நான் படிச்சுட்டு தான்ன் இருக்கேன்... முகப்பில் 5'ல் 3 தலைப்பு நீங்க ஆரம்பிச்சதா தான் இருக்கு.... ;) அப்போ எப்படி உங்களை புது முகம்'னு சொல்வேன்!!!! ஹிஹிஹீ.... நீங்க உங்க ஊரை பற்றி பட்fஹிவு போட்ட இடத்தில் நான் என் சொந்த ஊரை பற்றி பதிவிட்டிருக்கேன்.... படிக்கலயா??? உங்க மனைவி நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் நலந்தான் மேடம்.நீங்க?எங்க ஊரபத்தி முன்னாடியே தெரியுமா உங்களுக்கு?உங்களுக்கு எந்த ஊரு?கனவண் என்ன பன்றார்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வனிதா, நலமா? என்னையும் கூவி அழைத்து இருக்கிறீர்கள். நன்றி. என்ன நிறைய ஆளுங்க காணாமல் போய் விட்டார்கள். நிறைய புது வரவுகள். வனிதாவின் லிஸ்டில் இருப்பவர்களை நானும் கூவி அழைக்கிறேன் எல்லோரும் வாங்க.

ஷேக் அண்ணாச்சி ஒத்தை ஆளா விடுகதை, கடி என்று பூந்து விளையாடுறார். அறுசுவையை அடிக்கடி பார்ப்பேன். பின்னூட்டம் கொடுக்க நேரம் வருவது இல்லை.
வாணி

வனிதா வந்துவிட்டென் .என்னையும் அழைத்ததுக்கு ந்ன்றி. வாணி நலமா? மற்ற தோழிகளும் சீக்கிரம் வாங்க......

அன்புடன்
மகேஸ்வரி

வனிதா, மற்றும் தோழிகள் நலமா? கூப்பிட்ட குரலுக்கு நானும் வந்திட்டேன் வனிதா எங்கள் தோழிகள் எல்லோரும் வந்து போகின்றார்கள் சரி, நம்ம அதிராவை இன்னமும் காணவில்லையே??.வனிதா உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைத்ததா? அறிய ஆவல். தெரிந்தால் சொல்லுங்கள்.
தோழிகளே தயவு செய்து கூடிய வரை தமிழில் பதிவு செய்ய முயற்ச்சியுங்கள்.நன்றி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

vnitha vnitha en soga kathai kelunga,thenu neengalumthan, entha font pottalum,thenu sonna .com pottalum thamiz varavillaipa new font ethai insatll pannanum thavikirean.en daughter install pannikodukirean endru sonnal so waitingfor her.aduvari thanglishthan sorrrrrrry.

life is short make it sweet.

ஹாய் வனிதா,

நலமா? யாழினி.சிவா நலமா?

மகேஸ்வரி பாப்புக்குட்டி நலமா? நீங்கள் எப்படி இருக்கீங்க? அம்மா, தம்பி,மற்றும் கணவர் நலமா?

யோகராணி நலமா?

வாணி நலமா? குழந்தைகள் நலமா?

தேன் நலமா? குழ்ந்தைகள் நலமா?

இமா நலமா? செபாஅம்மா நலமா?

கீதா நலமா?

அனைத்து தோழிகளுக்கும் ஒரு ஹாய்.

with love

மேலும் சில பதிவுகள்