கொஞ்சம் மூளையை கசக்குங்க-part-2

அன்பார்ந்த தோழர்களே தோழிகளே..இனி உங்களது புதிர்களை இதிலிருந்து தொடங்குங்கள்...

ஒரு மைதானத்தில் குதிரைப் பந்தயம் மிகப்பிரபலமாக நடந்து கொண்டிருந்தது. ஏதேனும் புதுமை செய்ய எண்ணி அதையே
மெதுவாக நடக்கும் போட்டியாக அறிவித்தார்கள் அதற்குப் பின்
ஸ்டார்ட் சொல்லியும் எந்தக் குதிரையும் நகருவதாக இல்லை.
அதிக நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு, குழுவில் அனைவரும் கூடி
ஒரு முடிவு எடுத்தார்கள். அதற்குப் பிறகு எல்லா குதிரைகளும் பிய்த்துக் கொண்டு ஓடின. அவர்கள் எடுத்த முடிவு என்ன?
(பி.கு) அவர்கள் மெது நடைப் போட்டியை வேகப் போட்டியாக மாற்றவில்லை.

இந்த கேள்விக்கு யாரும் சரியான பதில் சொல்லாத படியால், நானே சொல்லி விடுகின்றேன்.

குதிரைகளின் சொந்தக்காரர்கள் தங்களுடைய குதிரைகளை ஓட்டாமல் மற்றவர்களின் குதிரைகளை ஓட்ட வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
விதிப்படி கடைசியாக வரும் குதிரையே வெல்லும் என்பதால் அனைவரும் குதிரைகளை வேகமாக ஓட்டினார்கள்! சரிங்களா...............

ஷேக் அப்படியே உங்கள் கேள்விக்கான (தொப்பி) பதிலையும் சொல்லி விடுங்களேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அடுத்த கேள்வி, விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஒரு மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது...ஆனால் எந்த மனிதனுக்கும் அதில் விருப்பமில்லை.
ஒரு மனிதனால்தான் அது வாங்கப்படுகிறது. ....ஆனால் அது அவனுக்குத் தேவையில்லை.
ஒரு மனிதனுக்கு அது தேவை...ஆனால் அதை வாங்கியது அவனுக்குத் தெரியாது.
அது என்ன????

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி எனக்கு தெரியும் இதுக்கு பதில் சொல்லட்டுமா? சவப்பெட்டி தானே.

சரியான பதில் லக்ஷ்மி, வாழ்த்துக்கள்.
அடுத்த கேள்வி

யார் குற்றவாளி ?

அன்று ஞாயிற்றுக் கிழமை.காலையில் தாமதமாக எழுந்து குளிக்கப்போனான் அந்தக் குடும்பத் தலைவன்.அவனது மனைவி சிறிது நேரம் கழித்து பாத்ரூம் போனாள்.அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக்
கிடப்பதைக்கண்ட மனைவி, உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தாள்.காவலர்கள் வந்தார்கள். ஆய்வாளர் தனது விசாரனையைத் துவக்கினார்.விசாரனையின் முடிவில் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.
1- மனைவி காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
2- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சமையல்காரன் சொன்னான்.
3- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தோட்டக்காரன் சொன்னான்.
4- தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக வேலைக்காரன் கூறினான்.
5- காரைத் துடைத்துக்கொண்டிருந்ததாக டிரைவர் கூறினான்.
இதையெல்லாம் கேட்ட ஆய்வாளர், உடனே குற்றவாளியைக் கைது செய்தார்.
யார் குற்றவாளி???

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

vellaikaran kutravali. sunday post office leave. no letters will come on sunday.

Every body is writing in tamil . but i dont know to type in tamil. I am sorry for that. I am a new member

அருமை.....உங்கள் பதில் சரியானது வாழ்த்துக்கள்.Ramya.
தமிழில் எழுத......
இந்த இணைய தளத்திலேயே தமிழ் எழுத்து உதவி என ஒரு பகுதி உண்டு. அல்லது இந்த http://www.google.com/transliterate/indic/tamil. பகுதியை பயன்படுத்தியும் எழுதலாம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

First guy is a coin toss - let's wish him good luck.
His job is to establish the parity of black hats visible to him.
He says "Black" if he sees an odd number of black hats; "Red" otherwise.
By paying attention to what has been said, each prisoner will know his hat's color.

Example:
Second to speak hears "Black" and sees an even number of black hats.
He knows his hat is black [odd changed to even - must be his is black] and says "black".

Third guy has heard "black" and "black" and sees an even number of black hats.
He knows his hat is red [even stayed even - his hat can't be black] and says "red".

And so on, to the front of the line.

General algorithm:
The first time you hear "black", say to yourself "odd".
Each time your hear "black" after that, change the parity: "even", "odd", ... etc.
When it's your turn, if the black hats you see match the running parity, you're Red; Black otherwise.
Call out your color.</div></div></div>
யோகரானி மேடம் இதுதான் விடை.நான் இத ஒரு நெட்டில் இருந்து எடுத்தேன் பா.விடை தமிழில் இல்லை.ஆங்கிலத்தில்தான் உளளது

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வணக்கம் ஷேக்.
தமிழ்க்கேள்விக்கு தமிழில் பதில் தேவை.

OR GIVE QUESTION IN ENGLISH.

Don't Worry Be Happy.

Thank u very much yogarani

என்ன ஜயலக்ஷ்மி மேடம்.இதுக்கெல்லாம் பொய் கோவபடுரிங்க?நான் அதல் நெட் ல இருந்து எடுத்தேன்.விடையை தமிழில் டைப் பன்ன முடியல பா.கோவிசுக்காதிங்க

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்