தேதி: April 26, 2010
சார்ட் பேப்பர்
பாலிஸ்டர் துணி - ரோஜா செய்ய விரும்பும் நிறம்
கத்திரிக்கோல்
கம்பி
பச்சை நிற டேப்
இலைகள்
விளக்கு அல்லது மெழுகுவர்த்தி
மார்க்கர்
ப்ளக்கர்
படத்தில் உள்ள பூக்களை போல் ஒரு சார்ட் பேப்பரில் நான்கு விதமான அளவுகளில் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதை விட பெரிய ரோஜா செய்ய வேண்டுமானால் இன்னும் 2 அளவுகள் கூட வெட்டி கொள்ளவும்.

இந்த சார்ட் பேப்பர் பூக்களை துணியின் பின்பக்கம் வைத்து ஒவ்வொரு அளவிலான பூக்களுக்கும் 3 அல்லது 4 துண்டுகள் வரைந்து கொள்ளவும்.

வரைந்த அனைத்து பூக்களையும் கத்திரிக்கோலால் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

துணியில் வெட்டிய ஒவ்வொரு துண்டோடு பூக்களின், ஒவ்வொரு இதழின் முனையையும் மடித்து ப்ளக்கரில் பிடிக்கவும்.

இதனை விளக்கில் லேசாக காட்டி ஒட்டி விடவும்.

இதே போல் நான்கு பக்க இதழ்களையும் ஒட்டி, எல்லா பூவிதழ்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதழ்களின் நடுவே பெரிய ஊசி கொண்டு ஓட்டை போட்டு கொள்ளவும்.

வழக்கமாக பூ செய்வது போல் கம்பியின் ஒரு பக்கத்தை சின்னதாக வளைத்து விட்டு இன்னொரு பக்கத்தில் இருந்து முதலில் சின்ன இதழ்கள், பின் சற்று பெரிய இதழ்கள் என்று அனைத்தையும் கோர்த்து விடவும்.

கம்பியில் பச்சைநிற டேப் சுற்றி, இலைகள் சேர்த்தால் அழகான ரோஜா தயார். அறுசுவை நேயர்களுக்காக திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள், இந்த ரோஜா பூ செய்முறையை வழங்கியுள்ளார்.

Comments
வாவ் வனி
வாவ் வனி ரெம்ப சூப்பரா இருக்கு செய்து பார்க்க ஆசையா இருக்கு.இந்த துணிக்கு எங்க போகன்னு தான் தெரியல.
துனி போல இல்லை செடியில் பூத்த மாதிரி அழகா இருக்கு
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
வனி
இந்த மலரை பார்த்து மயங்காதவர் யாரும் இருக்க முடியாது,அவ்வளவு அழகு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
செடியில் பூத்த ரோஜா!
சூப்பரோ சூப்பர் ரோஜா!
வனிதா, இது நிஜமாவே துணி ரோஜாவா இல்ல நிஜ ரோஜாவான்னு ஆச்சர்யமாய் இருக்கு.
கொள்ளை அழகுடன் செடியில் பூத்த ரோஜா போலவே இருக்கு.
இதனை பார்த்திட்டு பாராட்டாம போக மனசே இல்ல!
நிஜ ரோஜா
சூப்பர் ரோஜா வனிதா. நிஜ ரோஜாப் போலவே ரொம்ப அழகாக இருக்கிறது.
Save the Energy for the future generation
ஹை வனிதா
ஹை வனிதா, ரொம்ப அழகாயிருக்கு ரோஜாப்பூ.உங்க திறமைக்கு ஒரு சபாஷ்.
அழகான ரோஜா
ஹாய்! வனித்தா,என்னே அழகான ரோஜா,என் மனதை கவர்ந்த ரோஜா,இருதயத்தை பறித்த ரோஜா
நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்
நிஜ பூ தான்
ஹாய் வனிதா! உண்மையில் நிஜ பூ தான்.இலையை பார்க்கும் போதுதான் வித்தியாசம் தெரிகின்றது.உங்கள் திறமைக்கு என் பாராட்டுக்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நிஜமான ரோஜாப்பூ!
ஹாய் வனிதா,
வாவ்வ்வ்.... சான்ஸே இல்லை, உண்மையிலேயே நிஜமான ரோஜாப்பூவைப்போலவே இருக்கு வனிதா! சபாஷ்! வழக்கம் போலவே அசத்திட்டிங்க போங்க! :)
(சம்மர் லீவில் என் பொண்ணோடு சேர்ந்து ட்ரை பண்ணிப் பார்க்க ஒரு ஐடியா கிடைச்சாச்சு!)
உங்க சாட்டின் க்ளாத்தில் பண்ண தலையணைகூட பிரமாதமா இருந்தது வனிதா. நான் அதுக்கு பின்னூட்டம் கொடுக்கவேண்டுமென்று நினைத்து கொண்டே இருந்தேன். அங்கேயே போட்டேனா என்று சரியா நினைவில்லை, அதான் இங்கே அதையும் சேர்த்து குறிப்பிடுகிறேன்.
ரொம்ப நேர்த்தியா இருக்கு வனிதா, நீங்க செய்யும் எல்லா வேலைப்பாடுகளும்.... அதுதான், ஆல் இன் ஆல் வனிதா!! :) (சொன்னா நம்ப மாட்டிங்க, முகப்பில் பூவைப்பார்த்ததுமே, இதை செய்தது நீங்களா இருக்குமோன்னு நினைத்தேன், நீங்களேதான்!)
யாழினி, குமரன் நலம்தானே?! குட்டிஸை (அவங்க செய்யும் ரகளையை) நல்லா எஞ்சாய் பண்ணுங்க! ஓக்கே, மீண்டும் பிறகு பேசலாம்! நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
வனி!
எங்கயோ ரோஜாத்தோட்டத்தில பிடுங்கிக் கொண்டு வந்து வச்சுப் போட்டு நீங்கள் செய்தது எண்டு ரீல் விடுறீங்களோ வனி!! ;) உண்மையான பூ மாதிரியே இருக்கு. பாராட்டுக்கள். ;)
- இமா க்றிஸ்
ரொம்ப அழகு வனி
எல்லாரும் எல்லா மாதிரியும் பாராட்டிடாங்க என்ன சொல்ல. வார்த்தைகளே இல்லை கொள்ளை அழகு. இன்று புதிதாய் பூத்த ரோஜாவை போலவே இருக்குங்க. வாவ் அழகோ அழகு வனி. தோ கிளம்பிட்டேன் பாலிஸ்டர் துணி வாங்க.
hi vanitha marupatium
hi vanitha marupatium kalakidenga suppper da.nija poo mathiri irukku pa.
all is well
வனி சூப்பர்ப்
நல்லா இருக்கு வனி பூ. இது துணி ரோஸ்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. அவ்வளவு இயற்கையா இருக்கு. பாராட்டுக்கள் வனி. தொடருங்க வனி இதுப் போல இன்னும் நிறைய க்ராப்ட் ஒர்க் செய்றத. யாழினிக்கும் குமரனுக்கும் என் அன்பு முத்தங்கள்.
நன்றி அட்மின்!!!
குறிப்பை அழகா வெளியிட்டு இருக்கீங்க அட்மின்.... :) மிக்க நன்றி. தாமதமா பதிவு போடுறதுக்கு மன்னிச்சுடுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி ரேணு, ஆசியா
பதிவிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். தாமதமான பதிலுக்கு மன்னிக்க வேண்டும். சில நாட்களாக எனக்கும் என் லேப்டாப்புக்கும் உடல் நலமில்லை. இன்று தான் வர முடிந்தது.
ரேணு... முதல் ஆளாய் பதிவு போட்டிருக்கீங்க... மிக்க நன்றி. தேடி பிடிங்க துணியை, வீட்டில் நிச்சயம் இருக்கும். :)
ஆசியா... மிக்க நன்றி. உங்க பதிவு இல்லாமல் என் குறிப்பா... என்று தேடும் அளவுக்கு உங்க பதிவுகள் என்னை சந்தோஷ படுத்திருக்கு. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி சாய் கீதா, இந்திரா, பிரியா
சாய் கீதா... மிக்க நன்றி. உங்க பின்னூட்டம் படிக்கவே மகிழ்ச்சியா இருக்கு. :)
இந்திரா... மிக்க நன்றி. செய்து உங்க வீட்டிலும் வையுங்க... நீங்களும் எல்லார் பாராட்டையும் வாங்குங்க. ;)
பிரியா... மிக்க நன்றி. உங்க சபாஷுக்கு பல கோடி நன்றிகள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி பிரபானி, யோகராணி, சுஸ்ரீ
பிரபானி... மிக்க நன்றி... பதிவு சந்தோஷத்தோட வார்த்தைகளால் மனதை தொட்டது. :) கவிதை எழுதுவீங்களா நீங்க???
யோகராணி... மிக்க நன்றி. கவலை பாடாதிங்க அடுத்து இலை செய்யும் குறிப்பு குடுத்து அந்த இலையையும் நிஜ இலை போல் செய்ய முயற்சிக்கலாம். :)
சுஸ்ரீ... மிக்க நன்றி. நலமா இருக்கீங்களா?? நிச்சயம் செய்து பார்த்து படம் அனுப்புங்க. பார்க்க காத்திருக்கேன். :) யாழினி குமரன் இருவரும் நலம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா... மிக்க நன்றி. ஆனாலும்
இமா... மிக்க நன்றி. ஆனாலும் இத்தனை சந்தேகம் ஆகாது... ;) இந்த யோசனையை முதலிலேயே குடுத்திருந்தா நான் கஷ்டப்பட்டு செய்யாமல் படம் அனுப்பிருக்கலாம்... :D செபா ஆன்ட்டி நலமா?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி கௌரி, மதி, ஹரிகாயத்ரி
கௌரி... மிக்க நன்றி. "ரொம்ப அழகு வனி"... ரொம்ப நன்றிங்க.:D என்னை எப்போ பார்த்தீங்க??? ;)
மதி... மிக்க நன்றி. சீக்கிரம் செய்து படம் அனுப்புங்க. :)
ஹரிகாயத்ரி... மிக்க நன்றி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவசியம் எதாச்சும் செய்யறேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
படம் அனுப்பிருக்கலாம்
:D செபா ஆன்ட்டி நலம்.
- இமா க்றிஸ்
வனிதா
வனிதா இங்க நம்ம ரோஜாவ பத்தி தானா சொல்லிட்டு இருக்கோம் அத தன் அழகுன்னு சொன்னேன்.(வேணும்னா இப்படி வச்சுக்கலாம் வனி ரோஜாவே இவ்வளவு அழகா இருக்கே இத செய்தவங்க எவ்வளவு அழகா இருப்பாங்க :-))
கௌரி... வனி பாவம்!!
கௌரி... பாவம் வனி... இப்படிலாம் சொல்லி ஏமாத்த கூடாது. இருந்தாலும் வனியை பலரும் நேரில் பார்த்து இருக்கும் காரணத்தால் வனி அழகுன்னு பொய் சொன்னா ஒதைப்பாங்க.... அதனால் சொல்லல. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரெட் ரோஸ் சூப்பர்
ரொம்ப அழகாக இருக்கு ரோஸ்
என்றும் உங்கள்
ஜலீலா
Jaleelakamal
hai jaleela akka
enaku mana amaithi perawendum athihama tension ahuren.plz answer pannuga akka
ஜலீலா...
ஜலீலா... அப்பாடியோ எவ்வளவு நாளைக்கு பின் என் குறிப்பில் உங்க பதிவு பார்க்கிறேன்...!!! ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. மிக்க நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Sahla... Sahla... Sahla...
சஹ்லா... நீங்க ஜலீலா'வை கேட்டீங்க, நான் மூக்கை நுழைக்கிறேன்னு கோச்சுக்காதிங்க. ஜலீலா பர்த்ததும் பதில் தருவாங்க. இப்போதைக்கு எனக்கு தெரிஞ்சது...
எது நடந்தாலும் நல்லதுக்கு தான்... நம்ம டென்ஷன் ஆகுறதால, பயப்புடறாதால, கத்துறதால எதுவும் மாறிடாது.... அப்படின்னு மனசை சமாதானம் பண்ணி கடவுளை நினைங்க, கவலையை அவனிடம் விட்டுட்டு மனசுக்கு பிடிச்ச விஷயங்களில் கவனத்தை திருப்புங்க... எல்லாம் சரியா போயிடும். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆண்டவன் உஙக்ளுக்கு மன ராகத்தை கொடுக்கட்டும்
சஹ்லா இது வனி ஏரியா என் கிட்ட கேட்டுட்டீங்க என்னால் பதில் சொல்லாமல் போக முடியல.
நீங்க என்ன பிரச்சனையில் இருக்கீங்கன்னு தெரியல.
டென்ஷன் இல்லாதவங்க, மன அமைதில் இல்லாதவங்க, பிரச்சனையே இல்லாதவங்க யாருமே இந்த உலகில் கிடையாது.
நீங்க தான் உங்கள் மனதை வேறு ஏதாவது ஒரு வழியில் மாற்றி கொள்ளனும், டென்ஷன் அடைவதால், உடல் நலக்கேடு, தூக்கமின்மை,ஒத்தத தலைவலி,முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகல் ஏற்படும். எந்த பிரச்ச்சனையா இருந்தாலும் கண்டிப்பாக தீர்வு உண்டு.
ஆண்டவனிடம் ஒப்படையுங்கள்.நல்ல பிராத்தனையில் ஈடு படுங்கள். ஆண்டவனிடம் மன்றாடுங்கள்.
இந்த அறுசுவை ஆயிரக்கணக்கான சமையல் குறிப்புகள் இருக்கு அதில் ஒரு நாளை ஒன்று செய்து பார்த்தாலே நேரம் போகும், பல தோழிகள் இங்கு இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் பேசுங்கள்.
பல கைவினை பொருட்கள் செய்முறை இருக்கு ஈசியானதை செய்து பாருங்கள்.
மனதை ரிலாக்ஸாக வைத்து கொள்ளுஙக்ள்./
ஆண்டவன் உஙக்ளுக்கு மன ராகத்தை கொடுக்கட்டும்.
என்றும் உங்கள்
ஜலீலா
Jaleelakamal
HAI
IT IS VERY SUPER AND SIMPLE . NICE
dont angry
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta
sangeethavijay
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா