இந்த அறுசுவை தளத்தின் ஹீரோ,ஹீரோயின் யார்

இந்த அறுசுவை தளத்தின் ஹீரோ,ஹீரோயின் யார்?ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிடவேண்டும்.உங்கள் ஓட்டுக்களை இங்கே பதிவு செய்யுங்கள்..

ஆஹா... இப்படி ஒரு டாப்பிக்கா??? அங்கங்க என் பேரும் அடி படுது... உண்மையை ஒத்துக்கணும், நான் எல்லாத்திலும் தலையை விடுவேன் ஆனா இதுல இவங்க சூப்பர்'னு சொல்லுற அளவுக்கு எதையும் செய்ய மாட்டேன்.

உண்மையில் ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றில் சூப்பர். என் மனசுக்கு தெரிஞ்ச ஒரு பட்டியல் இங்கே....

ஜலீலா - உடல் நலம் இல்லாதவங்களுக்கு கை வைத்தியம், அவங்களுக்கு ஏற்ற உணவு, கர்ப கால உணவு வகைகள் இதில் ராணி.

ஆசியா - சிக்கன் வகை சமையலில் ரொம்ப சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்.

செந்தமிழ் செல்வி - சைவ சமையல் குறிப்புகள், பிரெச்சனைனு சொல்றவங்களுக்கு அன்பான ஆதரவு தரும் பேச்சு.... இதில் ராணி.

தேவா - அழகுக்கு ராணி இவங்க தான்பா.

கவிசிவா - பட்டிமன்றத்தில் இவங்க தான் ராணி.

செண்பகா (பாப்பி) - தூக்கி போட வேண்டிய பொருளை கூட விலை மதிப்பில்லாத பொருளா மாற்றும் திறமைல இவங்க மட்டுமே ராணி.

இமா - கை வேலை, மற்றவரை ஊக்குவிப்பது, அன்பான பேச்சு... இதில் இவங்க ராணி.

இலா, உத்ரா, தேன்மொழி - மற்றவரை உரிமையோடு காலை வாரி விட்டு சிரிக்க வைக்கிறதுல இவங்க தான் பெஸ்ட்.

அதிரா, ஹேமா - பேரை சொன்னதுமே சிரிக்க வைக்கும் அளவுக்கு நகைச்சுவை ராணி.

ஹைஷ் அண்ணா, பாபு அண்ணா - எல்லா பகுதியிலும் கருத்து சொல்லி, எல்லா விஷயத்திலும் ஆழ்ந்த அறிவும் உள்ளவர்கள். ஆல் ரவுன்டர்ஸ். ராஜாக்கள்.

சரஸ்வதி - நல்ல சுவையான சைவ குறிப்புகள் குடுப்பதில் ராணி.

சோனியா - கொஞ்சும் தமிழால் அரட்டையில் கலக்குறவங்க.

சந்தோ, சுபத்ரா - கூப்பிட்டதும் ஓடி வந்து பட்டிமன்ற பொறுப்புகளை ஏற்று கை குடுக்கும் ராணிகள்.

மனோ மேடம் - எல்லா வகை உணவிலும் கலக்கறவங்க.

ஜெயந்தி மாமி - பார்க்க சீரியஸா தெரிஞ்சாலும் அன்பான கலகலப்பான ராணி.

ரேணுகா - காகிதா வேலைப்பாடில் மட்டும் இல்லை, கணக்கிலும் ராணி.

யோகராணி - நல்ல நகைச்சுவைல, புதிர் கேள்விகள்ல ராணி.

கீதாச்சல் - குழந்தைகளுக்கான உணவுகளில் ராணி.

இருங்க இன்னும் பட்டியல் தொடரும்...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தளிகா - குழந்தை வளர்ப்பில் ராணி

சாய் கீதாலக்ஷ்மி - ஒரு வருடம் முன் எல்லாரையும் ஓட்டு ஒட்டுன்னு ஓட்டி அறுசுவையே கலகலப்பா அக்கின சூப்பர் ராணி.

அப்சரா, இளவரசி, மனோகரி, தேவா - பட்டிமன்றங்களில் வாதம் பண்றதுல ராணி.

மர்ழி, உமாராஜ் - பொலம்பல் ராணிகள். ;)

கூடவே திடீர்னு புயல் மாதிரி உள்ள வந்து அறுசுவை மொத்த கவனத்தையும் திருப்பி இருக்க ஷேக்.... புது ராஜா.

இவங்க மட்டும் இல்லை... இன்னும் ஏகபட்ட ராணிகள் அறுசுவையில் உண்டு.... பட்டியல் இன்னும் இருக்கு, நேரம் தான் இல்லை... என் மகன் அழைக்கிறான். நேரம் கிடைக்கும்போது வந்து மிச்சத்தை சொல்றேன். [ஒரு கேள்வி கேட்டா பக்கம் பக்கமா பதில் சொல்றன்னு திட்டுறது கேக்குது.... ஆனாலும் விட மாட்டோம்ல....]

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உங்க ஸ்டைலில் அழகா வந்து சொல்லிட்டீங்க.
யாரும் உங்களை திட்ட முடியுமா என்ன....
அப்படியே ஒரு காமெடியும் பண்ணிட்டீங்க போங்க.
அதாங்க இதுல போய் என் பேரையும் சேர்த்தீங்க பாருங்க அதை தான் சொல்லுறேன்.
பரவாயில்லை என்னை பற்றி சொல்லவில்லை என்றாலும் தப்பா எடுத்துக்க மாட்டேன் வனி.
நல்ல திறமை சாலிகள் இருக்கும் இடத்துல என்னையும் சேர்த்துட்டீங்களே....
உங்க நல்ல மனசுக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன்.ஆனால் சொல்லும் அளவுக்கு நான் இந்த அருசுவையில் பங்கெடுக்க வில்லை வனி சரியா....
ஓகே அடுத்த லிஸ்ட்டை கொடுங்க பார்ப்போம்.....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எல்லோருமே ஒவ்வொரு பிரிவில் அசத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.நான் இப்பொழுதுதான் வந்துள்ளேன்,அனைவரும் ஹீரோ,ஹீரோயின்ஸ் தான்.சாரி ஷேக் நீங்கள் மட்டும் ஹீரோ இல்ல.

nan puthiya varavu, yarai solvadhu koncham miranduthn poivitten enna sivadhu theriyaviilai innum konchanal pogattum nanum solgirean ok.

life is short make it sweet.

ஆஹா jaleelaஅக்கா உங்களை என்னால் எப்படி மறக்க முடியும்.........

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் ரிஷ்வானா.அஸ்ஸலாமு அலைக்கும்!எப்படி இருக்கிங்க?உங்களுக்கு எந்த ஊர்?உங்களை பற்றி தெரிஞ்சுக்கலாமா?உங்கள் வீட்டில் எல்லோரிடமும் நான் சலாம் சொன்னதாக சொல்லுங்க பா.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வனிதா, பென்ச் மேலே ஏத்திவிடறதிலே யாரு ராணி?:-))

அப்சரா... நிஜ்சமா தான் சொல்லி இருக்கேன்பா.... ஆனா பதிவு போட்ட பிறகு தோனுச்சு, அப்சரா'வை பேசாம பரோட்டா ராணி'னு சொல்லி இருக்கலாம்'னு.... ;) உண்மையில் இன்னொரு விஷயத்திலும் நீங்க ராணி.... மனதை தொடும் பின்னூட்டம் தருவதில். விட்டா கோச்சுவீங்கன்னு யோசிச்சிருந்தா பலரை விட்டுட்டனே... அவங்களாம் கோச்சுக்க மாட்டாங்களா??? எனக்கு அவங்களை பற்றி நிறைய தெரியாதுன்னு விட்டுட்டேன்... இன்னும் கொஞ்சம் நாள் போன எல்லாரை பற்றியும் எனக்கு தெரிஞ்சதை சொல்லுவேன். :)

மாலி... பென்ச் மேல ஏத்தும் விஷயத்தில் மட்டும் வனி தான் ராணி... ;) இப்ப மட்டும் இல்லை... எப்பவும் அறுசுவையில் அந்த ஒரு வேலை மட்டும் என்னோடது தான். இப்படி போட்டு குடுக்குறதுல அறுசுவைல இப்போதைக்கு நீங்க தான் ராணி. :D ஹிஹீ.

ஷேக் தம்பி... வாரது... சன் குடும்ப விருதுகள் மாதிரி நம்ம அறுசுவை குடும்ப விருதுகளை சொல்லிபோட்டு போறது... ஷேக் தம்பி செலவில் பாபு அண்ணா அவர் கையால் எல்லாருக்கும் ஒரு தங்க காசு பரிசா தருவாராம். ;) பின்ன... சும்மா வந்து ஓட்டு போடுவோமாக்கும்???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்