இட்லி அடித்தட்டு மட்டும் வேகாமல் மாவாக இருக்கிறது

என் தங்கை இட்லி ஊற்றினால் அடித்தட்டு மட்டும் வேகாமல் மாவாக இருக்கிறது, மேல் தட்டு நன்கு வெந்து இருக்கிறது என்கிறாள். அரிசி , உளுந்து அளவு எல்லாம் சரியாக தான் எடுக்கிறாள். சரியான நேரம் வேக வைக்கிறாள். பின் என்ன காரணம்?

நான் எபோதும் தனித் தனியாகவே தட்டுகள் வைப்பேன். அதாவது இரண்டு தட்டுக்களையும் ஒரே தடவை வைக்காமல் இருப்பது நலம். மேலே தட்டில் இருந்து தண்ணீர் கீழ் தட்டில் சிந்துவதால் இப்படி நடக்கின்றது. நேரம் கொஞ்சம் அதிகம் ஆகும் என்று பாராமல் இப்படி செய்வது நல்லது.
வாணி

வாணி சொல்வது போலத்தான் நானும் செய்வேன்.முதல் தட்டை அவிய வைத்து விட்டு, அடுத்த தட்டில் மாவை ஊற்றி ரெடியாக வைத்திருப்பேன்.
முதலாவதை எடுத்துவிட்டு அடுத்ததை உடனடியாக வைத்து விடுவேன்.இதனால் ஆவி வீணாக போவதில்லை.தவிரவும் மாவும் சீக்கிரம் வெந்து விடும்.
செல்வா, இந்த முறைப்படி உங்கள் தங்கையை செய்து பார்க்க சொல்லவும்.
ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இட்லி தட்டில் சரியான அளவு தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதிவந்தவுடன் அடித்தட்டு, மேல்தட்டு வைக்கவும்.

All is well

அடித் தட்டில் உள்ள இட்லிக் குழிகளின் நேர் மேலே, மேல் தட்டில் உள்ள இட்லிக் குழிகள் வருமாறு வைக்கக் கூடாது. கீழ்த் தட்டின் இட்லிகளின் மேல், மேல் தட்டில் உள்ள இடைவெளி பாகம் இருக்க வேண்டும். அப்போதுதான் மேல் தட்டில் இருந்து வேர்த்து வடியாமல் இருக்கும். இரண்டு தட்டு இட்லியும் ஒரே நேரத்தில்தான் வெந்து இருக்கும். சரியாக அட்ஜஸ்ட் செய்து வைக்காவிட்டால், கீழ் தட்டில் உள்ள இட்லி சிறிது சொத சொதவென்று நனைந்து விடும்.

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

இட்லி சட்டியில் தண்ணீர் அதிகமாக அளவுக்கு கொஞ்சம் இருந்தாலும் கொதிக்கும் போது அடித்தட்டில் படுவதால் அடித்தட்டு இட்லி மட்டும் சத சதவென இருக்கும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

பதில் அளித்த அனைவருக்கும் நன்றி. இட்லி சத சத என்று இல்லை , மாவாகவே இருக்கிறது என்கிறாள். தட்டு இடைவெளி சரியாக தான் வைப்பதாக சொல்கிறாள்.(She is newly married and now learning the basics in cooking) தற்போது ஒவ்வொரு தட்டாக வேக வைத்து எடுக்கிறாள். என் அம்மா அடுத்த மாதம் அவள் வீட்டுக்கு செல்கிறார்கள். அவர்கள் சென்று பார்த்தால் என்ன தவறு என்று தெரியும்.பதில் அளித்த அனைவருக்கும் நன்றி.

இது நிறைய பேருக்கு இந்த போல் இட்லி பிரச்சனை உண்டு.

1. அடித்தட்டு வேக வில்லைஎன்றால் அடித்ட்டில் மாவை ஊற்றவேண்டாம் , மற்ற தட்டுகளீல் ஊற்றி அவியுங்கள்.

2. மற்ற தோழிகள் சொன்ன மாதிரி, தண்ணீர் அதிகமாக ஊற்றி இருப்பீங்க,

3. இட்லி அவிக்கும் போது அடியில் தண்ணீரை நன்கு சூடு படுத்திவிட்டு, தட்டில் முக்கால் பாகம் அளவிற்கு ஊற்றி 7 நிமிடம் வேகவிட்டு. மேலும் இரண்டு நிமிடம் கழித்து திறக்கவும்.

பிறகு தண்ணீர் தெளித்து வடிய விட்டு, இட்லி எடுக்கும் கரண்டியால் எடுக்கவும்.

என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்