கண்கள் மற்றும் இமை பராமரிப்பு

இமை பராமரிப்புBeauty tips

முகம்

நம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை பிரதானமாக்கிப் புனையப்படுகின்றன. முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடியென இருக்கும் முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம். முகம் என்றதும் பொதுவான ஒரு உறுப்பாக கருதாமல் கண், புருவம், மூக்கு, கன்னம், உதடு, தாடை, நெற்றி, காது என்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் முகத்தின் அழகு வெளிப்படுகிறது. இந்த வாரம் கண்ணைப் பற்றி பார்க்கலாம்.

கண்கள்

"கண்களின் வார்த்தைகள் புரியாதா" என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.

Eyes care

பேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.

கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.

கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது அது தரமானதா, அதற்கு உபயோகப்படும் க்ளூ தரமானதா என்று பார்த்து வாங்குங்கள். இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.

கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.

Comments

தேவா madam,
உங்கள் குறிப்புகளை தொடர்ந்து படித்து வருகிறேன். இது தான் எனது முதல் பின்னூட்டம். கண்களை அழகாக மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறப்பான ஆலோசனைகளை கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி. எனக்கு ஒரு சந்தேகம். Pregnant ஆக இருக்கும் போது threading செய்து கொள்ளலாமா?
உங்கள் ஆலோசனை சொல்லுங்கள்.மேலும் ஒரு சந்தேகம், கண் இமைகள் உதிர்வதை தடுக்க முடியுமா?

அழகான கண்களுக்கு அதையும்விட அழகாக டிப்ஸ்...!
இந்த ஐலனர் போடும்போது கரையாமல் இருக்க த்ரமான வாட்டர்ப்ரூப் ப்ராண்ட்
சொல்லமுடியுமா?
நான் டவ் ஐலனர் யூஸ் செய்கிறேன்..அது மிகவும் லைட்டாக இருக்கு

அப்புறம் அலோவேரா ஜெல் அப்படியே பச்சையாக(raw aaga) யூஸ் பண்ணாலாமான்னு சொல்லுங்க

மெயில் அனுப்பியுள்ளேன்...நேரமிருக்கும்போது பதில் போட்டால் போதும்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹலோ தேவா அக்கா
உங்களோட இந்த பகுதி ரொம்பவே useful லா இருக்கு. ரொம்ப நன்றி. எனக்கு ஒரு டவுட். என்னோட கண்ணு நல்ல white டா இல்லாம லைட் எல்லோ கலர் ல clear ரா இல்லாம இருக்கு அதுக்கு எதாச்சு treatment பண்ணலாமா? எனக்கு நல்ல white டா இருக்கணும்னு ஆசை. ப்ளீஸ் எனக்கு பதில் சொல்லுங்க உங்க ப்ரீ டைம் ல...

லதாவிநீத்குமார்.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

தேவா மேடம் எப்படி இருக்கீங்க?வீட்டில் அனைவரும் நலமா?
ரொம்ப அழகாக கண்களின் பராமரிப்பை சொல்லி இருக்கின்றீர்கள்.
படிக்கும் போதே ஆசையாக் இருக்கின்றது.
இந்த கருவளையம் குடும்பத்தில் நம் தாய் தந்தையருக்கு இருந்தால் கூட வருமல்லவா...?(ஒரு சந்தேகம்தான்).என் அப்பாவிற்க்கு நல்லா அச்சா தெரியும் அளவிற்க்கு இருக்கும்.அதே போல் நாள் செல்ல செல்ல என் அக்கா ஒருவருக்கும் வந்து விட்டது.அவர் நீங்கள் சொல்லியது போல் உருளைகிழங்கு சாறு தேய்ப்பது்,வெள்ளரி சாறு தேய்ப்பது என ஏதாவது ட்ரை பண்ணி பார்க்கும்..ஆனாலும் பலனில்லை.
இப்போது மூன்று வருடங்களாக என்னையும் அது தொத்தி கொண்டது.ஆனால் நான் “அக்காவே முயர்ச்சி செய்து நொந்து போச்சு நாம என்ன செய்ய...”என எண்ணி எதையும் முயற்ச்சி செய்யவில்லை.
ஆனால் இப்போது இங்கே (துபாயில்..)மால்களில் கார்னியர் ஐ ரோலர் பற்றி விளம்பரம் செய்கிறார்கள்.எனவே ஒரு சிறு நப்பாசை உபயோகித்து பார்க்கலாமான்னு.இதோ உங்கள் கண்கள் பற்றிய பகுதி பார்த்ததும் உங்களிடமே கேட்டு விடலாமென ஓடி வந்திருக்கேன்.
நேரம் இருக்கும்போது உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்.அது போதும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நலமா?

தலைமுடி பராமரிப்பில்,குழந்தைகளுக்கு ஹேர் மாய்ட்சரைங்க் லோஷன் வாங்குவது பற்றி கேட்டிருந்தேன்...அதுபற்றி முடியும்போது சொல்லுங்கள்.

பிறகு மற்றுமொரு சந்தேகம்,குழந்தைகளுக்கு ஜான்சன்ல ஷாம்பூ வித் கண்டிஷனர்/தனியாக கண்டிஷனரோ கிடைப்பதில்லை..என்ன உபயோகிக்கலாம்?

கார்னியர் under eye dark cicle lightnening cream வாங்கினேன்.அது தினமும் உபயோகப்படுத்தலாமா?அப்போதுதான் எஃபெக்ட் இருக்குமா?இல்லை அதிக எபெக்டிவ் என்று வெளியில் செல்லும்போதுதான் உபயோகப்படுத்தவேண்டுமா?

fadeout cream டேரக்டா ஃபௌண்டடேஷனுக்கு முன் அப்ளை பண்ணலாமா?இல்லை fairness cream use பண்ணிய பிறகு போடணுமா?

மன்னிச்சுக்கங்க...சில்லி டௌட்ஸ் நிறைய வருது......தவறாக எடுத்து கொள்ள மாட்டீங்கன்னு நம்பறேன்..
:-)

நிறைய சந்தேகங்கள் இருக்கு...எல்லாம் ஓரே நேரத்தில் எப்படி கேட்பது என்ற தயக்கத்தில் இப்போது நிறுத்தி கொள்கிறேன்.

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

தலைமுடி பற்றிய முந்தைய பதிவிலேயே நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இருக்கிறது. கருவுற்றிருக்கும்போது த்ரெட்டிங் செய்ய வேண்டாம். விளக்கமான பதிலுக்கு முந்தைய பதிவினைப் பாருங்கள். கண் இமை முடி உதிராமல் இருக்க தினமும் உறங்கும் முன் இமையின் வேர்க்கால்களில் படுமாறு விளக்கெண்ணெய் தடவுங்கள். இதுவே சிறந்த பல தரக்கூடிய மருந்து. மஸ்காரா, ஐ லைனர் போன்றவைகளிலேயெ இப்போது முடியை பாதுகாக்கும் தயாரிப்புகள் வந்துவிட்டன. அதனை லேபிள் பார்த்து உபயோகியுங்கள். கண்ணை கசக்காமல், தினமும் உறங்கும் முன் ஒரு முறை கழுவுங்கள்.

எப்படி இருக்கீங்க? உங்க மெயிலைப் படிச்சுட்டேன். பதில் அனுப்பதான் தாமதமாகுது. சாரி. கொஞ்சம் ஃபீவரிஷா இருக்கறதால நாளைக்கு ஆபிஸ் மட்டம்தான்னு நினைக்கிறேன். இப்பக்கூட ஒரு மெசேஜ் அனுப்பினேன். உங்களுக்கு கிடைச்சுதான்னு தெரியல. நீங்க ரெவ்லான் ப்ளாக்கி ப்ளாக் ஐலைனர் யூஸ் பண்ணுங்க. எவ்வளவு நேரமானாலும் கரையாமல் இருக்கும். சிலர் உரித்தெடுக்கற மாதிரி வாட்டர்ப்ரூப் ஐலைனர் யூஸ் பண்ணுவாங்க. அது நேச்சுரல் லுக் கொடுக்காது. தனியா பள பளப்பா தெரியும். இந்த ரெவ்லான் ஷேட் நல்லா இருக்கும். அலோவேராவை ப்ரெஷ்ஷா எடுத்து உபயோகிக்கலாம். அது மிகவும் சுத்தமானது மட்டுமில்லாம நல்ல பலனையும் கொடுக்கும். காலில் ஆணி போன்ற பிரச்சணை உள்ளவர்களுக்கு கூட இப்படி பிரெஷ்ஷான அலோவேராவைத்தான் வெச்சு கட்டுவாங்க. அதோட பிரெஷ்ஷா இருக்கும்போது அது நல்ல ஒரு சன் டான் ரிமூவராவும் செயல்படும்.

கண்ணைப் பத்தி நீங்க சொல்லி இருக்கறது படிச்சு எனக்கு ஆச்சரியம். ஏன்னா, எனக்கும் சின்ன வயசில் இப்படி வெள்ளையா இருந்த கண், காலேஜ் படிக்கும்போது அத்தனை வெள்ளையா இல்லாம இருக்குதேன்னு, நானும் என் கஸின்கிட்ட கேட்டேன். அவங்க கண் டாக்டர். அவங்க சொன்னது இதுதான். கண் அப்படி வெள்ளையா இருக்கறதைவிட கொஞ்சம் நிறம் கம்மியா இருக்கறதுதான் நார்மலாம். நல்லதும் கூடன்னு சொன்னாங்க. அதைக் கேட்டு சமாதானம் ஆச்சு. இனி கண்ணை மறுபடியும் வெள்ளை நிறமாலாம் மாத்த முடியாது. ஆனால் நல்ல தெளிவா வெச்சுக்க பன்னீர் உதவும். பஞ்சில் நனைச்சு வெச்சா டயர்னெஸ் போகும். அதோட டீ பேக்கும் பலன் தரும். நல்ல தூக்கம் , பன்னீர் அப்ளிகேஷன் உங்க கண்ணை தெளிவா அழகாக்கும். மேலும் கண்ணின் உள்ளே பளபளப்பு குறைந்து , வறண்டு காணப்பட்டாலோ, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்க்க நேரிட்டாலோ, Murine Artificial Tears வாங்கி அதில் குறிப்பிட்டுள்ள படி 2 அல்லது 3 சொட்டு கண்ணில் விட்டு கொஞ்ச நேரம் இடமும் வலமுமா கண் முழியை அசையுங்க. இது என் கணவர் அவர் பேஷண்டுகளுக்கு ப்ரிஸ்க்ரைப் செய்வதாய் சொன்னது. இதைத்தான் நான் அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்க்கற அன்னைக்கு செய்யறேன். கண்ணில் உறுத்தல் இல்லாமல் கண் பளிச்சுன்னு ஆகுது.

எப்படி இருக்கீங்க? பரம்பரையா கருவளையம் வர்றது உண்டுன்னாலும் அதை முதலில் கன்பர்ம் பண்ணிக்குங்க. கருவளையம் போக எந்த ப்ராடெக்ட் உபயோகிக்கிறீர்களோ அதனை நிறுத்தாமல் தொடர்ந்து (கருவளையம் போகும்வரை) உபயோகிக்க வேண்டும். நடுவில் வேறு ஒரு ப்ராடெக்டுக்கு மாறிவிடக்கூடாது. தொடர்ந்து இரு வேளை காலை இரவு என்று மிகவும் சிறிய அளவில் க்ரீமை எடுத்து தடவுங்கள். கண்ணுக்கு அடியில் எப்போதுமே க்ரீம் இருத்தலும் கூடாது. எனவே இரு வேளை மட்டும் போதும். அதுவும் கூட 3 மணி நேரம் கழித்து சோப் போடாமல் கழுவி விடுங்கள் அல்லது பன்னீர் கொண்டு துடைத்து விடுங்கள். நேச்சுரலான ரெமெடி என்றால் பால் ஆடை அல்லது தயிர் நல்ல பலனைத் தரும். ஆனால் நாளாகும். குடும்பத்தினரிடையே இருக்கும் உணவு, தூக்க பழக்க வழக்கமும் ஒரு காரணமாகிறது. எக்காரணம் கொண்டும் ஸ்க்ரப்பினை கண் அருகே உபயோகிக்காதீர்கள். கார்னியரைக் காட்டிலும் உங்களுக்கு ஓலே ஜெல் சரியான தீர்வாக இருக்கும். மேக்கப் போடும்போது கன்சீலர் கொண்டு கருவளையத்தை மறைத்து விடலாம்.

ஆனால் இதையெல்லாம் செய்யத் தொடங்கும் முன்பு ஒரு கண் மருத்துவரிடமோ அல்லது தோல் மருத்துவரிடமோ சென்று உங்களுக்கு பரம்பரை காரணமாக கண்ணிற்கு அடியில் உள்ள தோல் மிகவும் மெலிதாக இருக்கிறதா, கருவளையம் அதனால் ஏற்பட்டதுதானா என்று தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களே கூட நல்ல ஒரு மருந்தினை பரிந்துரைக்க கூடும். ஏனென்றால் கண் அடியில் உள்ள தோல் மிகவும் மெலிதானதாக இருந்தால் ஏற்படும் கருவளையத்தை மறைக்க முடியுமே தவிர நீக்க முடியாது.

உங்க பொண்ணுக்கு இப்போதிருந்து ஹேர் மாய்ச்சுரைசிங் லோஷன் தேவையில்லை என்பதே என் அபிப்ராயம். குழந்தைகளின் தலைமுடி அத்தனை சீக்கிரம் வறண்டு விடாது. மீன், பாதாம் போன்றவற்றை அதிக அளவில் கொடுத்தாலே போதும். ஜான்சன் பேபி ஷாம்பூவில் கண்டிஷணருடன் சேர்ந்த ஷாம்பூ தேடுவதைவிட(அது சில நாடுகளில்தான் கிடைக்கிறது), ஜான்சன் ஜூனியர் ஷாம்பூவில் வித் கண்டிஷருடன் கிடைப்பதை வாங்குங்கள். இந்தியாவிலேயே ஜூனியர் ஷாம்பூக்கள் 4 வெரைட்டியாக கிடைக்கிறது. ஜான்சன் கிடைககவிட்டால் Huggies, Cussons லும் உபயோகிக்கலாம்.

மேலே அப்சராவுக்கு சொல்லி இருப்பதைப் போல ஐ க்ரீம் தினமுமே உபயோகிக்க வேண்டும். அண்டர் ஐ க்ரீம் போட்டுக் கொண்டு வெளியில் செல்வது நல்லதல்ல. எளிதாக அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வீட்டில் இருக்கும் நேரங்களே உகந்தது. அதே போல பேட் அவுட் க்ரீம் இரவில் அல்லது சூரிய வெளிச்சம் படாமல் இருக்கும்போது உபயோகிக்க வேண்டிய க்ரீம். இது பேர் அண்ட் லவ்லி போன்று மேக்கப் போடும் முன் உபயோகிக்க கூடிய க்ரீம் இல்லை. ஒரு வித மருந்து என்று சொல்லலாம். வெயிலில் போட்டுக் கொண்டு சென்றால் முகத்துக்கு தீங்குதான் நேரும்.

எத்தனை கேள்வி வேணும்னாலும் கேளுங்க. தயக்கம் எதுக்கு? எல்லாரும் தெரிஞ்சக்கணும்னு தானே தனி செக்ஷனே அழகுக்குறிப்புக்கு இருக்கு. எனக்கு ஒண்ணும் சிரமம் இல்லை. நிச்சயம் தப்பாலாம் நினைச்சுக்க மாட்டேன். அதனால இனிமே தயக்கமெல்லாம் வேணாம்.

ஹாய் தேவா! எப்படி இருக்கீங்க?? இப்ப ஒரு சில மாதங்களாக திடீர்ன்னு முகம் கருத்துவிட்டது.... நானும் என்னவோ பூச்செல்லாம் வாங்கி பூசிட்டேன்... வர வர கோல்டன் பிரெவுன் ( அப்படியான்னு கேள்வி கேக்க கூடாது) கலர்ல இருந்த நான் டார்க் சாக்லெட் பிரவுனியா மாறிட்டேன்... நிச்சயமா கொஞ்சம் பிரச்சனை ஸ்விமிங் போனது பிளஸ் ஹார்மோன்... இதுக்கு கொஞ்சம் மாத்த என்ன செய்ய...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா, எப்படி இருக்கீங்க? முகத்தோட கலரை மறுபடியும் கொண்டு வந்துடலாம். தினமும் கேரட் ஜூஸ் சாப்பிடுங்க. முகத்துக்கு பப்பாளி சாறு, உருளைகிழங்கு சாறு அல்லது அலோவேரானு எதாவது ஒண்ணை குளிக்கறதுக்கு முன்னாடி தடவுங்க. நைட் பேட் அவுட் போதும். கொஞ்ச நாளில் சரியாயிடும். ஆலிவ் ஆயில் ஒத்துக்கும்னா மத்த சாறுகளுக்கு பதிலா அதையே குளிக்கறதுக்கு முன்னாடி முகத்தில் தடவலாம். வாரம் இரண்டு முறையாவது தயிர் கலந்த பேக் போடுங்க. இப்ப நான் கொஞ்ச நாளா Palmers ஆலிவ் பட்டர் முகத்துக்கு லேசா அப்ளை பண்ண ஆரம்பிச்சேன். நல்ல ரிசல்ட் தெரியுது. எனக்கு ஆலிவ் ஆயில் அலர்ஜி ஆயிடும். ஆனால் இந்த ஆலிவ் பட்டர் ஒத்துக்குது. இப்பலாம் Base ஆ அதைத்தான் யூஸ் பண்றேன். ஸ்கின்னும் சரி ஸ்மூத் ஆகுது. உடம்புக்கு சூப்பர் சாய்ஸ்னு சொல்லணும். அத்தனை சாப்ட்டா ஆக்குது. ஸ்கின் க்ளோவும், கலரும் நல்லா கொடுக்குது. ட்ரை பண்ணிப் பாருங்க.

ஹாய் தேவா மேடம் நலமா...?
எங்களை போன்றவர்களின் சந்தேகத்திற்க்கு அழகான முறையில் பதில் சொல்கின்றீர்கள்.அதற்க்கு என் மனமார்ந்த நன்றிங்க.
நான் ஏதும் மேக்-அப் என்று ஏதும் போடுவதில்லை.என்சாண்ட்டர் பவுடர் மட்டும் தான் போடுவேன்.
இப்பதான் இரண்டு மாத காலமாக பாண்ட்ஸ் க்ரீம் உபயோகபடுத்தி பார்த்தேன்.
என் முகத்தை பார்ப்பவர்கள்(என் கணவர் உள்பட..))ஏன் திடீர்னு முகம் கருத்து போய் உள்ளது என்றும் கேட்க தொடங்க அதை நிறுத்தி விட்டு போன பதிவில் உங்களிடம் சொன்னது போல் ஃபேரவர் ஃபேஸ்வாஷ் மற்றும் க்ரீம் உபயோகபடுத்த தொடங்கி உள்ளேன்.மற்றபடி நீங்கள் சொல்லி இருப்பது போல் படுக்க போகும் முன் ஒரு முறை முகம் கழுவி விட்டு படுக்கிறேன்.
பார்ப்போம் நீங்கள் சொல்வது போல் நிரந்தரமாக போக கூடியதாக இருக்கலாம்.
உங்களின் அடுத்த தலைப்பினையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் deva mam
உங்கள் அழகு குறிப்பு பல படித்துள்ளேன்.எனக்கு பல வகையில் மிகவும் உபயோகமாக இருந்துள்ளது.இப்போ குழந்தை பிறந்தவுடன் அவள் அழகுமீதுதான் அதிக கவனம் செல்கிறது.என்னுடைய கேள்விக்கு வருகிரேன்.என் பொண்ணு இப்போ 10 மாதம் நடக்கிறது 5 மாதத்தில் துபாய் வந்தேன் அதற்கு முன்வரை நல்லா கலரா இருந்தாள் இங்கு வந்து கலர் கொஞ்சம் கொஞ்சமா குறைந்துள்ளது.என் மகளின் பழைய நிறம் வர எதாவது டிப்ஸ் இருக்கா சொல்லுங்கள்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

தேவா... கண்ணை சுற்றி வரும் கருவளையம்'கு நீங்க சொன்ன வைத்தியம் என் தங்கைக்கு ரொம்ப பயன்படும். முயற்சி செய்ய சொல்றேன். வீட்டில் செய்துக்க கூடிய நல்ல நல்ல குறிப்பு குடுக்கறீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேவா மேடம், உங்கள் பதிவினை பார்த்தேன். உங்கள் பதிலுக்கு நன்றி. ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கமாக விரிவாக நீங்கள் பதில் அளிப்பது அருமை. வாழ்த்துக்கள்.

உங்க பதில இன்னிக்கு தான் பாத்தேன்.சாரி ரொம்ப நாள் கலுச்சு பாத்ததுக்கு. உங்க பதில் பாத்து ரொம்ப சந்தோசம். உடம்புக்கு முடிலன்னு சொன்னீக இப்ப எப்பிடி இருக்கு? நான் எப்பவுமே கம்ப்யூட்டர் பாக்கற அது கூட காரணமா இருக்கும்னு நெனக்கரன் நீங்க சொன்னதுல இருந்து. எனக்கு டைம் ஒதுக்கி பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
லதாவிநீத்குமார்.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

எப்படி இருக்கீங்க? உங்க பொண்ணோட நிறம் குறைஞ்சுடுச்சுன்னு எழுதி இருக்கீங்க. எல்லா குழந்தைகளுமே பிறந்த போது இருந்த நிறத்தில் எப்போதும் இருப்பதில்லை. கவலை வேண்டாம். நீங்கள் நல்ல பேபி ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பாட்டுங்கள். குளிக்க வைக்க பேபி சோப் அல்லது பேபி லிக்விட் சோப் உபயோகியுங்கள். அதிக நறுமணமுள்ள எதுவும் உபயோகிக்காதீர்கள். லாவண்டர் கூட குழந்தைகளின் நிறத்தை குறைக்கும். தண்ணீர் மாற்றம் கூட நிறம் குறைய காரணமாக இருக்கலாம். குளித்த பிறகு பேபி லோஷனை தடவி விடுங்கள். இது தவிர தினமும் நான் என்னுடைய குறிப்பில் கொடுத்திருக்கும் பொடியினைக் கூட தயாரித்து உபயோகிக்கலாம். நல்ல நிறம் கொடுக்கும்.

அன்பு தேவா

தொடர்ந்து உங்கள் பதிவுகள் படிச்சுட்டு இருக்கேன். கண்களின் நிறம் பற்றி நீங்க சொல்லியிருக்கும் விளக்கத்துக்கு நன்றி. காரணம் என் கணவர் தன்னுடைய கண்களின் நிறம் பற்றி எப்போதும் கவலைப் படுவார். இனி, நானும் பன்னீரை பஞ்சில் நனைத்து வைக்கும் முறையை முயற்சி செய்கிறேன்.

கண்களின் அடியில் கருவளையத்துக்கு நீங்க முன்னாலேயே சொன்ன மாதிரி, கார்னியர் புராடக்டை என் மகளை உபயோகிக்க சொன்னேன். நல்ல பலன் தெரிகிறது. நன்றி தேவா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் தேவா மேடம் எப்படி இருக்கீங்க? வீட்டிலேயே கண் மை தயாரிக்கறது எப்படினு தெரிஞ்சா சொல்லுங்க மேடம்.

ஹாய் வினோஜா, வீட்டிலேயே கண்மை தயாரிப்பது கொஞ்சம் நேரம் எடுக்கிற வேலை. ஆனால் அதற்கான பொருட்கள் எளிதாக கிடைக்கும். இதில் இரண்டு மூன்று வகைகள் இருக்கின்றன. என் பாட்டி கற்றுத்தந்த கண் மை செய்முறைகள் இவை.

கய்யாந்தரை(கரிசலாங்கண்ணி) என்ற செடியின் இலைகள் நம் ஊரில் எளிதாக கிடைக்கும். அந்த இலைகளை எடுத்து நன்றாக அரைத்து சாறு பிழிந்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளை காட்டன் துணியினை விளக்குத் திரிக்கு கிழிப்பதுப் போல் கிழித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கய்யாந்தரை இலையின் சாற்றில் வெள்ளைத் திரி துணியினை நன்றாக நனைத்து ஒரு மணி நேரம் ஊற விட்டு பிறகு காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சாறு அதிகமாக எடுத்துவிட்டால் காயவைத்த துணியினை மீண்டும் சாற்றில் நனைத்து காயவைக்கலாம். ஒரு விளக்கில் முக்கால் பாகம் விளக்கெண்ணெயும், ஒரு பாகம் நல்லெண்ணையும் கலந்து எடுத்துக் கொண்டு, சாற்றில் ஊறவைத்து காயவைத்த திரித்துணியினைப் போட்டு சிறு தீயில் விளக்கினை எரிய விட வேண்டும். இப்போது சுத்தமான ஒரு கிண்ணத்தினை விளக்கின் மீது கவிழ்த்து வைத்துவிடுங்கள். முழுவதுமாக திரி எரிந்து முடியும்வரை கிண்ணத்தை எடுக்க கூடாது. திரி முழுதும் எரிந்து முடிந்தவுடன், கிண்ணத்தை எடுத்துப் பார்த்தால் கிண்ணத்தின் உட்புறம் மை போன்று படிந்திருக்கும். இந்த மைப்பொடியை சுரண்டி எடுத்து அதனுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து மை பதத்திற்கு குழைத்து எடுத்துக் கொண்டால் கண்மை தயாராகி விடும். இதில் ஒவ்வாமை எதுவும் ஏற்படாது. கண்களுக்கும் இந்த மை மிகவும் நல்லது.

அடுத்த செய்முறை மிகவும் சுலபம். 2 டேபிள் ஸ்பூன் சின்ன ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் வாணலியில் இதனை நன்றாக கருக்கும் வரை வறுக்க வேண்டும். நன்றாக வறுபட்ட பிறகு ஜவ்வரிசியை நன்றாக பொடி செய்ய வேண்டும். நன்றாக ஜவ்வரிசி வறுபட்டிருப்பதால் கரண்டியால் நொறுக்கினாலே பொடியாகிவிடும். இப்படி பொடியாகிவிட்ட ஜவ்வரிசியில் 4 ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி, குழம்பாக கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி, இந்தக் கெட்டி குழம்பினை ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து, ஆற விடுங்கள். நன்றாக திடப்பொருளாகிவிடும்(Solid). தேவையானபோது விளக்கெண்ணெய் தொட்டுக் குழைத்து மையாக உபயோகிக்கலாம். ஆனால் இந்த முறையில் செய்யும் மையை அழிப்பது கொஞ்சம் தொல்லைப் பிடித்த வேலை. நீண்ட நேரம் அழியாமல் இருக்கும். அழிப்பதற்கு தேங்காய் எண்ணெயில் பஞ்சை தொட்டு, மையின் மேல் தடவி அழிக்க வேண்டும். குழந்தைகளுக்கு பொட்டு இடவும் இந்த மையினை உபயோகிக்கலாம்.

ஹலோ அக்கா,

நான் புதிய உறுப்பினர். எனக்கு புருவம் ட்ரிம் பண்ண சில நாட்களிலேயே வளர்ந்து விடுகிறது. இதை தடுக்க என்ன செய்யலாம். பதில் சொல்லுங்க

அன்புடன்,
தமிழ் செல்வி

தேவா....

நல்ல பதிவுகள்..நன்றி.உங்கள் தொகுப்புகளை பார்த்து ஒவ்வொரு வீட்டிலும் ப்யூட்டிஷியன்கள் உருவாகுகிறார்கள். ;-)
கண்களுக்கு மை அல்லது பென்சில் பயன்படுத்தினால் கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுவத் ஏன்? எவ்வாறு போக்க வேண்டும்?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்களுக்கு இருப்பதை ப்ராப்ளம் என்று சொன்னால் இங்கே நிறைய பேர் அடிக்கவே வந்துடுவாங்க. உங்க பிரச்சணைனு நீங்க சொல்றது எனக்கும் உண்டு. நானும் உங்களை மாதிரிதான் சொல்லுவேன். எனக்கு தெரிஞ்சவங்களிலேயே ஆஸ்திரேலியாவில் நிறைய பேருக்கு புருவத்தில் முடி இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. சொன்னால் உடனே சண்டைக்கு வந்துடுவாங்க. இப்படி உடனே புருவம் வளர்றது நம்ம பரம்பரை வழியாவும்கூட வரலாம். மாதம் ஒரு முறை மட்டும் ப்யூட்டி பார்லர் சென்று ட்ரிம் செய்து கொண்டு வாரம் ஒரு முறை நீங்களே பிளக்கர், த்ரெட் கொண்டு அதிகப்படியான முடிகளை நீக்கி விடலாம். எனக்கு நானே த்ரெட்டிங் செய்து கொள்வதால் வாரம் ஒரு முறை 5 நிமிடத்தில் புருவத்தை சரி செய்து விடுவேன். எப்போதுமே ஒரே ஷேப்பில் எக்ஸ்ட்ரா முடிகள் இன்றி இருக்கலாம். ஆனால் உங்களுக்கு தானாக எடுக்க தெரியாவிட்டால் த்ரெட்டிங் முடியாது. பிளக்கர்தான் சரியான சாய்ஸ். பிளேட் மட்டும் வேண்டாம்,. அது சருமத்தையும் பாழ் பண்ணிவிடும். வயதான பிறகு சருமம் முரடாக தெரியும். முடிகளும் அழகாக வளராது. ஹேர் ரிமூவிங் க்ரீமும் உபயோகப்படுத்த வேண்டாம். சிலர் வேக்சிங் ஸ்ட்ரிப்பை புருவ ஷேப்பில் வெட்டிக் கொண்டு அதனைக் கொண்டு முடியினை நீக்குவார்கள். ஆனால் அதற்கும் பழக்கம் இருக்க வேண்டும். முடிகளை நீக்கும்போது ஷேப்பை மாற்றிவிடாமல் எக்ஸ்ட்ராக்களை மட்டும் கவனமாக நீக்குங்கள். எக்காரணம் கொண்டும் மேல் பக்க புருவத்தில் அதிக முடிகளை எடுத்துவிடாதீர்கள். பிறகு வில் போன்ற புருவம் போய் தட்டையாக தோற்றமளிக்கும். முதலில் புருவத்தின் கீழ்ப்புறமாக முடிகளை நீக்குவதுதான் சரியான முறை.

உங்களோட பாராட்டுக்கு ரொம்ப நன்றி. எல்லா பிரிவிலுமே ரொம்ப உற்சாகமா எல்லோரையும் ஊக்கப்படுத்தி பதிவுகள் போடறீங்க. ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம் இது.

உங்கள் கேள்விக்கு பதில்,பென்சில் அல்லது மை உபயோகிப்பதால் கண்ணில் கருவளையம் வராது. நாம் உபயோகிக்கும் பென்சில்கள் நல்ல பிராண்டாக இருந்தால் போதும். கண்ணில் போட்ட மை அதிக எண்ணெய்ப் பசையால் வழிந்தால் மட்டுமே கண்ணுக்கு அடியில் கருப்பாக இருக்கும். கண் கருவளையத்திற்கு ஓலே அல்லது கார்னியர் அண்டர் ஐ க்ரீம் போதும். அப்ளை செய்யும் முறையை மேலே உள்ள பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். கண்ணில் போடும் ஐலைனர் அல்லது மை வழிந்து கருப்பாக தோற்றமளித்தால் ரெவ்லான் அல்லது லோரியலில் Kohl பென்சில் வாங்காமல் ஐ லைனர் பென்சில் என்று இருப்பதை வாங்கி உபயோகப்படுத்துங்கள். Kohl பென்சில்கள் மை போன்றே அப்ளை செய்ய எளிதாக இருக்கும். ஆனால் எண்ணெய்ப் பசையுள்ள சருமத்துக்கு சில சமயம் அடியில் கருப்பாக கலைந்துவிடும். ஒரு சின்ன பட்ஸ் கொண்டு பவுடர் கோட்டிங் அதன் மேல் மிக லேசாக கொடுத்தாலும் கூட அழியாமல் நீண்ட நேரம் இருக்கும். ரிமூவ் செய்ய ஐ மேக்கப் ரிமூவர் அல்லது எண்ணெய் (விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்) உபயோகியுங்கள். இதில் சந்தேகம் எதுவும் இருந்தால் கேளுங்கள்.

ஹாய் தேவா..

உங்களை பாராட்டினால் நீங்கள் என்னை கூறுகிறீர்.உண்மையாக இதை பொன்று தொகுப்புகளை கொடுப்பதுதான் பாராட்ட தகுந்த விஷயம்.

உங்கள் பதில் பயனுள்ளதாய் இருந்தது.மிக்க நன்றி தேவா அவர்களே. எனக்கு மை போட ஆசை.ஆனால் கருப்பாகும் எனக் கூறியதால் போடுவதில்லை.இனி பயன்படுத்த போகிறேன் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்க டிப்ஸ் சூப்பர். வாழ்த்துக்கள்.......

முகத்தில் சோப் உபயோகப்படுத்த வேண்டாம் என என் தோழி சொல்கிறாள்.
அதனால் முகத்திற்கு மட்டும் பேஸ்வாஸ் யூஸ் பண்றேன்.
அவள் சொன்னது சரியா?

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹலோ அக்கா,

ரொம்ப நன்றி உங்க பதில்க்கு.
நான் உங்க டிப்ஸ் follow பண்றேன். என் தோழிக்கு கீழ் இமையில் சுருகன்களாக இருக்கு அத எப்படி சரி பண்றது? அவ முன்னாடி கண்ணாடி போட்ட்ருந்தா இப்ப லென்ஸ் தான் யூஸ் பண்றா.

அன்புடன்,
தமிழ் செல்வி

வுங்கள் குறிப்புக்கள் மிகவும் அருமை.நான் அருசுவைக்கு புதியவள். நான் மாநிறமாக இருப்பேன் .எனக்கு எந்த shadil fondation மற்றும் பவுடர் use செய்யவேண்டும். எந்த brand use செய்தால் skinkku நல்லது.என்மகளுக்கு வயது 8 . பிறந்த கொஞ்சநாள் வரை நல்ல நிறமாக இருந்தாள்.பிறகு கருத்துவிட்டாள்.alive oil use செய்து மசாஜ் செய்து கடலைமாவால் தேய்த்து குளிப்பட்டுவேன். இப்படி தொடர்ந்து செய்தேன். கொஞ்சம் கலரானாள்.இப்பொழுது schoolkku சென்ற பிறகு மீண்டும் கருத்துவிட்டாள்.நாங்கள் ஆந்திரா வில் இருக்கிறோம். லீவில் தமிழ் நாடு செல்வோம் அப்பொழுது இன்னும் மோசமாகி கண்ணக்கறேல் என்று ஆகிவிடுவாள். pearssoap use செய்கிறேன்.குழந்தைகளுக்கு எந்த சோப்பு use செய்யலாம்.என் மகள் கலராக வழிசெல்லுங்கள்.

நான் இதுவரை ப்ளீசிங் செய்ததில்லை. சண்டே நான் ப்ரூட் பேசியல் செய்தேன். parlouril ப்ளீச் பண்ணிடு பேசியல் செய்தால் நல்லது எப்பெக்டா இருக்கும்னு சொன்னங்க. எனக்கு ப்ளீசிங் பண்ண பயம். நீங்க உங்க அட்வைஸ் சொல்லுங்க. ரெண்டுமே பண்ணனுமா? ப்ளீசிங் பண்ணிடு பேசியல் பண்ண தான் dirts clear ஆகும்னு சொன்னங்க.பேசியல் பண்ண பிறகு முல்தானி மட்டி பாக் போட்டாங்க. எனக்கு facela பொறி பொறியா lighta வந்துச்சு. என்ன பண்ணலாம். நான் பேசியல், ப்ளீச்கு புதுசு உங்க டிப்ஸ் சொல்லுங்க எனக்கு?