கவிதை தொகுப்பு - கவிதா, கவிஞர் ஷேக், மாணிக்கவள்ளி

தனிமையில் நான்..

காதலாகி கசிந்துருகி
இருந்த நாட்கள்
கனவாய் ஆகிப்போனது எனக்கு..
அன்பும் காதலும் கரைந்ததால்
கண்ணீரில் கரைகின்றன நாட்கள்

லேசாய் முகம் வாடினால் கூட
துடித்துப்போன நீ
இன்று கண்ணீர் விட்டு அழுதாலும்
கண்டும் காணாமல் போகிறாய்..

என் காதலில் நீயும்
உன் காதலில் நானும் மூழ்குவோம்
என்று நானிருக்க..
நீயோ கணினியில் மூழ்கிப்போனாய்..!

ஏதாவது பேசேன் என்று கெஞ்சினாய் அன்று..
வார்த்தைகளை தேக்கி வைத்து
நான் இன்று காத்திருக்க..
கேட்க காதுகளற்று போனாய்.

வாய் மூடி மௌனியாய் இருந்ததால்
கோபத்தில் இருக்கிறேன் என்று தள்ளிப்போனாய்..
நகரம் முழுக்க மனிதர்கள் இருந்தும்
யாருமற்ற தனிமையில் நான்.....!!

- கவிதாசிவகுமார்.

ரசனை

அது வானம்
மருதாணி வைத்தெடுத்த
மாலை நேரம்
பறவைகள் நேர்கோட்டில்
பறக்க பயிற்சி எடுக்கும் காலம்
ஒற்றை நிலவு தேவதையைச் சுற்றி
எத்தனை நட்சத்திர காவலாளிகள்.!
தேவதை உரசி செல்வதற்கும்
உறங்குவதற்குமா இத்தனை
மேக மெத்தைகள்?
அந்த தேவதையை இதுவரை
எத்தனைபேர் தரிசித்திருப்பீர்கள்?
ஓ..
நீங்கள் பணம் கொட்டினால் மட்டுமே
வானம் பார்ப்பவர்கள் ஆயிற்றே..

- கவிஞர் ஷேக்

 
சமத்துவம்

நான் ஒரு சமத்துவக்காரன்
ஞாயிறு அன்று கிறிஸ்த்துவ ஆலயம்
செவ்வாயன்று அம்மன் கோவில்
வெள்ளியன்று மசூதி..
எல்லா மதமும் எனக்கு சம்மதம்
ஏனெனில்
நான் ஒரு பிச்சைக்காரன்.

- மாணிக்கவள்ளி அமர்நாத்

மறக்க நினைக்கிறேன்

மறக்க நினைக்கிறேன்.
உன்னை அல்ல..
உன்னிடம் பேசாமல்
தவறவிட்ட அந்த
நிமிடங்களை.
உன்னை மறக்க நினைக்கும்
பொழுதெல்லாம்
என்னை மட்டுமே மறக்கின்றேன்..

- மாணிக்கவள்ளி அமர்நாத்

 

Comments

ஹாய் கவிதா உங்களின் கவிதை சூப்பர்.பல வீடுகளின் இன்றைய நடைமுறை இதுதான்.அழகான வரிகள்.படிக்கவும் ,எளிதாக புரியவும் முடிகிறது.அடித்த கவிதையை சீக்கிரமாக பதிவு பண்ணிங்கள்.

எனது கவிதையை வெளியிட்ட அட்மினுக்கு எனது பல கோடி நன்றிகள்.

இது தான் முதல் முறை, எனது படைப்பு வெளிவருவது.
சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கலாம் போல் உள்ளது.

யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.......!!!

கவிதாசிவகுமார்.

anbe sivam

உங்கள் கவிதை அருமையிலும் அருமை...யதார்த்தமான மனஉணர்வுகளை
அழகாக எழுதியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் கவிதா, உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. அருமையான எழுத்துக்கள். வீட்டில் நடக்கும் தினசரி நிகழ்வை உங்கள் கவிதை
படம் பிடித்துக் காட்டுகிறது.வாழ்த்துக்கள்.
உங்கள் கவிதைகள் அனைத்தையும் படிக்க ஆவலாக உள்ளது.

அன்பு எரிக், இளவரசி, ஹர்ஷா......

உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்.
உங்கள் ஊக்கம் என்னை உற்சாகப்படுத்துகிறது.
நன்றிகள் பல.....

கவிதாசிவகுமார்

anbe sivam

கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு, அதில் சமத்துவம் தலைப்பில் வந்த கவிதை சூப்ப்ர்ப் வள்ளி.

கவிதா உங்க கவிதை மிகவும் அருமை.எனக்கும் கல்லுரி நாட்கள் ல கவிதை எழுதும் பழக்கம் இருந்தது, உங்க கவிதை படிக்கும் போது என் கவிதைகளையும் இங்கெ வெளியிட ஆசையா இருக்கு.எப்டி இங்க வெளியிடுவது.ப்ள்ஸ் டெல்ல் மி......

hai harigayathri,

thank you soo much for ur comments

Regard,
ManickavalliAmarnath

anpulla adminukku,

i am lot of thanks for u.Really i am very happy.thank you soo much.

சாரி வித்யா.. இப்போதான் பாத்தேன்.ரொம்ப நன்றிங்க...முகப்பின் கீழே பாருங்க.."தொடர்புக்கு" என்று இருக்கிறதல்லவா? அதை க்ளிக் பண்ணி உங்கள் படைப்புகளை அனுப்புங்கள்.

கவிதாசிவகுமார்.

anbe sivam

மாணிக்கவள்ளி... உங்கள் கவிதை அருமை...மேலும் கவிதைகளை எதிர்பார்க்கிறேன்..

கவிதாசிவகுமார்.

anbe sivam

உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கு..தினம் ஒரு புதுக்கவிதை ல கூட நல்ல கவிதைகளா எழுதுறீங்க.வாழ்த்துக்கள்.
கவிதாசிவகுமார்.

anbe sivam

நன்றி கவிதா மேடம்!என்னுடைய சிறுகதைகள் படிச்சி பார்த்திங்களா?எப்படி இருந்துச்சு?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

hai kavitha
thank you soo much. first of all sorry for my late message.thanks always keep in touch....

ManickavalliAmarnath

கவிதா கவிதை ரொம்ப சூப்பர் சூப்பரா இருக்கு எல்லார் வீடிலும் இந்த நிலைமைதான்

அன்பு நஸ்ரின்...
ரொம்ப நன்றி ...
நீங்க சொல்றது நிஜம்தான்.
நான் ஸ்கூல் படிக்கும்போது என் க்ளாஸ்மேட் ஒரு பொண்ணு பேரும் நஸ்ரின் தான் :)

கவிதாசிவகுமார்

anbe sivam

கவிதா

கவிதை அருமை. இன்று பலரின் நிலையும் உங்கள் கவிதையின் வரிகள் போல் தான் உள்ளது:( முன்பே படித்துவிட்டேன்.பதில் போட தான் தாமதம்.மன்னிக்கவும்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மாணிக்கவள்ளி

கவிதை சூப்பரா இருக்கு. சமத்துவம் கவிதை கேட்டதும் லேசாக சிரிப்பு வந்தது. உண்மையில் அவர்களுக்கு எல்லாமதமும் சம்மதம் தானே:)
மறக்க நினைக்கிறேன் கவிதையும் அருமை!

தொடர்ந்து பல கவிதைகள் எழுதிட வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா