அரசியல்

அரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள் சொல்லும் கருத்து.

நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும் . எப்படி ? அம்மாவுக்கு மின்விசிறி , போர்வை வேணும்னா , ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல? ஒண்ணுதான் வாங்கி தர முடியும்னு சொல்ற மாதிரி ஒரு தலைவர். தன்னலமே இல்லாம உழைக்கும் ஒரு தலைவர் .

ஆனா நம்ம எப்படி இருப்போம் . ஒருத்தன விட காசு இன்னோருத்தவன் கொடுத்தா அங்க வேலைக்கு போவோம் . ஒரு ஃப்ளாட் , கார், 29 இன்ச் கலர் டீவி , வித விதமா செல் போன் இதெல்லாம் நமக்கு வேணும். அது மட்டும் இல்லாம வீக் எண்ட்ல வீட்ல ஒரு நாள் நல்ல தூக்கம், ஒரு நாள் ஷாப்பிங்னு இருக்கனும். சுயநலத்தின் மொத்த உருவமா நாம இருப்போம். ஆனா நமக்காக உழைக்க ஒரு தியாகி நமக்கு வேணும். என்னங்கடா விளையாடறீங்களா?

படிக்காதவனுக்கு இலவச பொருட்களை கொடுத்து அரசியல் கட்சிகள் ஏமாத்துதுனு வாய் கிழிய பேசுவோம் . பழியெல்லாம் எழுத படிக்க தெரியாதவன் பேர்ல போட்டுடுவோம் . தமிழ் நாட்டோட Literacy rate 73%. அப்ப எழுத படிக்க தெரிஞ்சவனெல்லாம் ஒழுங்கா ஓட்டு போட்டாலே நிச்சயம் நிலைமை மாறும்.

ஆனா எலக்ஷனப்ப ஓட்டு போட சொல்லி லீவ் கொடுத்தா வீட்ல உக்கார்ந்து ஜாலியா டீவி பார்ப்போம் இல்லைனா சொந்த வேலைகளை பார்ப்போம் . கேட்டா , வாக்காளர் அடையாள அட்டை இல்லை , ரொம்ப நேரம் லைன்ல நிக்கனும்னு நொண்டி சாக்கு சொல்லுவோம். லைசன்ஸ் எடுக்க எடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சி செய்ய மாட்டோம். திருப்பதில ஒரு நாள்கூட க்யூல நிப்போம். அதே எலக்ஷன்ல ஓட்டு போட நிக்க மாட்டோம். கேட்டா நான் ஒருத்தவன் போடற ஓட்டால பெருசா என்னத்த ஆகிட போகுதுனு ஒரு சப்ப காரணம் சொல்லுவோம் .

வீட்ல உக்கார்ந்து நொண்டி நியாயம் பேசிட்டு அரசியல்வாதி நல்லவனா இருக்கனும், படிக்காத மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் இப்படி கண்டத பேசுவோம் . ஆனா அதே நேரம் தெருவுல நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கற குப்பையை கூட கொண்டு போய் ஒரு குப்பை தொட்டில போட மாட்டோம்.

வாங்கற எந்த பொருளுக்கும் பில் போட்டு வாங்க மாட்டோம். பில் போட்டா ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அதிகமாகும்னு கடைக்காரன் சொன்னா சரி வேண்டாம்னு சொல்லிடுவோம். இல்லைனா பில் போட 5 நிமிஷமாகும்னு சொன்னா வேணாம்னு சொல்லிடுவோம். நம்ம பண்ற சின்ன சின்ன தப்பெல்லாம் நமக்கு தப்பாவே தெரியாது. அதை பத்தி நாம ஒரு நிமிஷம் கூட கவலைப்பட மாட்டோம் .

எத்தனை பேர் நியாயமா வரி கட்டறோம்? எப்படி எல்லாம் அரசாங்கத்தை ஏமாத்த முடியுமோ அப்படியெல்லாம் ஏமாத்துவோம் . வாங்கற போருள் எதுக்கும் பில் வாங்காம கடைக்காரன் ஏமாத்தவும் உறுதுணையா இருப்போம் . இப்படி இருக்கற நாம கருணாநிதி சுயநலவாதி , ஜெயலலிதா சர்வாதிகாரினு வாய்கிழிய பேசுவோம்.

ரோட்ல கிடக்கற ஒரு வாழைப்பழ தோலைக்கூட எடுத்து குப்பைத்தோட்டில போடாத அளவுக்கு சமூக அக்கறை கொண்ட நமக்கு, ஒரு ரூபாய் , ரெண்டு ரூபாய்க்காக (ஒரு நிமிடம் , இரண்டு நிமிடத்திற்காக ) நேர்மையை இழக்கும் நமக்காக , தலைவர்கள் என்ன வானத்துல இருந்தா வருவாங்க?

அவுங்க அவுங்க தன்னால முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையில்லாத அளவுக்கு ஏமாத்தறோம் . அவ்வளவுதான் .

படிச்சவன் எல்லாம் சாலைவிதிகளை கடைபிடித்தால், குப்பைகளை சரியான இடத்தில் போட்டால் அதை விரைவில் அனைவரும் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வீட்ல உக்கார்ந்து கேவலமான டீவி சீரியல் பாக்கற நேரத்துல , அரட்டை அரங்கம், டாப் டென் பாக்கற நேரத்துல ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையே சுத்தப்படுத்திடலாம்.

அதுமட்டுமில்லாம அரசாங்கம் தான் செய்யனும்னு இல்லாம தெருல இருக்கற பசங்களுக்கோ இல்லை டியூசன் போய் படிக்க வசதியில்லாத பசங்களுக்கோ பாடம் சொல்லி கொடுக்கலாம் , தெருவுல செடி நடலாம். இன்னும் எவ்வளவோ பண்ணலாம் . எல்லாரும் ஒரு நாளைக்கு ஒரு ஒரு மணி நேரம் வெட்டி நியாயம் பேசறத நிறுத்திட்டு வேலை செஞ்சா கண்டிப்பா எல்லாத்தையும் மாத்தலாம் . அது இல்லாம நமக்காக உழைக்க ஒரு தலைவன் வருவான், அவன் வாழ்க்கையை தியாகம் பண்ணுவானு, வானத்தையே பாத்துட்டு இருந்தா ஒரு மண்ணும் நடக்காது .

நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான் ... மக்கள்னா வேற யாரும் இல்லை . நாமதான் ...

(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான் )

இது எனக்கு வந்த ஒரு forwarded மெயில். உங்க எல்லாரொடையும் பகிர்ந்துக் கொள்ள நினைச்சேன்.
அனிதா

ஹாய் அட்மின் அண்ணன் ...
நான் பதிவு கொடுத்தப்ப "page cannot be displayed " னு வந்தது.அதனால இன்னொரு தடவ கொடுத்தேன்.இப்ப ஒரே டாபிக் ரெண்டு தடவ வந்துருக்கு.டுப்லிகெஷன் டெலிட் செஞ்சுடுங்க ..ப்லிஸ்...

அனிதா

hi

அனிதா, நீங்க forward பண்ணின message ரொம்ப நல்லா இருக்கு.இதையெல்லாம் நாம சிந்திக்க ஆரம்பிச்சாலே நம்ம ஊரும் நாடும் உருப்பட்டுடும்.

அன்னியன் ரேஞ்சுக்கு ஆரம்பிச்சிருக்கீங்க... கொஞ்சமாவது பலன் கிடைச்சா சரிதான்.

அனிதா இந்த பதிவிற்கு நன்றி. அனைவருக்கும் பொருந்தும்.

நல்ல கருத்துன்னு தான் இந்த பதிவை போட்டேன்...
கடைசி வரி "நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான் ... மக்கள்னா வேற யாரும் இல்லை . நாமதான் " என் மனச தொட்டுருச்சு...அதான் கொடுத்தேன்.நன்றி விது,வானதி :)

அனிதா

hi

அனிதா, அருமையான கருத்து. ஒவ்வொருவரும் தன்னைத்தானே திருத்திக் கொண்டால் வீடு, நாடு, நகரம், உலகம் முழுவதும் சோலையாகி விடும்.
'கந்தசாமி' என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் படக்குழுவினர் மதுரை அருகேயுள்ள சங்கம்பட்டி, காந்தி நகர் என்ற இரண்டு கிராமங்களைத் தத்து எடுத்துக் கொண்டு அந்த கிராமத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர். பள்ளிக்கூடம், சாலை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படத்தைத்தயாரிக்கும் கலைப்புலி தாணு திருவேற்காட்டில் உள்ள தன்னுடைய திருமண மண்டபத்தை ஏழைத் திருமணங்களுக்கு தண்ணீர், மின்சாரத்துக்கூட கட்டணம் வசூலிக்காமல் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

அதே போல் பெங்களூரில் ஒருவர் வேஸ்ட் ப்ளாஸ்டிக் பேப்பர்களைக்கொண்டு ரோடு போட்டிருக்கிறார்.

இதுபோல் எவ்வளவோ பேர் வெளியில் தெரியாமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு புறம் சிலர் எச்சில் துப்பி, கண்ட இடங்களில் சிறுநீர் கழித்து நாசப்படுத்திகொண்டிருக்கிறார்கள். இதில் மட்டும் படித்தவர், படிக்காதவர் என்ற பாகு பாடே இல்லை.

வீட்டில் மின்சாரத்தைச் சிக்கனம் செய்பவர்கள் பொது இடங்களில் தாராளமாக இருப்பார்கள்.

"திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற பாடல் வரிகளுக்கேற்ப அவரவராய் திருந்தினால் தான் உண்டு.

அன்புடன்
ஜெயந்தி

ஆமாம் ஜெ அக்கா , நானும் கந்தசாமி திரைப்பட தொடக்க விழா பார்த்தேன். தானு , விக்ரம் மற்றும் சுசி கனேசனுக்கு ஒரு சல்லுட் அடிக்கனும் போல இருந்தது.கண்டிப்பா எல்லாரையும் சிந்திக்க வைக்கும்னு நினைக்கிறேன்.
நான் இங்க(usa) வந்து பாத்து பாத்து ஆச்சரியப்பட்ட ஒன்னு இந்த ஊரு ரோடு தான் :)
நம்ம இந்தியா வும் ஒரு நாள் ஆச்சரியபடர மாறும்னு நம்பரேன்.

அனிதா

hi

மேலும் சில பதிவுகள்