பள்ளிகளில் கட்டண குறைப்பு சரியா?

பள்ளிகளில் அரசாங்கம் ஃபீஸ் குறைத்தது சரியா?இன்னும் எத்தனை பள்ளிகள் அதை பின்பற்றுகிறது?உங்கள் ஊர்களில் அது நடைமுறைக்கு வந்துள்ளதா?உங்கள் பதிவுகளை இங்கே தாருங்கள்.

பள்ளிகளில் அரசாங்கம் ஃபீஸ் குறைத்தது சரி.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பள்ளிகளில் கட்டணம் குறைத்தது என்னவோ வரவேற்க தகுந்த விஷயம் தான். ஆனால் இதை எல்லா பள்ளிகளும் ஏற்கணும். டியூஷன் பீஸ் குறைக்காமல் இருந்தாலும் டொனேஷன் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளையயாவது தடுத்து நிறுத்தலாம். பள்ளி நிர்வாகம் என்று தான் திருந்துமோ தெரியவில்லை.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

ஆனால் இன்னும் நிறைய பள்ளிகளில் அதிகமாகவே வசூலித்து வருகிறார்கள் என்பதுதான் சர்ச்சைக்குரிய விசயம்.அரசாங்கமும் அதை கண்டும்,காணாமலும் இருந்து வருகிறது.இப்படியே போனால் கல்வி நடுத்தரவர்க்கத்தினர்க்கு எட்டா கனியாகிவிடும்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

முன்பெல்லாம் ஒரு வேளை உணவாவது போடுவார்கள் என்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்கள்.
இப்போது தான் குழந்தை இலவச கல்வி பயில்வதை கேவலமாக சிலர் நினைக்கிறார்கள். அரசுபள்ளிகளில் என் குழந்தை படிக்கிறது என்று சொல்லுவதை அவர்கள் விரும்புவதில்லை.
அந்த குறிப்பிட்ட பள்ளிகளில் தங்கள் குழந்தையை சேர்க்க அட்மிஸன்க்கு முதல் நாள் இரவு முதலே வரிசையில் காத்துக்கொன்டிருக்கிறார்கள். அப்படியும் அட்மிசன் கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு பணம் கொட்டவும் தயங்குவதில்லை.
தனியார் பள்ளிகளை இந்த அளவுக்கு வளர்த்து விட்டவர்களே நாம் தான். பிறகு தேள் வளர்த்தேன். கொடுக்கால் கொட்டியது; பாம்பு வளர்த்தேன் அது பல்லால் கடித்தது என்று சொல்லுவதில் அர்த்தம் இல்லை. அரசு எப்படி கட்டுபடுத்தினாலும் ஒன்னும் செய்ய முடியாது.
பள்ளியில் சேர்க்க போனேன். அவர்கள் அதிகமாக பணம் கேட்கிறார்கள் என்று சொல்ல யாரும் முன் வரமாட்டார்கள்.
அப்படியே அரசு கட்டுபடுத்தியது என்று சொன்னால் அது அரசின் திறமை.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்