பட்டிமன்றம்-18- லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?"

ஹெல்லொ வனிதா மேடம்!எப்படி இருக்கிங்க?கவிசிவா ஆளையே காணோம்?ஓகே.நானே நடுவராய் இருக்கிறேன்.நான் தேர்ந்தெடுத்த தலைப்பு சகோதரி ஆயிஸ்ரீ மேடம் தந்த"மக்கள் தம் வேலைகள் சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்ததா?இல்லை மக்களிடையே அது திணிக்கப்பட்டதா?"என்பதுதான்.இதில்
எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு கேட்டக்கொள்கிறேன்.குறிப்பாக வனிதா,ப்ரியா,டிவ்யா,இளவரசி,இலா,இமா,யோகரானி,ஜயலக்ஷ்மி,ஆமினா முஹம்மத்,எரிக்,கவிசிவா,மேடம் எல்லோரும்,இன்னும் என்னோடு போன பட்டிமன்றத்தில் கலந்த எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு வேண்டிக்கொள்கிறேன்

நல்ல முடிவு அண்ணா.........
இதை நான் முழுமனதால் ஏற்றுக்கொள்கிறேன். இப்பட்டிமன்றம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஆனால் நான் கொஞ்சம் அரை கரண்ட்.
தலைப்பை பற்றி கொஞ்சம் விளக்கம் கொடுக்கவும்.

"மக்கள் தம் வேலைகள் சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்ததா" என்பது மக்களாகவே லஞ்சம் கொடுப்பது. "மக்களிடையே அது திணிக்கப்பட்டதா" என்பது அவர்கள் மக்களிடம் கேட்பது.
சரிதானே?

இல்லை என்றால் விளக்கம் கொடுக்கவும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நம் வேலைகள் சீக்கிரம் நடக்கம் வேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்தது நம் மக்களுக்கு தற்போது பொருமையில்லை அதனால் எந்த காரியமும் எளிதாக நடக்கவேன்டும் என்பதற்காக நாம் தான் லஞ்சத்தை வளர்த்து விட்டோம்.

வாழ்க வளமுடன்

தோழிகளே, லஞ்சம் கண்டிப்பாக திணிக்கப்பட்டதுதான்.

life is short make it sweet.

ஆஹா... நான் கவிசிவா தான் வந்துட்டாங்கன்னு நினைச்சேன். அவங்க வேறு யாரும் வரலன்னா நானே துவக்குறேன்னு பதிவு போட்டிருந்தாங்க. எப்படியும் பாவம் அவர் ஊருக்கு போறார்... அதனால் நீங்க துவக்கினது அவருக்கு ஒரு வேலை குறையும். இல்லை என்றால் ஊரில் இருந்து வந்து எல்லாத்தையும் படிச்சு தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கும்.

கவிசிவா ஊருக்கு கிளம்பும் முன் வந்து கண்டிப்பா பட்டியில் பதிவு போடுவாங்கன்னு நம்பறேன்.

தலைப்பு நல்ல தலைப்பு... என் கட்சி இன்னும் சிலர் வந்த பிறகு முடிவு செய்யறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஷேக் தம்பி... தலைப்பை கொஞ்சம் சின்னதாக்குங்க. முழுசா இழை உள்ளே குடுத்தால் போதும், வெளியே தெரியும் தலைப்பை "லஞ்சம் தினிக்கப்பட்டதா? மக்கள் உருவாக்கியதா??" என்று இருந்தால் போதும். அண்ணா பெரிய தலைப்பு குடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கார். கூடவே அத்தனை பெரிதாக முகப்பில் பார்க்கவும் நல்லா இல்லை. சரியா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க எல்லோரும் வாங்க.வந்து பட்டிமன்றத்தை சிறப்பித்து தாருங்கள்!
ஆமினா மேடம்..மக்கள் மூலமாகவே லஞ்சம் வளர்ந்ததா?இல்லை ஒரு சிலரால் மக்கள் லஞ்சம் குடுக்கும் சூழ்ன்நிலைக்கு தள்ளப்பட்டார்களா? என்பதுதான் அதுனுடைய அர்த்தம்.இப்போது புரிந்ததா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பட்டிமன்றம்-19

நடுவர் அவர்களே!!!!

மக்களிடையே தினிக்கப்பட்டது என்பதன் சார்பாக பேசுகிறேன்.

எவரும் தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வாரி கொடுக்க விரும்புவதில்லை. அவங்க கேட்பதால் தான் நாமும் கொடுக்கிறோம். இல்லை என்றால் வேலை நடக்கமாட்டேங்குது.

அதனால் தான் மக்களும் வேலை நடக்க வேண்டும் என்பதால் அவர்கள் கேட்கும் பணத்தை குடுத்து பலன் பெறுகின்றனர்.
ஆகவே லஞ்சம் என்பது தினிக்கப்பட்டது தான்.

மீண்டும் வருவேன்,
ஆமினா.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஷேக் அவர்களே..

நல்ல தலைப்பு ஆரம்பித்துள்ளீர்கள். என் வாதம் மக்களால் வளர்க்கப்பட்டது என்பதாகும். ஏனெனில் மக்கள் தங்கள் பணத்தை முன்வந்து கொடுக்க நினைக்காவிட்டாலும் சில பணம் படைத்தவர்களால் இந்த சூழ்நிலை உண்டாக்கப்பட்டது. முதன்முதலில் அதை ருசித்து பழகியவர்களே பேரளவில் லஞ்சத்தை கேட்க தொடங்கினார்கள். பணக்காரன் என்பதால் சின்ன மீனை போட்டு அவன் நினைத்த பெரிய மீனை அடைகிறான். அவன் லஞ்சத்தை வளர்த்துகொண்டு இருக்கிறான் என அறிந்துமே..அதை சுவைத்து பிறரிடமும் அவன் (லஞ்சம் வாங்கியவன்)எதிர்பார்க்க தொடங்குகிறான். அவன் பின் வருபவர்களும் லஞ்சம் கேட்க ஆரம்பிக்கின்றனர்.

ஆதலால் முதன்முதலில் லஞ்சம் வளர்க்கப்பட்டதால், இப்போதைக்கு திணிக்கப்பட்டுள்ளது.

நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹையா சூப்பரான திரி... ஆரம்பித்து வைத்த ஷேக் தம்பிக்கு நன்றி....

எனக்கு இங்கே கொஞ்சம் குளிருது.... எல்லோரும் காரசாரமா விவாதம் பண்ணுங்க... நான் குளிர் காயறேன்..

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அனைவருக்கும் வணக்கம். பட்டிமன்றத்தை ஆரம்பித்த சகோ ஷேக் அவர்களுக்கு நன்றி.

லஞ்சம் மக்களால் உருவாக்கப்பட்டதே என்பது என் வாதம். ஆரம்பத்தில் மக்கள் சட்டத்துக்கு புறம்பான காரியங்களை சாதித்துக் கொள்ள அதிகாரிகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்கினர். பின்னர் தாங்கள் அலையாமல் வரிசையில் நிற்காமல் சொகுசாக வேலையை சாதிக்க காசு கொடுத்தார்கள். பின் அதுவே பழக்கமாகி விட்டது. அதனால்தான் லஞ்சம் மக்களால் உருவாக்கப்பட்டது என்கிறேன்.

நேர்மையாக இருக்கும் அதிகாரிகளையும் லஞ்சம் கொடுத்து வளைக்கப்பார்க்கும் பொதுமக்கள் இருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்று எதிரணியினர் சொன்னால் அது பொய்யே.
இதுவரை நான் எங்கும் எதற்கும் யாருக்கும் லஞ்சம் கொடுத்தது இல்லை இனி கொடுக்கப் போவதும் இல்லை. இதை நான் பெருமையாகவே சொல்லிக் கொள்வேன்.

அரசு அலுவலகங்களில் நமக்கு நடக்க வேண்டிய விஷயங்கள் நியாயமானதாக இருந்தால் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்தால்தான் சாதிக்க முடியும் என ஏன் நினைக்க வேண்டும். அப்படியே அவர்களிடம் கொடுக்க முடியாது என்று சொன்னால் அவர்களால் என்ன செய்து விட முடியும். மிஞ்சிப் போனால் இழுத்தடிப்பார்கள். நம்முடைய அப்ளிகேஷன் நியாயமானதாக இருந்தால் அவர்களால் மறுக்கவே முடியாது.

இன்று எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. அதிகாரி லஞ்சம் கேட்பதை ரிக்கார்ட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? அல்லது அவர் வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார் என்பதை நிரூபிக்க எவ்வளவு நேரம் ஆகும்? மனதிருந்தால் மார்க்கம் உண்டு. நம்மிடம் நேர்மை இருந்தால் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன?

ஆனால் மக்களிடம் பொறுமை இல்லை. பொறுப்புணர்ச்சி இல்லை. எனக்கு என்னுடைய காரியம் ஆக வேண்டும். கொஞ்சம் பணம் செலவானாலும் பரவாயில்லை என்று லஞ்சத்தை வளர்த்து விட்டு விட்டு இன்று "அய்யோ லஞ்சம் தலை விரித்தாடுகிறது" ன்னு "லபோ திபோ"ன்னு கத்தி கூப்பாடு போட்டு பிரயோஜனம் இல்லை.

மக்கள் அனைவரும்(50சதவீதம் பேராவது) லஞ்சம் கொடுக்க மாட்டோம்னு உறுதி எடுத்தால் நாடு உருப்படும்.

மீண்டும் வருவேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்