கேள்வி பதில்

பெயர்ப்பதிவு செய்வது மிக எளிதான விசயம். மேலே கொடுக்கப்பட்டுள்ள Register என்ற லிங்க் அல்லது கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் பெயர், இமெயில் விபரங்களைக் கொடுத்து பெயர்ப்பதிவு செய்யலாம். பெயர்ப்பதிவின்போது உறுப்பினர் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மட்டுமே கட்டாயம் கொடுக்க வேண்டிய தகவல். மற்ற தகவல்களை நீங்கள் விரும்பினால் கொடுக்கலாம்.

பெயர்ப்பதிவு செய்ய : http://www.arusuvai.com/tamil/user/register

பெயர்ப்பதிவு கட்டாயம் அல்ல. நீங்கள் அறுசுவை தளத்தை பார்வையிட மட்டும் செய்கின்றீர் என்றால் பெயர்ப்பதிவு தேவையில்லை. அறுசுவை மன்றத்திலோ அல்லது மற்ற இடங்களிலோ நீங்கள் ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்க விரும்பினால், கேள்விகள் கேட்க நினைத்தால், பெயர்ப்பதிவு செய்து லாகின் செய்தால் மட்டுமே கொடுக்க இயலும். மன்றத்தில் உரையாட பெயர்ப்பதிவு மிகவும் அவசியம்.

பெயர்ப்பதிவின் போது இரண்டு தகவல்கள் மட்டும் முக்கியமானது. அவை சரியாக இல்லையென்றால் பெயர்ப்பதிவதில் சிக்கல்கள் உண்டாகலாம்.

1. உறுப்பினர் பெயர்:

உறுப்பினர் பெயர் கொடுக்கும்போது மிகக் கவனமாக கொடுக்க வேண்டும். அதாவது ஏற்கனவே அறுசுவையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்ட பெயரைக் கொடுத்தால் பெயர்ப்பதிவில் எர்ரர் வரும். கொடுக்கும் பெயர் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? தற்போது Name availability செக் செய்வதற்கு அறுசுவையில் தனியாக ஆப்சன் எதுவும் இல்லை. இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு, நீங்கள் விரும்பும் பெயரை மேலே உள்ள search box ல் கொடுத்து ஏதேனும் உறுப்பினர் பெயர் அந்தப் பெயரில் உள்ளதா என்று தேடிப் பார்ப்பது ஒன்றுதான் வழி. எனவே நீங்கள் தேர்வு செய்யும் பெயர் ஏற்கனவே இல்லாததாக பார்த்துக் கொடுக்கவும். 60,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே பெயர்ப்பதிவு செய்துள்ளதால், பரவலாக உபயோகத்தில் உள்ள பெயர்கள் எல்லாம் ஏற்கனவே ரெஜிஸ்தர் செய்யப்பட்டிருக்கும். எனவே, உங்கள் பெயருடன் ஏதேனும் எண் அல்லது ஊர்ப்பெயர் இப்படி எதாவது சேர்த்து பெயர்ப்பதிவு செய்ய முயற்சிக்கவும்.

2. மின்னஞ்சல் முகவரி.

மின்னஞ்சல் முகவரி முக்கியமானது. இதில் நிறையப் பேர் தவறு செய்கின்றார்கள். இந்த பெட்டியில் நீங்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரி சரியான முகவரியாக, உபயோகத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு எங்களிடம் இருந்து எந்த தகவல்களும் வந்துச் சேரும். அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே அறுசுவையில் பெயர்ப்பதிவு செய்ய பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியை மீண்டும் பெயர்ப்பதிவு பயன்படுத்த கூடாது. மின்னஞ்சல் முகவரி உபயோகத்தில் உள்ளதாக பிழை காட்டும்.

அறுசுவை தளம் மீது bots கொண்டு தொடுக்கப்படும் தாக்குதல்களை சமாளிக்க, செக்யூரிட்டி சிஸ்டமை அதிகரிக்க வேண்டியதாயிற்று. அதன் விளைவாக புதிதாகப் பெயர்ப்பதிவு செய்பவர்கள் ஒரே ஐபி முகவரியில் இருந்து ஒன்று இரண்டு முறைக்கு மேல் பெயர்ப்பதிவு செய்ய முற்பட்டால் அந்தப் பெயர்ப்பதிவு மறுக்கப்படும். அப்போது மேலே குறிப்பிட்ட எர்ரர் வரும்.

முதல் முறையே சரியானப் பெயர், மின்னஞ்சல் முகவரிக் கொடுத்து பெயர்ப்பதிவு செய்பவர்களுக்கு பிரச்சனை இருப்பதில்லை. முதல் முறைக் கொடுத்த உறுப்பினர் பெயர் ஏற்கனவே எடுக்கப்பட்டதாக இருக்கும்போது மீண்டும் புதியப் பெயர் கொடுத்து பலமுறை முயற்சி செய்யும்போது, அப்படி செய்வது மனிதர்கள்தானா அல்லது bots எனப்படும் ஸ்க்ரிப்ட்களா என்ற சந்தேகம் எங்களது செக்யூரிட்டி சிஸ்டமிற்கு வரும். அந்த நேரங்களில் இது போன்ற எர்ரர் வரும்.

நன்றாக நினைவில் கொள்ளவும். உங்களுடைய உறுப்பினர் பெயர், மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே அறுசுவையில் இல்லையென்றால் இந்தப் பிரச்சனையே வராது. பெயர்ப்பதிவு எளிதாக நடந்துவிடும். எனவே முதல் முறைக் கொடுக்கும்போதே இதைச் சரியாக கொடுத்து பெயர்ப்பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள். ஒட்டுமொத்த பெயர்ப்பதிவு சிஸ்டமில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தினமும் பலர் பிரச்சனையில்லாமல் பெயர்ப்பதிவு செய்து வருகின்றனர். உங்களுக்கு பெயர்ப்பதிவு செய்வதில் பிரச்சனை வருகின்றது என்றால் மேலே குறிப்பிட்டவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.

சரி, இந்த எர்ரர் வரும்போது என்ன செய்யவேண்டும்?

மீண்டும் மீண்டும் பெயர்ப்பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம். சில மணி நேரங்கள் அல்லது அன்றைய தினத்தை விட்டுவிட்டு அடுத்த தினத்தில் மீண்டும் பெயர்ப்பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள். அப்போது உங்களுக்கு இந்த பிரச்சனை வராது.

அதிலும் பிரச்சனை என்றால், கீழே தொடர்புக்கு என்று உள்ள பக்கத்தின் வாயிலாக எங்களுக்கு தெரிவிக்கவும். அதில் பெயர்ப்பதிவு பாஸ்வேர்டு குறித்த விபரங்களுக்கு என்ற ஆப்சனை செலக்ட் செய்து, விபரங்களைத் தெரிவிக்கவும்.

அப்படி தொடர்பு கொள்ளும்போது உங்களது பெயர், நீங்கள் தேர்வு செய்துள்ள உறுப்பினர் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து பெயர்ப்பதிவு செய்து தர கோரவும். நீங்கள் குறிப்பிடும் உறுப்பினர் பெயரில் உங்களுக்கு பெயர்ப்பதிவு செய்து, தற்காலிக கடவுச்சொல்லை(பாஸ்வேர்டை) உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு நாங்கள் அனுப்பி வைப்போம்.

உறுப்பினர் பெயர் கண்டிப்பாக நினைவில் இருக்க வேண்டும். அதனை மறந்துவிட்டீர்கள் என்றால் திரும்பப் பெறுவது கடினம். அந்த பெயரில் நீங்கள் ஏற்கனவே ஏதேனும் பதிவுகள் கொடுத்து இருந்தால், அதனைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இல்லையென்றால் நீங்கள் புதிதாக மீண்டும் வேறு மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி பெயர்ப்பதிவு செய்ய வேண்டும்.

Request New Password என்ற லிங்க்ஐ கிளிக் செய்து, நீங்கள் பெயர்ப்பதிவின் போது கொடுத்த மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால், உங்களுக்கான புதிய பாஸ்வேர்டு மின்னஞ்சலில் வரும். முக்கியக் குறிப்பு. நீங்கள் பெயர்ப்பதிவின் போது கொடுத்த மின்னஞ்சல் முகவரி மட்டுமே கொடுக்க வேண்டும். புதிய முகவரி, தவறான முகவரி கொடுத்தால் பாஸ்வேர்டு கிடைக்காது.

வலப்புறம் உள்ள User login பெட்டியில் Request New Password என்ற லிங்க் உள்ளது. அதனையும் பயன்படுத்தலாம்.

அறுசுவையில் கருத்துக்கள் தெரிவிக்க நீங்கள் கட்டாயம் பெயர்ப்பதிவு செய்திருக்க வேண்டும். உங்களது உறுப்பினர் பெயரைக் கொண்டு லாகின் செய்ய வேண்டும். நீங்கள் கருத்து தெரிவிக்க விரும்பும் குறிப்பின் கீழே "Add new comment" அல்லது "கருத்து தெரிவிக்க" என்ற லிங்க் இருக்கும். அதனைப் கிளிக் செய்து, ஒரு தலைப்பு கொடுத்து உங்கள் கருத்தினை பதிவு செய்யலாம். கவனிக்க: நீங்கள் லாகின் செய்தால் மட்டுமே "கருத்து தெரிவிக்க" என்ற லிங்க் தெரியும். இல்லையென்றால் "Login or Register to post comments" என்ற லிங்க் தெரியும்.

ஏற்கனவே கருத்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் கீழ் பதில் கொடுக்க விரும்பினால் "Reply" அல்லது "பதிலளி" என்ற லிங்க்கை கிளிக் செய்து பதில் கொடுக்கலாம்.

அறுசுவையில் இடம்பெற்றுள்ள குறிப்புகள், கட்டுரைகள், கதை, கவிதைகள் போன்றவற்றிற்கு அந்த பக்கத்தில் உள்ள "கருத்து தெரிவிக்க" லிங்க் மூலம் கருத்து தெரிவிக்கலாம். அவையல்லாது பொதுவான விசயங்கள், ஆலோசனைகள், சந்தேகங்கள் போன்றவற்றை மன்றத்தில் பதிவு செய்யவும். மேலே மெயின் மெனுவில் மன்றம் என்ற லிங்க் உள்ளது. மன்றத்தில் பல்வேறு பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பொருத்தமான பிரிவினை தேர்வு செய்து அதில் உங்கள் கேள்வியைக் கேட்கவும். அல்லது கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

அறுசுவையில் லாகின் செய்த பிறகு மன்றம் பக்கத்திற்குச் செல்லவும். முதல் பக்கத்தில் நிறைய பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களது தேவைக்கு பொருத்தமான தலைப்பினை கிளிக் செய்யுங்கள். அந்த பிரிவிற்கான பக்கத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். அந்த பிரிவில் ஏற்கனவே கேட்கப்பட்டுள்ள கேள்விகளின் பட்டியலை நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு கேள்விக்கு அருகிலும் அதற்கு எத்தனை பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்ற எண்ணிக்கையும் தெரியும்.

நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி ஏற்கனவே அங்கே கேட்கப்பட்டிருந்தால், அந்த கேள்வியை கிளிக் செய்து, அந்த பக்கத்திற்குச் சென்று உங்களது கேள்வியையும் பதிவு செய்யலாம். அந்தப் பிரிவில் நீங்கள் புதிதாக கேள்வி சேர்க்க விரும்பினால், பக்கத்தின் மேலே இடப்பக்கம் தெரியும் "Add new forum" அல்லது "புதிய கேள்வியைச் சேர்க்க" என்று இருக்கும் லிங்க்கை கிளிக் செய்து உங்களது கேள்வியை பதிவு செய்யவும்.

நீங்கள் கேட்கும் கேள்வியானது ஒரு இழையாக (thread) ஆக பதிவாகும். அதன் கீழ் மற்ற உறுப்பினர்கள் பதிவுகள் கொடுக்கலாம். புதிய இழைகள் தொடங்கும்போது, ஏற்கனவே இல்லாத தலைப்புகளில் தொடங்க வேண்டும். ஏற்கனவே அதே போல் ஒரு இழை இருக்குமாயின், அந்த இழையின் கீழ் உங்கள் பதிவுகளைக் கொடுக்கலாம். ஒரு கேள்வியானது ஒரே ஒரு இழையில் இருக்கும்போது, அதற்கு கொடுக்கப்படும் அத்தனை பதில்களும் அனைவரையும் சென்றடையும். ஒரே கேள்வி பல இடங்களில் இடம்பெற்றால், அதற்கான பதில்களும் பிரிந்துவிடும். ஆகவே, அவசியம் இருப்பின் மட்டுமே புதிய இழை தொடங்க வேண்டுகின்றோம்.

மன்றத்தில் உரையாட கட்டுப்பாடுகள் எதுவும் உள்ளதா?

ஆம். மன்றத்திற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. மன்றத்தின் பயன்பாடு அனைவருக்கும் செல்லவும், பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுக்கவும், சில முக்கிய விதிகளை கட்டாயமாக்கி இருக்கின்றோம். உறுப்பினர்கள் அந்த விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுகின்றோம்.

அறுசுவையில் சமையல் குறிப்புகள் பங்களிக்க விரும்புகின்றவர்கள், குறிப்புகளை செய்முறைப் படங்களுடன் எங்களுக்கு மின்னஞ்சல் வழியாக arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். குறிப்புகள் பங்களிக்கும் முன் அறுசுவை Terms and Conditions ஐ ஒருமுறை படித்துவிடவும். விதிகளுக்கு ஆட்சேபணை இல்லாத பட்சத்தில் மட்டும் குறிப்புகளை அனுப்பவும். இந்த விதிகள் சமையல் குறிப்புகள் மட்டுமல்லாது கைவினைக் குறிப்புகளுக்கும் பொருந்தும்.

குறிப்புகளை அனுப்பும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்.

 • குறிப்புகளை தமிழில் மட்டுமே டைப் செய்து அனுப்ப வேண்டும். தமிங்கிலம, ஆங்கில குறிப்புகளை மொழிமாற்றம் செய்ய இயலாது. எனவே, தமிழில் மட்டும் அனுப்பவும்.
 • குறிப்புகள் உங்கள் சொந்த நடையில் இருக்க வேண்டும். நீங்கள் எந்த தளத்தைப் பார்த்து, எந்த புத்தகத்தைப் பார்த்து கற்றுக்கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், அதில் உள்ளவாறு அப்படியே எழுத்து மாறாமல் இருக்கக்கூடாது. மற்ற இடங்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொண்டு அவற்றை செய்து பார்த்து, குறிப்புகளை உங்கள் நடையில் எழுதி அனுப்ப வேண்டும்.
 • குறிப்புகளுக்கான ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கப்படங்களை கண்டிப்பாக அனுப்பவும். படங்கள் இல்லாத குறிப்புகளை தற்போது வெளியிடுவதில்லை.
 • படங்கள் தெளிவாகவும், குறைந்தது 800px X 600px என்ற நீள, அகல அளவிற்கு குறையாமல் இருக்குமாறும் அனுப்பவும். மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதால், ஒவ்வொரு படத்தின் Filesize மிக அதிகமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும். ஒரு படம் 1MB க்கு மேல் இருந்தால், மின்னஞ்சலில் சேர்ப்பதற்கு நேரம் எடுக்கும். அதற்கு தகுந்தாற்போல் ஃபைல் சைஸ் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
 • ஒவ்வொரு குறிப்பிற்கும் குறைந்தது 4 படங்களாவது இணைக்கவும். தற்போது புதிய அறுசுவையில் படங்களின் அளவை பெரிதாக்கி உள்ளதால், ஒரு குறிப்பிற்கு அதிக படங்களை இணைக்க இயலாது. எனவே, 8 படங்களுக்கு மேல் படங்கள் இணைக்க வேண்டாம். ஒரு குறிப்பிற்கு 4 அல்லது 5 படங்கள் போதுமானவை.
 • கைவினைக் குறிப்புகளுக்கு சில நேரங்களில் அதிகப் படங்கள் இணைக்க வேண்டி இருக்கலாம். எனவே அவற்றிற்கு இந்த எண்ணிக்கை கட்டுப்பாடு பொருந்தாது.
 • குறிப்புகள் உங்களது சொந்த குறிப்புகளாக இருக்க வேண்டும். பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள், மற்றவரது குறிப்புகளை கண்டிப்பாக அனுப்பக்கூடாது. அவற்றை உடனடியாக நிராகரித்துவிடுவோம். ஒருவேளை தெரியாமல் வெளியிடப்பட்டால், தெரிய வரும்போது குறிப்புகளை நீக்குவதோடு, உறுப்பினரையும் அறுசுவையில் இருந்து நீக்கவேண்டி வரும்.
 • உங்களது சொந்த குறிப்பாக இருந்தாலும், மற்ற தளங்களிலோ அல்லது உங்கள் வலைப்பதிவிலோ நீங்கள் ஏற்கனவே வெளியிட்டு இருந்தால் அந்த குறிப்புகளை மீண்டும் இங்கே தரக்கூடாது. ஏற்கனவே இணையத்தில் ஒரு இடத்தில் உள்ள ஒரு தகவல் மீண்டும் அப்படியே இன்னொரு இடத்தில் இடம்பெறுவது தேவையற்றது. ஆகவே, உங்களது சொந்தக் குறிப்பாக இருந்தாலும் அது வேறு இடத்தில் ஏற்கனவே இருந்தால், அதனை மீண்டும் இங்கே வெளியிட இயலாது.
 • அதேபோல், இங்கே கொடுக்கப்படும் குறிப்புகள், படங்களை அப்படியே வேறு தளங்களுக்கு கொடுக்கவும் அனுமதி இல்லை. நீங்கள் அதனை மாற்றிக் கொடுத்து கொள்ளலாம்.
 • நீங்கள் இங்கே கொடுக்கும் குறிப்புகளுக்கான லிங்க்கை உங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிடலாம். குறிப்புகளை தனியே எடுத்து வெளியிடாமல், அந்த பக்கத்தின் லிங்க்கை மற்ற இடங்களில் பகிர்வதில் பிரச்சனைகள் எதுவும் இல்லை.
 • குறிப்புகள் கொடுப்பவர்கள் கண்டிப்பாக அறுசுவையில் பெயர்ப்பதிவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் குறிப்பில் அவரது பெயரைக் கொண்டு வர இயலும். எனவே, குறிப்புகள் அனுப்புவோர், தங்களது உறுப்பினர் பெயர் மற்றும் உறுப்பினர் எண்ணைத் தெரிவித்து குறிப்புகளை அனுப்பவும்.
 • குறிப்புகளும், படங்களும் தெளிவாக இல்லாத பட்சத்தில் அந்த குறிப்புகளை வெளியிட இயலாது. வெளியிட இயலாத நிலையில் உங்களுக்கு அந்த தகவல் மின்னஞ்சலில் அனுப்பப்படும். ஒருவேளை நீண்டநாட்களாக தகவல் வரவில்லையென்றால் குறிப்புகள் வெளியிடும் தரத்தில் இல்லையென்பதை அறிந்துகொள்ளவும்.

அறுசுவையில் வெளியாகி உள்ள எனது குறிப்புகளை நீக்க இயலுமா?

குறிப்புகள் அறுசுவையில் வெளியான பிறகு அவற்றை நீக்குதல் இயலாது. அறுசுவையில் வெளியான பிறகு அவற்றை நீக்கம் செய்ய கோரி வரும் விண்ணப்பங்களும் மறுக்கப்படும். அறுசுவையில் குறிப்புகள் வெளியானவுடன் அவை search engine களால் index செய்யப்படுகின்றன. பிறகு அந்தப் பக்கம் இல்லாது போனால், அறுசுவையின் பேஜ் ரேங்கிங்க், மற்றும் சேர்ச் ரேங்கிங்க் எல்லாமே பாதிக்கப்படும். எனவே, அறுசுவையில் வெளியான பக்கங்களை நீக்குவது என்பது இயலாது.

தேவையற்ற பக்கங்கள், பிரச்சனைக்குரிய பக்கங்களை மட்டுமே நாங்கள் நீக்குகின்றோம். எனவே, சிலகாலம் குறிப்புகள் வழங்கிவிட்டு, திடீரென தங்களது குறிப்புகளை நீக்கச் சொல்லுமாறு வரும் விண்ணப்பங்களை நாங்கள் பரிசீலிப்பதில்லை. இங்கே பங்களிக்க விரும்புகின்றவர்கள் இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ளும்பட்சத்தில் மட்டுமே பங்களிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரு குறிப்பினை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதே குறிப்பினை அறுசுவை குழுவினர் செய்து, படம் எடுத்து அந்த குறிப்பிற்கு பதில் அதே இடத்தில் சேர்த்த பின்னரே பழைய குறிப்பு நீக்கப்படும்.

அறுசுவையில் கதை, கவிதைகள், இதர படைப்புகளை பங்களிக்க விரும்புகின்றவர்கள், தங்களது படைப்புகளை எங்களுக்கு மின்னஞ்சல் வழியாக arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்புகளை அனுப்பும் முன் அறுசுவை Terms and Conditions ஐ ஒருமுறை படித்துவிடவும். விதிகளுக்கு ஆட்சேபணை இல்லாத பட்சத்தில் மட்டும் உங்களது படைப்புகளை அனுப்பவும்.

முக்கிய விதிகள்:

- படைப்புகள் உங்களது சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். ஏற்கனவே வேறு தளங்களில் வெளியாகி இருக்கக்கூடாது.

- ஏற்கனவே இணையத்தில் ஒரு இடத்தில் உள்ள ஒரு படைப்பு மீண்டும் அப்படியே இன்னொரு இடத்தில் இடம்பெறுவது தேவையற்றது. ஆகவே, உங்களது சொந்த படைப்பாக இருந்தாலும் அது வேறு இடத்தில் ஏற்கனவே இருந்தால், அதனை மீண்டும் இங்கே வெளியிட இயலாது.

- படைப்புகளை அனுப்புவோர் கண்டிப்பாக அறுசுவையில் பெயர்ப்பதிவு செய்திருக்க வேண்டும்.

- படைப்புகளை உறுப்பினர் பெயரில் வெளியிட வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. கதை, கவிதைகள் போன்றவற்றை புனைப்பெயரிலும் வெளியிடலாம். புனைப்பெயருக்கென்று ஒரு உறுப்பினர் பதிவு தேவையில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், கதை, கவிதைகள் நீங்கள் விரும்பும் பெயரில் வெளியிடப்படும்.

கதை, கவிதை போன்ற உங்களது படைப்புகளை அறுசுவைக்கு அனுப்பும்போது, உங்கள் பெயர் மற்றும் உறுப்பினர் எண் ஆகியவற்றை மறவாமல் குறிப்பிட்டு அனுப்பவும். படைப்புகளை அனுப்புகின்ற சிலர் தங்களது பெயரைக்கூட குறிப்பிடுவதில்லை. யாரிடம் இருந்து வருகின்றது, என்ன பெயரில் வெளியிட வேண்டும் என்று எந்த தகவலும் இல்லாத படைப்புகளை நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஏன் எங்களது படைப்புகளை வெளியிடவில்லை என்று மின்னஞ்சல் அனுப்புகின்றவர்களுக்கு எங்கள் பக்கமிருந்து பதில் இருப்பதில்லை.

தங்களது படைப்புகளை வெளியிடுங்கள் என்று ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடாமல், பெயரும் குறிப்பிடாமல் வரும் படைப்புகளை நாங்கள் படித்துப் பார்ப்பதற்காக அனுப்பப்பட்ட படைப்புகளாக எண்ணி, வெறுமனே படித்துவிட்டு விட்டுவிடுவோம். எனவே, தயவுசெய்து உங்கள் பெயர், உறுப்பினர் எண் விபரங்களுடன், இது உங்களது சொந்தப் படைப்பு, வேறு எங்கும் ஏற்கனவே வெளியானதில்லை என்ற உறுதிமொழியையும் சேர்த்து அனுப்பவும். தொடர்ந்து படைப்புகளை வழங்கி வருகின்றவர்கள், அறிமுகமானவர்கள் இவ்வாறு செய்யவேண்டியது இல்லை. புதிதாக படைப்புகளை அனுப்புவோர் மறவாமல் மேற்கண்ட விபரங்களைக் கொடுக்கவும்.

அறுசுவையின் முக்கிய நோக்கம் உணவு சம்பந்தமான தகவல்களைத் தருவது என்பதாகும். அறுசுவை தொடங்கிய காலத்தில் உணவு சம்பந்தமான தகவல்கள் மட்டுமே இதில் இடம்பெற்றன. காலப் போக்கில் வருகையாளர்களின் விருப்பம், தேவை அறிந்து சமையலைக் கடந்து பல்வேறு புதியப்பகுதிகள் உட்புகுத்தப்பட்டன. குறிப்பாக பெண்கள் விரும்பும் அனைத்து பிரிவுகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு ஆன்மிகம் பகுதியை அறுசுவையில் தவிர்த்து வந்தோம். தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அந்த பகுதியையும் அறுசுவையில் கொண்டு வந்துள்ளோம். எனவே, உறுப்பினர்கள் இங்கே இடம்பெற்றுள்ள அனைத்து பிரிவுகளுக்கும் தங்களது பங்களிப்பினை வழங்கலாம். உங்களது படைப்புகளை arusuvaiadmin@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது தொடர்புக்கு பக்கம் வாயிலாக எங்களுக்கு அனுப்பலாம். அவற்றை பரிசீலித்து வெளியிடும் தரத்தில் இருப்பின், அறுசுவையில் வெளியிடுவோம். இது சம்பந்தமான முடிவுகளை அறுசுவை நிர்வாகம் மட்டுமே மேற்கொள்ளும். வெளியிட இயலாத படைப்புகளை வெளியிட இயலவில்லை என்று தெரிவித்து விடுவோம். அதுகுறித்த விவாதங்களில் அறுசுவை நிர்வாகம் ஈடுபடாது.

வலைப்பதிவு பகுதியில் குறைந்த அளவில், தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்கின்றோம். இதற்கென்று சிறப்பு தகுதிகள் எதுவும் இல்லையென்றாலும், அறுசுவையில் ஒருவரது பங்களிப்பு, அவரது எழுத்தாற்றல், இதரத் திறன்களை கணக்கில் கொண்டு, அறுசுவை நிர்வாகம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்களுக்கு இந்த சிறப்பு அனுமதியை வழங்குகின்றது. எனவே, வலைப்பதிவு பகுதியில் சேர்வதெற்கென்று தயவுசெய்து யாரும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம்.

ஒரு உறுப்பினருக்கு எப்போது வலைப்பதிவு பகுதியில் சேர அழைப்பு வரும்?

வலைப்பதிவு பகுதி என்பது உறுப்பினர்கள் தங்கள் படைப்புகளை நேரடியாக சேர்ப்பதற்கு உதவிடும் ஒரு பகுதி. மற்றபடி, இதில் இணைந்துதான் அறுசுவைக்கு ஒருவர் பங்களிக்க வேண்டும் என்பதில்லை. வலைப்பதிவு இல்லாமலே ஒருவர் தொடர்ந்து அறுசுவைக்கு பங்களிக்கலாம். உங்கள் பங்களிப்பை மின்னஞ்சல் மூலமாக எங்களுக்கு அனுப்ப வேண்டும். அவற்றை பரிசீலித்து நாங்கள் சேர்ப்போம். இது மட்டுமே வித்தியாசம். எனவே, உங்கள் பங்களிப்பை தொடர்ந்து அறுசுவைக்கு கொடுத்து வாருங்கள். சில விசயங்களை உறுதி செய்து கொண்ட பின்னர், கண்டிப்பாக உங்களை வலைப்பதிய அழைப்போம். எப்போது என்று சரியான கால அளவினை குறிப்பிட இயலாது. உங்களது பங்களிப்பின் மூலம் உங்களது எழுத்தாற்றலை நாங்கள் அறிந்து கொள்ளச் செய்தால், வெகு விரைவிலேயே அழைப்பு வரும்.

உறுப்பினர்கள் லாகின் செய்த பிறகு, சமையல் குறிப்புகளின் கீழ் விருப்பப்பட்டியலில் சேர் (add to favourite) என்ற ஒரு லிங்க்கை பார்க்கலாம். இது உங்களுக்கு பிடித்தமான குறிப்புகளை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள வசதியாகும்.

உங்களுக்கு விருப்பமான குறிப்பிற்கு கீழே உள்ள அந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த குறிப்பை உங்களது விருப்பப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் உறுப்பினர் (User menu) பெட்டியில் உள்ள My favourites என்ற லிங்க்கை கிளிக் செய்தால், நீங்கள் பட்டியலில் சேர்த்துள்ள அனைத்து குறிப்புகளின் லிங்க்கையும் பார்வையிடலாம். பட்டியலில் குறிப்புகளைச் சேர்ப்பது போலவே, அதில் இடம்பெற்றுள்ள குறிப்புகளை நீக்கவும் செய்யலாம்.

புக்மார்க் (Bookmark)

இதுவும் விருப்பப்பட்டியல் போன்று கொடுக்கப்பட்டுள்ள வசதிதான். சமையல் குறிப்புகளுக்கு "விருப்பப்பட்டியல்" என்று கொடுத்து அதனை தனியே பட்டியலிட்டுள்ளோம். சமையல் குறிப்புகள் அல்லாத மற்ற கைவினைக் குறிப்புகள், கோலம், கதை, கவிதைகள் போன்றவற்றை அந்த பக்கங்களின் கீழ் உள்ள புக்மார்க்(Bookmark) என்ற லிங்க்கை கிளிக் செய்வதின் மூலம் நீங்கள் குறித்து வைத்துக்கொள்ளலாம். பின்னர், உறுப்பினர் (User Menu) பெட்டியில் உள்ள My bookmarks லிங்க்கை கிளிக் செய்து, நீங்கள் புக்மார்க் செய்துள்ள அனைத்து தலைப்புகளையும் பார்வையிடலாம். அந்த தலைப்பினை கிளிக் செய்து அதற்கான பக்கத்திற்கும் செல்லலாம்.

உறுப்பினரின் மன்ற இழைகளின் தொகுப்பு உறுப்பினர் பக்கத்தில் வரும் வசதியை புதிதாகக் கொடுத்துள்ளோம். நீங்கள் அறுசுவையில் லாகின் செய்த பின்னர், உங்களது உறுப்பினர் பக்கத்தினை திறந்தால், அதில் "இழைகள்" என்ற லிங்க்கை பார்க்கலாம். அதை கிளிக் செய்தால், நீங்கள் இதுவரை மன்றத்தில் தொடங்கிய அனைத்து இழைகளின் தலைப்புகளும் பட்டியலிடப்படும். எந்த இழையில் சமீபத்தில் பதிவுகள் வந்துள்ளதோ அந்த இழையானது முதலில் வரும். இதன்மூலம் உங்களது எந்த இழை ஆக்டிவாக உள்ளது என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். அந்த இழையினை பார்வையிடுவதும் மிக எளிது.

கருத்துக்களுக்கு பதில் வந்திருப்பின் notification கொடுக்கும் வசதியை தற்போது தர இயலவில்லை. ஆனால், முன்பு உறுப்பினர்கள் எங்கே பதிவு கொடுத்தார்கள் என்பதே அறிய இயலாமல் இருந்த நிலையை மாற்றும் வகையில் "My Comments" என்ற புதிய வசதியை தற்போது கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் உறுப்பினர்கள் பதிவு செய்த கருத்துக்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்வையிட முடியும்.

உறுப்பினர் பெட்டியில் உள்ள My Comments என்ற லிங்க்கை கிளிக் செய்தால், நீங்கள் கொடுத்த பதில்கள், எந்த இழை அல்லது எந்த படைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட பதில், எந்த தேதி என்ற தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் பதிவுகள் கொடுத்த பக்கத்திற்கு எளிதாகச் செல்லலாம். உங்களுக்கு வந்துள்ள பதில்களையும் பார்வையிடலாம்.