இந்தோனேஷிய தோழிகளின் கவனத்திற்கு

இந்தோனேஷியாவில் கிடைக்கும் டோஃடு மற்றும் கருவாடுகள் அதிக நாட்கள் கெடாமல் இருக்க ஃபார்மலின்(ஃபார்மால்டிஹைடு) ரசாயனம் பயன்படுத்தினார்கள்.அது கண்டுபிடிக்கப் பட்டு கட்டுப்படுத்தப் பட்டு விட்டாலும் இப்போது வேறு பிரச்சினை.பார்மலின் பயன் படுத்தினால் கண்டுபிடித்து விடுகிறார்கள் என்று இப்போது துணி வெளுக்க பயன் படுத்தும் ப்ளீச்சை கலக்கத் தொடங்கி விட்டார்கள்.முடிந்த வரை இங்கே கிடைக்கும் ஃப்ரெஷ் டோஃபு வகைகளையும் கருவாடுகலையும் வாங்குவதை தவிர்த்திடுங்கள்.பிளீச் கலக்கப்பட்ட கருவாட்டை பார்த்தவுடன் கண்டு பிடித்து விடலாம்.மிகவும் வெள்ளையாக இருக்கும் கருவாட்டை வாங்க வேண்டாம்.
இதை பலரும் அறிந்திருப்பீர்கள்.தெரியாதவர்களுக்காகத்தான் எழுதினேன்.

பழங்கள் காய்கறிகளையும் அழுகி விடாமல் இருக்க ஃபர்மலினில் முக்கி விடுகிறார்கள்.கவனமாக வாங்குங்கள்.பழங்களின் தோலை நீக்கி விட்டே சாப்பிடுங்கள்.

எப்படி கலப்படம் பண்ணலாம்னு ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி.சிவா,எப்படியிருக்கீங்க?தாங்க்ஸ்பா.நல்ல தகவல்.காய்கறிகளையும் விடலையாப்பா (மஞ்சள் தூள் கலப்படம்_குமுதத்தில் வந்ததுபா போன இதழில்)நம்ம மக்கள்.நீங்க சொன்னாப்பல ரூஃப் டாப் ஹோட்டல்ல ரூம் போட்டு ஓவரா சிந்திப்பாங்க போல.இவர்களை எல்லாம் மிரட்டி நல்ல ரூட்டுக்கு மாத்த ஒரு ரொம்ப ரொம்ப நல்ல( தீவிரவாதி)மனுஷர் வந்தா எப்படியிருக்கும்.நம்ம நாடு மட்டுமில்ல நம்ம உலகமே எங்கியோ போயிருக்குமில்ல!!!!!!!!என்ன செய்யுறது நம்மளை கொஞ்சம் அதிகமாகவே புலம்ப வச்சிட்டாங்கப்பா கலப்படகாரர்கள்(மரியாதையா திட்டிப்போம்)
இனிமேல் பாருங்க காய்கறிகளையும் (தங்க நகைகளை பார்த்து வாங்குறதைவிட) பத்து தபா சோதிச்சு (ஐயோ பாவம் கடைகாரருக்கு சோதனைக் காலம்)வாங்கிடுவோமில்ல!
Actions speak louder than words.

இது எல்லா ஊரிலும் நடக்குது . குறிப்பா கட்டுப்படுத்தபடாத சந்தைகளில் இருக்கு. காய் பாக்க பச்சுன்னு இருக்கணும் அதனால் தான் இப்படி செய்கிறார்கள். முடிந்தவரை ஆர்கானிக் உணவுகள் கிடைத்தால் வாங்குங்க.. அட்லீஸ்ட் குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தையின் உணவாவது ஆர்கானிகாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்க...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்