அறுசுவை கெட் டுகெதர் - ஒரு நேரடி ஒளிபரப்பு :-)

அன்பு அறுசுவை நேயர்களுக்கு,

சென்னை கீதாஞ்சலி ஹோட்டலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறுசுவை கெட் டுகெதர் குறித்த நேர்முக வர்ணனையை இந்த இழையில் தொடர இருக்கின்றோம். பங்குகொள்ள இயலாதவர்கள் இங்கே பார்த்து அனுபவிக்கலாம். இயன்றால் படங்களும் இணைக்கின்றேன்.

இன்னும் சிறிது நேரத்தில் நேரடி வர்ணனையை சென்னை திநகர் கீதாஞ்சலி ஹோட்டலில் இருந்து தொடங்கவிருக்கின்றோம். இதோ நிகழ்ச்சி தொடங்கவிருக்கின்றது.

இதுவரை வந்துள்ளவர்கள்

செல்வி மேடம் தம்பதியினர்
சுஹைனா மேடம் தம்பதியினர்
சீத்தாலெட்சுமி மேடம் தம்பதியினர் + மருமகள்
தனிஷா மேடம் தம்பதியினர் + குழந்தை
சாதிகா மேடம் + குடும்பத்தினர் இருவர்
கீதாச்சல் மேடம் தம்பி + நண்பர்
ஜெயந்தி மேடம் மட்டுமே வந்துள்ளார்
ஜெயலெட்சுமி மேடம் வந்துகொண்டே இருக்கின்றார்..

இன்னும் சிறிது நேரத்தில் மற்ற விபரங்களை தெரிவிக்கின்றேன்.

அட்மின் சார்,
நேரடி வர்ணணைக்கு ரொம்ப நன்றி. வந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்று, விழாவினை சிறப்பிக்க வாழ்த்துக்கள்.
அட்மின் சார் என் சார்பா எல்லோருகும் ஒரு ஹாய் சொல்லிடுங்க. நன்றி

இப்படிக்கு
இந்திரா

indira

அரங்கத்தில் பெண்கள் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கின்றது. ஆண்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்கின்றார்கள். இப்போது போட்டோஷ் செஷன் ஓடிக்கொண்டிருக்கின்றது. அறுசுவை குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். சுஹைனா அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட வேண்டியிருப்பதால் கொஞ்சம் அவசர அவசமாக எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்கின்றார். இன்னும் கவிதையை தொடங்கவில்லை. அவரது கவிதையைக் கொண்டு விழாவினை தொடங்க நினைக்கின்றோம். ஜெயலெட்சுமி மேடத்திற்காக வெயிட்டிங்..

மீண்டும் சிறிது நேரத்தில் வருகின்றேன்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜெயலெட்சுமி மேடம் குடும்பத்தினருடன் வந்துவிட்டார். இப்போது க்விஸ் ப்ரொகிராம் தொடங்க இருக்கின்றது. மாமி எங்களையெல்லா ஆட்டத்துல சேர்த்துக்கல. பெண்களுக்கு மட்டும்தானாம்.. :-(

என்ன நடக்குதுன்னு கொஞ்ச நேரம் கழிச்சு சொல்றேன்.

சீட்டில் நிறைய வார்த்தைகளை எழுதிவைத்து, அதை ஒவ்வொருவராக எடுக்க விட்டு, அந்த வார்த்தையைக் கொண்டு பாடல் பாடும் போட்டி.

சாதிகா மேடத்திற்கு வந்த வார்த்தை அத்திக்காய். சரியான பாடலை பாடி மதிப்பெண் பெற்றுவிட்டார்.

அடுத்து சீத்தாலெட்சுமி மேடத்திற்கு பச்சைமிளகாய் வந்தது. அது காரமில்லை என்று சரியான பாடலை பாடி மதிப்பெண் பெற்றுள்ளார்.

ஜெயலெட்சுமி மேடத்திற்கு வந்த வார்த்தை வெள்ளரிக்காய்.. அவர் பாடல் பாடவில்லை. மதிப்பெண் இழக்கின்றார்.

இன்னும் வரும்....

ஹைய்யா கெட் டுகெதர் ஆரம்பிச்சாச்சா?ஜாலிதான் கொண்டாட்டம்தான்.வருணபகவான் கருணை காட்டினாரா?

எல்லாருக்கும் என் சார்பில் ஹாய் ஹாய் ஹாய் சொல்லிடுங்க.
முடிஞ்சா ஜெ மாமியின் க்விஸ் கேள்விகளையும் போடுங்க.நாங்களும் கலந்துக்கறோம்.

இப்பவே ஒரு ஃப்ளைட்டை புடிச்சு அங்க வந்துடலாம்னு இருக்கு :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இப்போது பழமொழி சுற்று ஓடிக்கொண்டிருக்கின்றது. மாமி ஒரு வார்த்தையை கொடுத்து அந்த வார்த்தை வரும் பழமொழியை கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

இதுவரை சீத்தாலெட்சுமி மேடம், செல்வி மேடம் இருவரும் தலா பதினைந்து மதிப்பெண்கள் பெற்று முன்னிலையில் இருக்கின்றார்கள்.

என்ன பாபு இடையில் நான் கலந்து கொண்டதை போடலையே ஹா ஹாஹி

நல்ல போய் கொண்டு இருக்கு உங்கள் கமெண்ட்ஸ் நேரில் பார்ப்பது போலும் இருக்கு..
ஜலீலா

Jaleelakamal

தற்போது மூன்று சுற்றுகள் முடிந்து, அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு 5 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விபரம்

1. சாதிகா மேடம்
2. சீத்தாலெட்சுமி மேடம்
3. சுஹைனா மேடம்
4. செல்வி மேடம்
5. தனிஷா மேடம்

நிறைய நடந்துகொண்டிருப்பதால் எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை. இந்த நெட் கனெக்சன் ரொம்ப ஸ்லோ.

ஜலிலா மேடம் யு ஏ யில் இருந்தவாறே இந்த கெட்டுகெதரில் போன் மூலம் கலந்து கொண்டார். எல்லா உறுப்பினர்களுடனும் போனில் உரையாடினார். மிகவும் நன்றாக சென்றுகொண்டிருக்கின்றது.

சும்மா சொல்லக்கூடாது. மாமி இங்கே கலக்கிக் கொண்டிருக்கின்றார். :-0

மேலும் சில பதிவுகள்