நீர்க்கடுப்பு

பெண்களுக்கு அடிக்கடி வரும் நீர்க்கடுப்பு நீங்க என்ன செய்ய வேண்டும்?

அன்புள்ள ரபியா!

நீர்க்கடுப்பிற்கு உடனடி வைத்தியம் உளுந்துதான். உளுந்தை [எந்த வகை உளுந்தானாலும் சரி] ஒரு கைப்பிடி எடுத்து நன்கு கழுவிய பின் ஒரு சொம்பு நீரில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரை தொடர்ந்து பருகி வரவும். அதைக்குடித்த சற்று நேரத்திலேயே நிவாரணம் தெரியும். இது மிகச் சிறந்த உடனடி மருந்து. இதில் நிவாரணம் தெரியவில்லையென்றாலும் அடிக்கடி நீர்க்கடுப்பு வருகிறது என்றாலும் டாக்டரை அணுகவும். சர்க்கரை இருந்தாலும் அடிக்கடி நீர்க்கடுப்பு வரும்.

மனோ மேடத்தின் ஆலோசனை படி செய்து பாருங்கள்,எனது அனுபவத்தில், 20 புளியங்கொட்டயை லேசாக இடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து குடித்துவாருங்கள்,அதுபோல் ஒரு கொட்டை பாக்கு அளவு புளியை தண்ணீரில் கரைத்து அதில் சீனியை நன்கு இனிக்கும் அளவு போட்டு குடியுங்கள்,எனக்கு நல்ல பலன் கிடைத்தத்தது.

ராஃபியா... நாம நீர்கடுப்பு என்று நினைப்பது சில நேரங்களில் யூரினரி டிராக்ட் இன்பெக்ஷ்னாகவும் ( Urinary Track infection - UTI)இருக்கும் . பெண்களை அதிக அளவில் பாதிக்கும் இது. இங்க கிரான்பெர்ரி ஜூஸ் மற்றும் கிரான்பெர்ரி சப்லிமென்ட்ஸ் சாப்பிட்டா வராமல் தடுக்கலாம். இந்தியாவில என்ன செய்ய என்று தெரியலை. வந்திட்டா ஆன்டிபயாடிக் கொடுப்பார்கள். சில நாளில் சரி ஆகும்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

புளியை ஊற வைத்துக் கரைத்து, அதில், கருப்பட்டியை கரையும் வரை கலக்கி குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். வயிற்றில் நல்லெண்ணெய் தடவலாம். சின்ன டர்க்கி டவலை நனைத்து தொப்புள் மேல் போடலாம்.

அடிக்கடி வந்தால் இலா சொன்ன மாதிரி ட்ராக் இன்பெக்ஷன் ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உடனே டாக்டரைப் பார்த்து விடுங்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

மனோ மேம்,ரஸியா,சீதா மேம்,இலா குட்டி எல்லோருக்கு நன்றி என் அம்மா இந்த நீர்கடுப்பால் ரொம்ப அவச்தை படுவார்கள் உடனே சொல்லுகிறென் இதைலாம்''

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சிரிப்பே சிறந்த மருந்து
என் மேல் அக்கறை கொண்டு சிகிச்சைகளைத் தெரிவித்த தோழிகளுக்கு எவ்வளவு சிரமமாக இருந்தாலும் நான் நன்றி தெரிவித்தே ஆக வேண்டும். நேற்றிலிருந்து நீர்க்கடுப்போடு காய்ச்சலும் சேர்ந்து கொண்டது. டாக்டரிடம் சென்று யூரின் கல்சர் டெஸ்ட் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். காய்ச்சல் இல்லாமல் இருந்தால் நீங்கள் சொன்ன மருந்துகளைச் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அப்படித்தானே தோழிகளே.

சிரிப்பே சிறந்த மருந்து

ஹாய் ராபியா ,நீர்கடுப்பிற்கு, கொஞ்சம் சுண்ணாம்பு எடுத்து காலின் கட்டை விரல் நகம் இரன்டிலும் வைத்தால் சரியாகும், என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள். செய்து பாருங்கல்.
*****நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.*****
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

சிரிப்பே சிறந்த மருந்து
மிகவும் நன்றி பஜீலா. உடனே செய்து பார்க்கிறேன்

சிரிப்பே சிறந்த மருந்து

என்னால் கேக்காமல் இருக்க முடியல..நான்மெயில் போட்ட யார்டயும் பதில் வர்ல:-)..நீர்கடுப்புனா என்ன?

ஹாய் தளிகா ,நீர் கடுப்பு'னா என்ன? உன்க டவுட் தீர்ந்ததா?
***அன்புடன் பஜீலா***

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேலும் சில பதிவுகள்