பல் வலி உதவுங்கள்

பல் வலி உதவுங்கள்!எனக்கு வாய் திறக்க முடியவில்ளல. சாபிட முடியவில்ளல. வாய் திறந்தால் வாலிக்கற்து. Please help me.

ஜெய்ஸ்ரீ எதனால் வலி? சொத்தை பல்லா, இல்லையானு தெரியலை...எதுக்கும் நீங்க வெதுவெதுப்பான தண்ணிலே உப்பு போட்டு கொப்பளிங்க கொஞ்சம் நல்லா இருக்கும்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாய் ஜெய்ஸ்ரீ,
நீங்க இந்தியாவில இல்லாததால் நிறைய வைத்தியம் சொல்ல முடியலை.
சொத்தை பல் என்றால் பல்லின் மேல் தேன் தடவலாம்.
கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளிக்க வலி குறையும்.
கிராம்பை பொடித்து வலி உள்ள பல்லின் மேல் வைக்க உடன் பலன் கிடைக்கும். அப்படியேவும் கன்னத்தில் அடக்கி வைக்க வலி குறையும்.
ஐஸ் ஒத்தடம் கொடுக்க வலி குறையும். ஐஸை ஒரு துணியில் சுற்றி வலி உள்ள இடத்திற்கு மேல் கன்னத்தில் வையுங்கள்.
இது இரண்டும் சாத்தியம்னு நினைக்கிறேன். சொத்தை இல்லாமல் கடைவாய்ப்பல் முளைப்பதற்கு வலித்தாலும் ஐஸ் ஒத்தடம் நன்கு கேட்கும்.
ஏதாவது பெயின் கில்லர் போடுங்கள்.
அன்புடன்,
சசல்வி.

அன்புடன்,
செல்வி.

சிரிப்பே சிறந்த மருந்து
துளசி உப்பு மிளகு மூன்றையும் நன்றாக நசித்து அதில் கொஞ்சம் எடுத்து வலியுள்ள இடத்தில் வைத்து கடித்துகொண்டிருந்தால் வலி குறையும். இதை அடிக்கடி செய்யலாம். விக்சை எடுத்து வலியுள்ள் இடத்திலும் கன்னத்தின் மீதும் தடவினாலும் அவ்வ்ப்போது வலி குறையும்.

சிரிப்பே சிறந்த மருந்து

கிராம்பு தைலம் தடவலாம் . ///
கோடாரி தைலம் (axe oil) காட்டன், பன்சில் நனைது பல்லில் வைத்து கடித்துகொண்டிருந்தால் சரியாகும் என்று சொல்வார்கள்.
செய்து பாருங்கல்.
****நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.****
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மஞ்சள் தூளை வைத்து கடிக்கலாம்..சுடு நீரில் உப்பு கலந்து கார்கெல் பன்னலாம்...ஆனால் எப்பவும் பல் கேஸ் என்றால் முதலில் டாக்டரிடம் ஓடுவது நல்லது.மவுத் வாஷ் இருந்தால் ஒரு சொட்டு விடலாம்.இபுப்ரோஃபென் சாப்பிடுங்க பலன் கிடைக்கும்...மஞ்சள் தூள் சேர்த்து ஆவி பிடிங்க நீர் கோர்த்ததால் வரும் பல்வலி போகும்

நன்றி ஹாஷினி செல்வி rabiasarfudin fajeela farveen thalika

System problem அதனால் தான் நன்றி சொல்ல முடியவில்லை.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Hello sir,

My grandma is affected teeth pain...We checked in many hospital during the year 2010....One of them recommended some tablets to take for the pain....At that time pain reduced but after one month she got the same pain.........she is difficult to manage the pain.....what we can do? Anyway to reduce the pain....

மேலும் சில பதிவுகள்