ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 32)

எல்லோரும் இங்கே வாங்கப்பா போன பாகம் 100 ஐ தாண்டி விட்டது!!!

ஹாய் பரிமளா, ஜெயல்க்ஷ்மி மாமி, இலா, கவி, மர்ழியா, உமா & எல்லாருக்கும்.... பெரிய ஹாய். நேத்து கொஞ்சம் வேலை அதிகம், அதான் வந்து உங்களோட பேச முடியல.

உமா... நல்லா தூங்குங்க இந்த நேரத்துல. இந்த மாதிரி நேரத்துல தூக்கம் வற்றது கஷ்டம், ஆனா தூங்கி தான் ஆகனும். "ஓம்" சொன்னா நல்லதுன்னு சொல்லுவங்க. உங்களுக்கும், குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராகும், நல்லா தூக்கம் வரும். இது கடவுள் சம்பந்த பட்டது இல்ல, அறிவியல் பூர்வமா நிரூபிக்கப்பட்டது. சுகப்பிரசவம் ஆகவும் உதவும். :)

எல்லாரும் நல்லா இருகீங்கலா?! பரி.... சாரிங்க, நேத்து நீங்க பதிவு போட்டும் என்னால பதில் போட முடியல சரியா. வாங்க இன்னைக்கு.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாமரை நான் நல்லா இருக்கேன்பா. உங்க குட்டி பையன் எப்படி இருக்கான். ஆஹா எனக்கு பார்ட்டியா? ஓகே நான் ரெடி. நீங்க ரெடியா?

வனிதா என்ன வேலை இருந்தாலும் அருசுவை பக்கம் வராம இருக்கலாமா? நான் காலையில் எழுந்ததும் என் ஹஸ்கூட பேச உட்காருவேன்.அவர் வர வரை அருசுவைதான் எனக்கு ஒரு வடிகால்.டீ, சாப்பாடு எல்லாம் லேப்டாப் முன்னாடி தான். இவர் தான் அங்க இருந்து கத்துவார் ஏ அதுல கொட்டிடாதன்னு (நாம எப்போ யார் பேசுறதை காதில் வாங்கியிருக்கோம்!!!) .

மேனகா என்னப்பா எப்படி இருக்கீங்க? சம்மந்தியை இப்பவே மிரட்டிவச்சிருக்கீங்க!!. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

இந்த கெட் டு கெதர் பார்த்ததில் இருந்து எனக்கும் எல்லாரையும் மீட் பண்ணனும்னு ஆசையா இருக்குப்பா? எல்லாரும் இந்தியா வரும் போதும் சொல்லிடுங்க கட்டாயம் நாம மீட் பண்ணலாம்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் எல்லொருக்கும்
எப்படி இருகிகீங்க என்னமா பச்சமண்ணு எப்படி இருகீங்க,

தாமரை எப்படி இருகீங்க (கோவிச்சுகாதீங்க) நாந்தான் உமாக்கிட்ட சொல்லி உங்கள விசாரிக்க சொன்னேன் சொல்லைலயா அவங்க!!!!!

மர்ழியாங்கோ எங்கங்க ஆளையே கானோமுங்க,மரியத்தோட உடம்பு எப்படி இருக்கு,மெயில் பண்ணீருக்கேன் பாருங்க.

மேனகா மேடம் உங்க ஹஸை தமிழ திட்டறது போதாதுனு தெலுங்கல வேற திட்டுனுமா,பாவம் அவரு எத்தனை கஷ்டத்தைதான் தாங்கிக்குவாரு???

வனிதா வேலையெல்லாம் முடிஞ்சுதா ?

பச்சமண்ணு நல்லாத்தான் இருக்கு (நக்கலுக்கு மறுபேர் கவியோ.டிக்ஷ்னரியில் பார்த்து சொல்லுங்கப்பா).

மேனகா உங்களுக்கு தெலுங்கு தான தெரியனும் நான் சொல்லித்தரேன் (அம்மா தெலுங்கு தான்பா). நானும் இப்படி தான் என் ஹஸ் முன்னாடி எங்கம்மாகிட்டே தெலுங்கில் பேசுவேன். இவருக்கு வர கோபத்தை பார்க்கனுமே அட அட அட!!!!! (அத ரசிக்க எனக்கு ரெண்டு கண் போதாது).

நாங்கள் திருப்பதி போகும் போது யாராவது தெலுங்கு பேசுறவங்க கிடைச்சா போதும் நான் இவர் முன்னாடி பீலா விடுவேன். பின்ன என்னப்பா டெல்லி போகும் போது எல்லார் கிட்டயும் ஹிந்தியில் பேசி இவர் அலட்டுவார்.நான் என்னன்னு கேட்டா சொல்லாம பிகு பண்ணுவார் (அதுக்கு நான் இப்படி பழி வாங்கிடுவேன்.எப்படி என் சாமர்த்தியம்).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

வனிதா நீங்கள் சொன்ன ’ஓம்’மேட்டரைப்பாத்த உடன லைபிரறிக்கு போற அவ்சரத்தையும் மறந்து பதில் சொல்ல வந்துட்டன்.

இலங்கைல தமிழ் பேசுற எல்லா வீட்லயும் [தலைநகரத்தில் வாழும் இந்திய வம்சாவ்ளியினர் தவிர] இந்த ஓம் எண்ணுக்கணக்கில்லாம ஒலிக்கும்.இது எங்கள் நாட்டில் மதசார்பான வார்த்தை கிடையாது.
நீங்கள் சொல்லும் ஆமா என்பதை நாங்கள் ஓம் என்போம் சிலர் ஓய் என்பார்கள்.
கூப்பிட்டால் ஓம் வாறன் என்போம்.பேசத்தொடங்கும் போது ஓம் அப்படிதான்.ஓம் ஆனால் என்று தொடங்குவோம்.

ஆனால் அறுசுவையில் எழுதும்போது பழக்க தோசத்தில் ஓம் என்று எழுதிவிட்டு சரிபார்க்கும் போது அழித்து பழக்கமே இல்லாதா ஆமா என்ற வார்த்தையை எழுதுவேன்.

மொத்ததில் எல்லா மதத்தினரும் உபயோகிக்கும் பேச்சுவழக்கு.
ஏனெண்டா ஆராவது தப்பா விளங்கி சண்டைக்கு வந்தாலும் எண்டு பயம்.சரி நான் பிறகு வாறன்.

சுரேஜினி

சுரேஜினி நிஜம்மா சொல்றேன் உங்கள் இலங்கை தமிழ் கேட்கவே இனிமையா இருக்கு. 1000 சொல்லுங்க... தமிழ் தமிழ் தான். அதை எப்படி பேசினாலும் கேட்க இனிமையா தான் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னை விசாரித்த அனைவருக்கு நன்றிப்பா என் பொண்ணுக்கு இன்னும் சரியாகலப்பா நைட்டானா பீவர் வருது மருந்து கொடுத்தா போய்டுது...மறுநாள் அப்படியே வருது..அதோட லூஸ் மோஷன் இன்னும் சரியாகல எனக்கோ சைனஸ் கோல்ட் பாடா படுத்துது...செட்ஜிந்தான் யூஸ் செய்வேன் நல்லா கேட்கும் ஆனா இப்ப அதைலாம் சாப்ட முடியாதே!!

என் பொண்ணுக்கு இப்ப சரியாகிடும் அப்ப சரியாகிடும்னு பார்த்தேன் ஒன்னுக்கு 2 டாக்க்டர்ட்டயும் போயாச்சு ஆனா எதுமே கேட்கல..எனக்கு ஒரே கவலைப்பா சில நாட்கள் வரமாட்டேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஒரு ஹாய் எல்லா பிரெண்ட்ஸ்"க்கும்.
மர்ழியா உங்க உடம்பை கவனிங்க. நீங்க செக்கப் போகும் டாக்டர்"ட்டயே போங்க.மரியம்"கும் சரியாகிடும், மருந்தை கொடுங்க. நபில் 2 ரக்காத் தொழுதுகங்க , துவா கேளுங்க அல்லாஹ்"ட்ட. கவலைப்பட வேன்டாம். இன்ஷா அல்லாஹ் நல்லாயிடும்..
**அன்புடன் பஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

பச்ச மண்ணு உமாகாரு எப்படி இருக்கிங்க,வயிறு எப்படி இருக்கு?தெலுங்கு தெரியுமா,பாகுனோரா,ஏமி எக்காட,மாட்லாடுவோம் இதை தவிர வேறு வார்த்தை தெரியாது.பாப்பா நல்ல இருக்கா.தூங்கிட்டு இருக்காங்கா.இருக்குற ரெண்டு கண்ணுல ஒழுங்க பார்க்க முடியல,இதுல நிறைய கண்ணு வேணுமா உமாகாரு.

கவி.எஸ் எப்படி இருக்கிங்க,ஷாம் நம்ம மருமகன் எப்படி இருக்கார்.அதெப்படிப்பா எல்லாத்துலயும் முத ஆளாஇருக்கிங்க.அதிரா சமைத்து அசத்தலாம் பகுதியிலும் உங்களைத்தான் கூப்பிட்டாங்க.மர்ழியும் டாக்டரான முதல் வைத்தியம் உங்களுக்குத்தானாம்.இதெல்லாம் எப்படி கவி????

அருண்பாலா நானும் என் பொண்ணும் நலம்.நீங்களும் உங்க பிள்ளைகளும் எப்படி இருக்கிங்க?அதிராவுக்கும்,ரேணுவுக்கும் மட்டும் காபி எங்களுக்கெல்லாம் கொடுக்க மாட்டீங்களா.

சுகன்யா நெட் கனெக்‌ஷன் வாங்கி சீக்கிரம் வாங்க இல்லைன்னா உங்களை காணமா போனவங்க பட்டியல்ல சேர்த்திட போறாங்க.

நம்ம ஜெயா அத்தை இன்னும் விருந்து மயக்கத்திலிருந்து தெலியலையா?ஜெயா நீங்களும் உங்க பிள்ளைகளும் சோக்கா இருக்கிங்களா.

மர்ழி ஆளே காணோம்.ஒரு வேளை உண்மையாகவே டாக்டருக்கு படிக்க போயிருக்காங்களா???

தாமரை மாமி நீங்களும்,சந்தோஷ் மருமகனும் எப்படி இருக்கிங்க.சீக்கிரம் வாங்க,அம்மணி ரொம்ப பிஸியோ???

மற்ற எல்லா தோழிக்கும் ஒரு ஹாய்ய்ய்!!!

கவி பாருங்கப்பா இந்த மேனகாவை ஒரு பொண்ணை வச்சுக்கிட்டு எல்லாரையும் மருமகனேன்னு கூப்பிடுறாங்க (தாமரை கவனிங்கோ!!!).

மேனகா நீங்க எப்படிப்பா இருக்கீங்க. தெலுங்குல நாம மாட்லாடுனா இந்த பொண்ணுங்க கட்டைய தூக்கிடுவாங்கப்பா (அதுலயும் இந்த கவியை நம்ப முடியாது).

மர்ழி குழந்தைய பத்திரமா பார்த்துக்கோங்கப்பா. பாவம் நம்மலாலயே தாங்கமுடியாது. அவளுக்கு எப்படி இருக்கோ. நீங்க கவலைப்படாதீங்க. நீங்களும் உடம்பை நல்லா கவனிச்சுக்கோங்க. அடுத்து நீங்க நாங்க நல்லாயிட்டோம்னு பதிவை போடுங்க. அதுவரை நல்லா ரெஸ்ட் எடுங்க.

சுரேஜினி எனக்கும் இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும்பா. என்ன அழகு தமிழ். அதுக்காகவே கமல் நடிச்ச தென்னாலி விரும்பி பார்ப்பேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்