கெட்டுகெதர் - மேலும் சில படங்கள்

கெட்டுகெதர் குறித்த சிறப்பு பக்கத்தில் அதிக படங்கள் சேர்க்க இயலவில்லை. அதற்காக சில படங்களை இங்கே இணைக்கின்றேன். எங்களுடைய கேமராவில் விடுபட்டு போன நல்ல தருணங்கள் எதுவும் அங்கு வந்திருந்த மற்ற உறுப்பினர்கள் கேமராவில் பிடிபட்டிருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும். அதனையும் இங்கே வெளியிடுகின்றேன்.

மதிய உண(வுண்டு)வருந்தும் நேரம்.

கெட்டுகெதரின் ஹைலைட்டான க்விஸ் ப்ரோகிராம். மாமி அவர்கள் சிரத்தையுடன் தயார் செய்து வந்து சிறப்பாக நடத்தினார்.

திருமதி. தனிஷா அவர்களின் கணவர். மிகவும் உற்சாகமான மனிதர். P.C.Sriram ஆக மாறி, வீடியோ கேமராவைக் கொண்டு கெட்டுகெதரை படமாக்கிக் கொண்டிருந்தார்.

மற்றுமொரு P.C.Sriram, நிகழ்ச்சிகளை படமெடுத்துக்கொண்டிருக்கின்றார்.

மாமியோட க்விஸ் கேள்விக்கு சகோதரி சாரதா ரொம்ப யோசிக்கின்றார்.

அமைதியா அப்பாவியாட்டம் உக்காந்து இருக்கிற இவங்கதான் புளிக்கும், புலிக்கும் என்ன வித்தியாசம் ங்கிற மாதிரி கேள்வியெல்லாம் அறுசுவையில கேக்குறது.

சாயங்கால ப்ரொகிராமில குட்டீஸ்ஸோட பரதநாட்டியம் ஒரு ஹைலைட்.

3 குட்டீஸ்

அந்த பொண்ணுங்க பாப்பியை விடவே இல்லை. பெரிய பொண்ணு பாப்பிக்கிட்டே வந்து ஆண்ட்டி.. ஆண்ட்டி.. நான் கோபமா இருக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுங்கன்னு சொல்லி கொடுத்த போஸ் இது..

அக்கா எது செஞ்சாலும் அதையே செஞ்சுக்கிட்டு இருந்த தங்கச்சி, தானும் வந்து நானும் கோபமா இருக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுங்கன்னு கொடுத்த போஸ்.. ரொம்ப கோபமா இருக்காங்கல்ல..

அந்த குட்டீஸ்ங்களை பாத்துட்ட நம்ம செல்வியக்கா, நானும் கோபமா இருக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுன்னு சொல்ல...

செல்வியக்கா கோபத்தை பாத்துட்டு நம்ம அப்ரா குட்டிக்கும் கோபம் வந்துட... எல்லாம் கோப மயம் போங்க.. :-)

முதல் பரிசு வாங்குனவங்களை மட்டும் போட்டுட்டு இரண்டாவது மூணாவது பரிசு வாங்கினவங்களை போடலேன்னா சாமி கண்ணைக் குத்துமாம். இதோ இரண்டாவது பரிசு வாங்கும் நம்ம செல்வி அக்கா.

பயப்படாதீங்க.. இது மூணாவது பரிசு வாங்கின தனிஷா.. போட்டோ போடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதானாலத்தான்..

தனிஷாவின் கணவர்

அமைதியாய் அமர்ந்து நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருக்கும் சுஹைனாவின் கணவரும், செல்வியக்கா கணவரும்.

கெட்டுகெதர் முடிந்த இரண்டாம் நாள் திருமதி. ஸாதிகா அவர்கள் எங்கள் இருவரையும் அவர் இல்லத்திற்கு அழைத்து ஒரு விருந்து கொடுத்தார். எவ்வளவு நாள் கோபமோ தெரியவில்லை. பாப்பி வடிவேலு போல் சொன்னதை சொல்ல வேண்டுமென்றால், "போட்டு தெணறத் தெணற சாப்பிட வச்சுட்டாங்கப்பா.." நாங்க என்ன சாப்பிட்டோம்ங்கிறதையெல்லாம் இங்க வெளியிட்டு உங்க வயித்துலயும் புகையை.. ஸாரி.. பசியை கிளப்பலேன்னா எப்படி எங்களுக்கு செரிக்கும்.. அதுக்காகத்தான் இந்த பதிவு..

எல்லாம் டேபிள்ல ரெடியா இருக்கு

சிக்கன் பிரியாணி, தம் போட்டு செஞ்சதாம்.. ரொம்ப அருமையா இருந்துச்சு. அதுல ரைஸ்ஸைவிட சிக்கன் தான் அதிகம் இருந்துச்சு. எனக்கு மட்டுமே ஒரு கிலோ சிக்கன் வச்சிருப்பாங்க..

எனக்கு ரொம்ப பிடிச்ச சிக்கன் லாலி பாப், கொஞ்சம் வித்தியாசமா செஞ்சிருந்தாங்க. KFC சிக்கன் ஸ்டைல்ல, நம்ம டேஸ்ட்ல இருந்துச்சு. இதுல வேற ஒரு நாலு பீஸ் எடுத்து வச்சுட்டாங்க..

எண்ணெய் கத்தரிக்காய், இதுவும் ரொம்ப பிடிச்ச ஒண்ணு. அதுவும் இஸ்லாமிய இல்லங்கள்ல செய்யறதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கோபி மஞ்சூரியன்... டேபிள்ல சிக்கன், மட்டன்னு குவிஞ்சு இருக்கிறப்ப வெஜிடேரியன் பக்கம் கை போக தயங்குனுச்சு. இருந்தாலும் அவங்க கோவிச்சுக்க கூடாதேன்னு ஒரு ப்ளேட் மட்டும் சாப்பிட்டேன். பாப்பிக்கு இதுதான் ரொம்ப பிடிச்சிருந்துச்சு.

மட்டன் க்ரேவி, இது புல்கா ரொட்டிக்கு பக்க உணவு. ரொம்ப ரொம்ப டேஸ்டா இருந்துச்சு. ஆனா இதை மட்டும் தனியா சாப்பிட்டு இருந்திருந்தா ஒரு வெட்டு வெட்டி இருக்கலாம். ஏற்கனவே சிக்கன் பிரியாணி தொண்டை வரைக்கும் இருந்துச்சு. இருந்தாலும் விடலை.

முட்டை.. இது பெரிய ஸ்பெஷல் இல்லேன்னாலும் பிடிச்ச ஐட்டம்தான். ஆனா, அன்னைக்கு ஒரு சின்ன முட்டையைக்கூட உள்ளே தள்ளுற அளவுக்கு இடம் இல்லாம போச்சு. நான் திணறுவதை பாத்துட்டு ஸாதிகா மேடமே முடியலேன்னா வச்சுடுங்கன்னு கடைசியா ஒரு வார்த்தை சொன்னாங்க.. அதை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கணும்.

வெங்காயப் பச்சடி.. இதுகூட எங்களுக்கு தெரியாதான்னு கேள்வி கேக்குறீங்களா? வெங்காயப் பச்சடி உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா அதை மேலே படத்துல உள்ள பிரியாணியோட சேர்த்து சாப்பிடுறப்ப எவ்வளவு ருசியா இருந்துச்சுன்னு உங்களுக்கு தெரியுமா? இதையெல்லாம் வார்த்தையில சொல்ல முடியாது. அனுபவிக்கணும்.

இதைத் தவிர புல்கா ரொட்டி, ஜூஸ், புட்டிங், கூல் டிரிங்க்ஸ், ப்ரூட்ஸ் னு கொடுத்து திணற அடிச்சிட்டாங்க. எக்ஸ்ட்டர்னல் ஹார்டு டிஸ்க் மாதிரி சீக்கிரமே யாராவது எக்ஸ்டர்ன்ல் ஸ்டமக் ஒண்ணு கண்டுபிடிச்சா ரொம்ப வசதியா இருக்கும். இன்னும் ஒரு மாசத்துக்கு நான் சிக்கன், மட்டன் பக்கமே போக முடியாத அளவுக்கு பண்ணிட்டாங்க..

பாபு அண்ணா இது எல்லாம் உங்களுகே ஞயமா இருக்கா :-(... இந்த போட்டோஸ் எல்லாம் பாத்ததும் வயிரு எல்லாம் எரியுது...ம்ம்ம்

ஸாதிகா மேடம் நான் எப்போ உங்க வீட்டுக்கு வரட்டும்!!!!

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

கெட்டுக்கெதருக்கு சென்ற மகா ஜனங்களே ஸாதிகா அக்கா உங்களையெல்லாம் பிஸ்கட்டோட கட் பண்ணீட்டு முக்கியமானவங்களை தனியா கவனிச்சு இருக்கிறாங்கோ[ ஏதோ என்னால முடிஞ்சது கொழுந்து விட்டு எரிஞ்சா சரி]

கெட்டுக்கெதரில் பங்குபற்றாதவர்களுக்கான போட்டிக்கேள்விகள்

1.அம்பெலிஃபெர என்ற தாவரக்குடும்பத்தை சேர்ந்த கரட்டின் பிறப்பிடம் என்ன?

2.கரட்டிலுள்ள சத்துக்கள் என்ன?
3.கரட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்ன?
4.கரட்டை சமைக்கும் போது பின்பற்ற வேண்டியவை எவை?
5.கரட்டை எப்படி பாதுகாப்பது?
6.கரட்டின் கன்னடப்பெயர் என்ன?

சுரேஜினி

கேரட்டின் புகுந்த வீடு எதுன்னு கேட்டா கரெக்டா சொல்லிடுவேன்.அருசுவைதான்!
அருசுவையின் முதல் பக்கத்தில் இடம்பிடிக்க வேண்டிய அனைத்து சத்துக்களும் கேரட்டில் மட்டும்தான் இருக்கிறது
கேரட் வாங்கும் போது அருசுவையின் முதல் பக்கத்தை ப்ரிண்ட் செய்து கையில் வைத்துக் கொண்டு ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும்
அருசுவையில் உள்ள கேரட் குறிப்புகளை மட்டும்தான் சமைக்க வேண்டும்.மற்ற குறிப்புகளை சமைத்தால் கேரட்டுக்கு கோபம் வந்து விடும்.
கேரட்டை வாங்கி வந்து அருசுவை டீமிடம் கொடுத்துவிட்டால் எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் கெடாமல் பாதுகாத்து தருவார்கள்

கேரட்டின் கன்னடப் பெயர் கேரட்டூ

அட்மின் அடிக்க வர்ரதுக்குள்ள எஸ்கேப்....

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹும்ம்ம்ம்ம்ம்... அப்புறம்..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

என்னது 3 குட்டீஸா?? சரியா போச்சு. பால விவாகம் செய்த இந்த மாமாவை சீக்கிரம் வந்து பிடிங்க போலீஸ் மாமா..

இது வெங்காய பச்சடினு ஏன் வெளிப்படையா சொல்லிருக்கீங்கனு எனக்கு தெரியுமே.. இல்லனா அதிரா வந்து அது என்ன வெங்காயா பாலானு ஏதாவது சொல்லுவாங்க.. அந்த பயம் தானே?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

அட்மின் தான் உண்ட இன்பத்தை அருசுவையும் பெற இணைத்த விருந்து போட்டோ அருமை.விருந்து சாப்பிட்ட திருப்தி எங்களுக்கும்.ஸாதிகா அந்த எண்ணை கத்திரிக்காய் ரெசிப்பியை கொஞ்சம் போடுங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எல்லாம் சாப்பிட்டீங்க விளையாடினீங்க ஆல்ரைட். புது தளமும் அன்னிக்கு தன் திறப்பு விழானு சொன்னீங்களே என்ன ஆச்சு மிஸ்டர் பாபு மாமா? நான் வராதனால அன்னிக்கு வேண்டாம்னு முடிவா? ;D

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

அன்பு சுரேஜினி,
பாபு மட்டும் இல்ல. நாங்களும் ஸாதிகா வீட்டு சமையலை சாப்பிட்டோமே! என்ன, போட்டோ தான் எடுக்கலை. கெட் டு கெதர் அன்று காலையில் நேரமே சென்னை போய் விட்டோம். யாருமே வராம நாம் மட்டும் போய் என்ன செய்யிறதுன்னு ஸாதிகாவுக்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாக சொன்னவுடன், ஒரு கிரகப்பிரவேசத்திற்கு போனவங்க எங்களுக்காக அவசரம் அவசரமாக வந்து விட்டார்கள்.
காலை டிபன் இடியாப்பம், சிக்கன் கிரேவி, மட்டன், உருளைக்கிழங்கு ஃபிரை, மாசி சம்பல், ஜாங்கிரின்னு அசத்திட்டாங்க. நான் அன்று தான் முதன் முதலா மாசி சாப்பிட்டேன். என்னவர் அங்கு பிடித்த பிடியில் மதிய சாப்பாடு சரியாவே சாப்பிடலை.
எப்படி, எல்லோருக்கும் இன்னும் கொஞ்சம் புகை வருதா;-)0
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அனைத்து கேள்விகளுக்கும் அசத்தலான பதில்களைக்கொடுத்த நம்ம கவிசிவாவின் பரிசு எங்கே ஜெ மாமி. படத்தில நல்ல சுமாட்டா இருக்கிறீங்கள்.பரிசைக்குடுங்கோ.

செல்வி அக்கா உங்கள பெயர்சொல்லியே கூப்பிடலாம்போல இருக்கு உங்களோட போட்டோவ பாக்க.நான் யோச்சு வச்சிருந்தமாதிரியே சிரிச்சமுகம் .

//காலை டிபன் இடியாப்பம், சிக்கன் கிரேவி, மட்டன், உருளைக்கிழங்கு ஃபிரை, மாசி சம்பல், ஜாங்கிரின்னு அசத்திட்டாங்க. //
நல்லா கிளப்பிறாய்ங்கப்பா வகித்தெரிச்சல.

ஸாதிகா அக்கா எப்ப வரட்டும்???

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்