தோசை

தோசை மீந்துவிட்டால் அதனை உபயோகமாக என்ன செய்யலாம்? யாராவது சொல்லுங்கள்

மீதமான தோசையை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்ந்த பின் மிக்ஸியில் சிறிய துண்டுகளாக பிய்த்துப் போட்டு சுற்றினால் தோசை பூந்துருவலாக வந்து விடும்.வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி மிளகாய் பொடி உப்பு சேர்த்து கிளறி பொடித்த தோசையையும் சேர்த்து கிளறினால் தோசை உப்புமா ரெடி.தேங்காய் பிடிக்குமென்றால் தேங்காய் துருவலும் சேர்த்துக் கொள்ளலாம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Thosai upma super

ஹாய் கவிசிவா நன்றி தோசை உப்புமா ஐடியா சூப்பர் nisha

நிஷா

நல்ல ஐடியா கவி.
இமா

‍- இமா க்றிஸ்

தோசையை சின்ன சின்னதாக வெட்டிக் கொண்டு, வெங்காயம், தக்காளி வதக்கி மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கலர், சோயா சாஸ், தக்காளி சாஸ், வெட்டிய தோசை, சிறிது சர்க்கரை சேர்த்து கிளறி இறக்க சுவையான சில்லி தோசை ரெடி. இது என் பையனோட கண்டுபிடிப்பு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்