வாழ்த்து அட்டை செய்முறை - 2

தேதி: December 6, 2008

5
Average: 5 (2 votes)

நமது நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நாமே வாழ்த்து அட்டைகளை செய்து கொடுப்பது நமக்கும் அவர்களிற்கும் மகிழ்ச்சியை தரும். இங்கு எளிமையான முறையில் சில வாழ்த்து அட்டைகளை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த வாழ்த்து அட்டைகள் செய்முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

 

வெறும் வாழ்த்து அட்டைகள் or (காட்போட் அட்டைகள்)
வர்ண காகிதங்கள்
டிசைனர் கத்தரிக்கோல்கள்
கத்தரிக்கோல்
பூப்போடும் நூல்
ரிப்பன்கள்
ஸ்டிக்கர்கள்
போம் பூக்கள் (foam flowers)
குந்தன், சம்கி

 

மேலே குறிப்பிட்டுள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள வர்ண காகிதங்கள் கடைகளில் கிடைக்கும், அல்லது பரிசு பொருட்கள் சுற்றி வரும் வர்ண காகிதங்களை பயன்படுத்தலாம். ஸ்டிக்கர்களுக்கு பதிலாக சின்ட்ரெல்லா, ஸ்னோவைட், பூக்கள், பூச்சிகள் போன்றவற்றின் படங்களை குழந்தைகளின் பழைய புத்தகங்களிலிருந்தும் வெட்டி ஒட்டலாம்.
புத்தாண்டு வாழ்த்து அட்டை: இதற்கு பழைய இன்விடேசன் அட்டைகளில் (கல்யாணம், பிறந்தநாள் etc.) உள்ள சுவாமி படங்கள் மற்றும் அதில் உள்ள கரைகளை(border) பயன்படுத்தலாம்.
ஒரு சாதாரண வாழ்த்து அட்டையில் ஒரு பழைய இன்விடேஷனில் உள்ள கரை பகுதியை வெட்டி மேற்பக்கத்தில் ஒட்டவும். பின்னர் சுவாமி படம் ஒன்றை வெட்டி நடுவில் ஒட்டவும். பின்னர் எழுத்து ஸ்டிக்கர்களினால் வாழ்த்தினை எழுதவும். எளிதில் செய்யும் வாழ்த்து அட்டை தயார். அதன் உட்புறத்தில் விருப்பமான வாசகத்தை எழுதிக் கொள்ளலாம்.
பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள்: ஒரு வர்ண காகிதத்தின் பின்புறத்தில் சிறிய பூக்களின் படத்தை வரைந்துக் கொள்ளவும்.
பின்னர் அந்த பூக்களை அதே வடிவத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அவற்றை ஒரு குஷனின் மேல் வைத்து அடியில் வளைந்திருப்பது போன்ற ஒரு பேனாவினால் இதழ்களின் நடுவில் சிறிது அழுத்தி விடவும்.
இப்போது பூக்கள் சற்று குவிந்து பார்க்க 3D போல் இருக்கும். இதைப் போல் தேவையான பூக்களை செய்துக் கொள்ளவும்
பின்னர் டிசைனர் கத்தரிக்கோலினால் வர்ண காகிதங்களை மெல்லிய நீள துண்டுகளாக வெட்டவும்
வாழ்த்து அட்டை 1: ஒரு வாழ்த்து அட்டையில் வலப்பக்க ஓரத்தை டிசைனர் கத்திரிக்கோலை வைத்து வெட்டவும். மறுபக்கத்தில் நறுக்கி துண்டுகளாக வைத்திருக்கும் வர்ண காகிதத்தை தேவையான அளவாக வெட்டி கரை(பார்டர்) போல் ஒட்டவும். நடுவில் 3D பூக்களை ஒட்டி அதன் நடுவில் குந்தன் கற்களை வைத்து ஒட்டவும். பூப்போடும் நூலைக் கொண்டு காம்பு போல் ஒட்டவும். பின்னர் அடியில் ரிப்பனில் செய்த போவை (bow) வைத்து ஒட்டவும். மேலே வாழ்த்து ஸ்டிக்கரை வைத்து ஒட்டவும், அல்லது எழுதவும்.
வாழ்த்து அட்டை 2: ஒரு வாழ்த்து அட்டையின் இடப்பக்க ஓரத்தில் நறுக்கி வைத்திருக்கும் வர்ண காகிதத்தை வைத்து ஒட்டவும். அட்டையின் நடுவில் 3D பூக்களை வைத்து ஒட்டவும். பின்னர் இலைகள் மற்றும் நரம்புகளை பச்சை நிற ஸ்கெச் பேனாவால் வரையவும். அட்டையின் மேற்புறத்தில் வாழ்த்தினை எழுதவும்.
வாழ்த்து அட்டை 3: ஒரு வாழ்த்து அட்டையின் இடப்பக்க ஓரத்தில் நறுக்கிய வர்ண காகிதத்தை ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஒட்டவும். பின்னர் அட்டையின் நடுவில் போமில் நறுக்கிய பூக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சு ஸ்டிக்கர்களை ஒட்டி அலங்கரிக்கவும். மேற்புறத்தில் வாழ்த்தினை ஒட்டவும்
வாழ்த்து அட்டை 4: வாழ்த்து அட்டையின் மேற்புறத்தில் வாழ்த்து ஸ்டிக்கரை ஒட்டவும். பின்னர் கீழே சின்ட்ரெல்லா, ஸ்னோவைட், பிரின்ஸெஸ் ஸ்டிக்கரையும் பூக்களையும் ஒட்டவும். இது மிகவும் எளிதில் செய்யக் கூடியது. சிறு பிள்ளைகளின் பிறந்த தினத்தன்று கொடுக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுப்பரோ சூப்பர். முதலில் நான் செய்துவிட்டு என் பொன்னுக்கு செய்ய சொல்லி கொடுக்க வேண்டும். நல்ல டைமில் தான் அருசுவையில் போட்டிருக்கிங்க, இப்ப ஹாலிடே சிசனுக்கு ரொம்ப யூஸ்புல்லாக இருக்கும். கண்டிப்பா செய்துட்டு சொல்கிறேன். நன்றி நன்றி....மேலும் உங்கள் கைவண்ணங்களை எதிர் பார்க்கிறேன், எல்லாமே சிம்பிளாக இருக்கு. டைம் கிடைக்கும் போது பீட்ஸ் பேரேஸ்லெட் செய்து காட்டுங்க. என் குட்டிஸுக்கு கலர் கல்ரா ட்ரெஸ்ஸுக்கு நாமளே செய்யறா மதிரி சிம்பிளா சொல்லுங்க நர்மதா.
எப்படி நிங்க சின்ன குட்டியோட இதெல்லாம் செய்ய முடிகிறது.( மைக்ல்ஸ், ஏ சி மோர்) இதை தவிர வேற எந்த கடையில் க்ராப்ட் திங்ஸ் கிடைக்கும் சொல்லமுடியுமா?

நர்மதா,
வாழ்த்து அட்டை மிகமிகமிக அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
செபா.

நர் நான் பாத்த உடனயே இதுல நீங்க செய்திருக்கிற 3 டிசைன் செய்திட்டன்.சூப்பர் வடிவா வந்துட்டுது.என்னே கைவண்ணம் உங்களுக்கு.ஒவ்வொரு மாதமும் எனக்கு 5 காட்டாவ்து தேவைப்படும்.வங்கிற சிரமத்தில பாதிபேருக்கு அனுப்பிறதில்ல.இப்ப ஓகே செய்து செய்து வச்சிருக்கிறன ்.
மிக்க நன்றி நர்.

சுரேஜினி

வாழ்த்து அட்டைகள் எல்லாமே அழகாக இருக்கின்றன நர்மதா. சின்ட்ரெல்லா காட் மிக அழகு.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா நீங்க சொல்லித்தந்து செய்துகொண்டே இருந்தேனா நர்மதா சொல்லித்தந்ததையும் கொப்பி பண்ணி 21 காட் செய்திட்டன்.ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கு.

சுரேஜினி

அன்பின் விஜி, செபா, சுரேஜினி, இமா அனைவருக்கும் நன்றி.

இப்ப எனக்கு நேரம் கிடைப்பது (டைப் பண்ண) இல்லை. பார்க்க மட்டும் வருவேன்:)

விஜி, ஜோ-ஆன், பென் ஃபிராங்லின் இலும் கிராஃப்ட் பொருட்கள் கிடைக்கும். இது எல்லாம் குட்டி உள்ளே இருக்கும் போது அனுப்பிய ப்ராஜெட்கள். :) இப்பவும் செய்வேன். ஒரு சின்ன கார்ட் செய்ய 4 நாள் எடுக்குது :) ஆனாலும் கிடைக்கிற நேரத்தில் செய்வேன். முடிந்தால் பிரேஸ்லெட் குறிப்பு அனுப்புகிறேன். உங்களுக்கு டெஸ்ட் மெயில் பண்ணினேன். கிடைக்கவில்லையா?

சுரே, நல்லது. இன்னும் செய்யுங்கோ. விசாவுடைய காட்டும் சேர்த்து செய்யுங்கோ.எனக்கு பொப்-அப் கார்ட் மிகவும் பிடிக்கும். நானும் இன்னும் ஒரு 10 கார்ட் டிஸைன் ஏற்கனவே அட்மினுக்கு அனுப்பிட்டன். வந்ததும் செய்யுங்கோ. ஒரு காட் ஸ்டொக் வாங்கி வைத்திருந்தால் செய்வது சுலபம். மலிவும் அத்தோடு மனதுக்கும் திருப்தி. :) தாரணியிடம் எனது மெயில் ஐடி இருக்கு. விரும்பினால் வாங்கி மெயில் பண்ணுங்கோ. மிச்ச டிஸைன் அனுப்புறன் (உங்களுக்கு தேவை எண்டால்).

இமா, எப்பிடி இருக்கிறீங்கள்? லயா நல்ல சுகம். அந்த சின்டிரெல்லா காட் அண்ணாவின் மகளின் முதல் பிறந்தநாளிற்காக செய்து அனுப்பினேன் (இந்த வருடம்தான்) :) . உங்கட தொப்பிதான் இப்ப செய்யுறன். சாதாரண கம் போட ஒட்டுதில்லை அதனால சுப்பர் க்ளூதான் போடுறன். என்ர நூல் மக்ரம் நூலில்லை. வேறு ஏதோ ஷைனிங்கான நூல். அதனாலோ தெரியலை. மக்ரம் செய்ய காட்டி தாங்கோவன். அந்த நூலின் ஆங்கில பேரும் தாங்கோ.
-நர்மதா :)

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta