லவங்க லதிகா

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 50 கிராம்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
பால் - அரை கப்
சர்க்கரை - 100 கிராம்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் - ஒன்று
உப்பு - 10 கிராம்
எண்ணெய் - 1/4 லிட்டர்
தண்ணீர் - தேவையான அளவு


 

மைதா மாவில் வெண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு பாலை நன்றாக 5 நிமிடம் கொதிக்க வைத்து அதில் தேங்காய் துருவல் ஒரு தேக்கரண்டி சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.
இந்த பூரணத்தை சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
பிறகு பிசைந்த மாவை எடுத்து பூரி தேய்ப்பது போல் சிறியதாக தேய்த்து நடுவில் பூரணத்தை வைத்து உருண்டையாக உருட்ட வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உருண்டையை போட்டு சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.
பின்பு சர்க்கரையை பாகு காய்ச்சி அந்த பாகில் போட்டு எடுத்து தனியாக வைக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்