பாகற்காய் சிப்ஸ்

தேதி: December 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பாகற்காய் - 1/4 கிலோ
எண்ணெய் - 1/4 கிலோ
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கார்ன்ப்ளார் - 3 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு


 

பாகற்காயை மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயம் சேர்த்து கலக்கவும்.
மற்ற மாவுகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும் மசாலா கலந்த பாகற்காயை சிறிது சிறிதாக போட்டு மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

water evlo serkanum....

The food which makes you hungry shortly is the suitable food for you.

பாவக்காய் சிப்ஸ் மிகவும் மொறுமொறுப்பாக அருமையாக வந்துள்ளது. மதியம் சாம்பாருடன் ஒரு பிடிபிடிக்கபோகிறேன். பொரிக்கும் போதே பாதி காலிபண்ணிவிட்டேன், நன்றி

சூப்பர்.நான் அடிக்கடி வீட்டில் செய்வென் எல்லாம் சாப்படுக்கு முன் காலி. நான் கான்ப்ளவ்ர் இல்லாமல் தான் செய்வேன் இந்த முறை உங்க குறிப்பின் படி செய்தேன் சுவை நன்றாக இருந்தது.
நான் இதே போல் காலிப்ளவ்ர் செய்வேன் அதுவும் நன்றாக இது போல் இருக்கும்.

ஸாதிகாஅக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த
பாகற்காய் சிப்ஸ் மிக மிகசுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையானகுறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

அன்பு மாலினி.பின்னூட்டத்திற்கு நன்றி.பொரிக்கும் பொழுதே காலி ஆகி விட்டதா?இதே கதைதான் இங்கும்.காலிபண்ணுவது பிள்ளைகள் இல்லை.நானேதான்.அதற்காகவே செய்வதற்கு பயமாக உள்ளது.
அன்பு விஜி,
பின்னூட்டத்திற்கு நன்றி.கார்ன்பிளார் சேர்ப்பதால்தான் மொறுமொறுப்புக்கிடைக்கின்றது.சிலர் மாவுவகைகள் சேர்க்காமல் மிளகாய் பொடி மட்டும் போட்டு செய்வார்கள்.அது சுமாராகத்தான் இருக்கும்.
அன்பு துஷ்யந்தி.
உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.சமையல் செய்து மறக்காமல் பின்னூட்டமும் கொடுத்து விடுகின்றீர்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website