கார்த்திகை ஸ்பெஷல் - இனிப்பு அவல் பொரி

தேதி: December 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொரித்த அவல் - அரை கிலோ
பொட்டுக்கடலை - 50 கிராம்
எள்ளு - 25 கிராம்
வேர்க்கடலை - 50 கிராம்
வெல்லம் - கால் கிலோ
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் - 3


 

தேங்காயை சிறு பற்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தூள் செய்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடியாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து பாகு காய்ச்சவும்.
வாணலியில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் பல்லை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
பின்னர் பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலையை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து எடுக்கவும்.
இறுதியாக எள்ளை வாணலியில் போட்டு நன்கு பொரிந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பொரித்த அவலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் வறுத்த தேங்காய் பல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
வெல்ல பாகு கம்பி பதம் வந்ததும் எடுத்து இந்த கலவையுடன் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
சுவையான மொறுமொறுப்பான கார்த்திகை இனிப்பு அவல் தயார். நன்கு கிளறிய பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் நமுத்து போகாமல் மொறுமொறுப்பாகவே இருக்கும்.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் <b> திருமதி. சுமதி திருநாவுக்கரசு</b> அவர்கள். சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு தோழி,

அன்பு தோழிகளே

இங்கு அவல்பொரி கிடைக்கவில்லை, மைக்ரோவேவ் ஒவனில் அவல் பொரிக்க முடியுமா?

PLEASE HELP ME.

அன்பு தோழிகளே,

அன்பு தோழி,

இங்கு அவல்பொரி கிடைக்கவில்லை, மைக்ரோவேவ் ஒவனில் அவல் பொரிக்க முடியுமா?

PLEASE HELP ME.

அன்பு தோழிகளே,

Hi Sumathi,

where can i get this poricha aval.i'm staying in chennai.

அன்புள்ள சகோதரிக்கு,

நீங்கள் இங்கு கிடைக்கும் Puffed Rice(Cub foods - Cereal Sectionlla irukkum) உபயோக படுத்தலாம். அதை MW-ல் 2 அல்லது 3 நிமிடம் வைத்து பொரிக்கலாம்.

சென்னையில் பொறி கிடைகளிலேயே கிடைக்கும்.

வித்யா ராஜ்

வித்யா ராஜ்