புதினா பக்கோடா

தேதி: December 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. புதினா - 1 கட்டு
2. கொத்தமல்லி - 1 கட்டு
3. கடலை மாவு - 1 கப்
4. இஞ்சி - 1 துண்டு
5. பச்சை மிளகாய் - 3
6. சோம்பு - 1 தேக்கரண்டி
7. உப்பு


 

இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
புதினா, கொத்தமல்லி சுத்தம் செய்து வைக்கவும்.
மாவு, சோம்பு, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, மல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட சற்று கெட்டியாக பிசரி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும், மாவை சிறு துண்டுகளாக போட்டு எடுக்கவும்.


விரும்பினா கொஞ்சம் அரிசி மாவு கலந்துகங்க, மொறுமொறுப்பா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா புதினா பகோடா அட நல்ல சத்தான பகோடாவா இருக்கே. ஏன் கருவேப்பிலைசேர்க்க வில்லை.
ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலீலா... விரும்பினா அதையும் சேர்த்துக்கங்க ஜலீலா.... வாசமா இருக்கும். நான் அதிகம் கறிவேப்பிலை சேர்க்கிறது இல்ல, ஏன்னா கொண்டு வருவதே காய்ந்த கறிவேப்பிலை ஊரில் இருந்து, இங்க கிடைக்காது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்று சாய்ந்திரம் எங்க வீட்ல புதினா பக்கோடா தான்,எனக்கு புதினா பிடிக்காது,என்னவருக்கு அது ரெம்ப பிடிக்கும்,வீட்டில் நுழையும் போதே மணம்மா இருக்குன்னு வந்தார்,நல்லா இருந்த்து,எனக்கு கொத்தமல்லி வாசம்தான் ரெம்பபிடித்து இருந்தது

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிக்க நன்றி ரேணுகா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

திருமதி. ஜலிலா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த பக்கோடாவின் படம்

<img src="files/pictures/aa52.jpg" alt="picture" />

மிக்க நன்றி அண்ணா. ஜலீலா சுப்பரா செய்து சூப்பரா படம் போட்டு அசத்திட்டீங்க. இருந்த கொஞ்சம் தூக்கமும் காணாம போயிட்டுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா