அறுசுவைக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன :-)

நீண்டதொரு யோசனைக்கு பின், பலரது ஆலோசனைகளையும் ஏற்று, இறுதியாக இதனைச் செய்வது என்ற முடிவிற்கு வந்துள்ளேன். இது சம்பந்தமாக என்னிலை விளக்கம் கொடுக்கவே இந்த பதிவு. இது குறித்து யாருக்கேனும் ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் விளக்கம் கொடுப்பதற்கு இந்த இழை உதவியாய் இருக்கும்.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இன்றைய உலகில் காற்றைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே பொருள் இருந்தால் மட்டுமே பெற முடியும் என்ற சூழல் இருக்கின்றது. சொந்தங்களின் அன்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற மனம் சார்ந்த விசயங்களுக்குகூட இப்போது பணம் தேவையாய் உள்ளது.

எவ்வளவு காலம் அறுசுவையை இப்படி இலவசமாய் கொடுப்பாய் என்று என்னிடம் கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் நான் கொடுத்த பதில் "என்னால் இயன்ற வரை" என்பது. இப்போது அந்த "இயன்றல்" இறுதி நாட்களை எண்ணும் நிலையில் இருப்பது கவலைத் தரும் உண்மை.
அறுசுவையின் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு திட்டங்கள் நிறைய இருந்தாலும், அவற்றை செயல்படுத்தி பார்க்கக்கூட செலவுகள் நிறைய செய்தாக வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. பொருளாதார பிரச்சனைகளால் நான் செயல்படுத்த நினைத்தவற்றையெல்லாம் செய்ய இயலாது போய்விடுமோ என்ற கவலை இப்போது என்னை விழுங்கிக்கொண்டிருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் நல்ல தீர்வு, அறுசுவையை கட்டணத் தளமாக்குவது என்பது பலரது ஆலோசனை. எனக்கு அதில் விருப்பம் இல்லை. அடுத்த தீர்வாக பலரும் தெரிவித்தது, இந்த நன்கொடை விசயத்தை. கட்டணம் என்று இல்லாமல், விருப்பம் உள்ளவர்கள் இயன்ற தொகையைக் கொடுக்கட்டும், இதில் பிரச்சனைகள் இருக்காது என்று சிலர் விளக்கம் கொடுத்தார்கள். இது சம்பந்தமாக சில காலமாக சிலரிடம் ஆலோசித்து வந்தாலும், இதைச் செய்வதிலும் எனக்கு முழுஉடன்பாடு இல்லை. ஆனால், இப்போது சூழல் காரணமாக எனக்குள் இருந்த தயக்கங்களை உதறி, இரண்டாவது தீர்வினை முயற்சித்து பார்ப்பது என்ற முடிவை எடுத்துள்ளேன்.

அறுசுவையால் உண்மையில் பயன் உள்ளது என்று நம்புகின்றவர்கள், அறுசுவையால் பயனுற்றவர்கள், அறுசுவையின் வளர்ச்சிக்கு உதவிட விரும்புகின்றவர்கள் யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்கிடலாம். எந்தவொரு சிறிய தொகையும் அறுசுவை வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும். நன்கொடையாக கிடைக்கும் தொகை முழுமையும் அறுசுவை இணையதள மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது உறுதி. இது கட்டணம் அல்ல. அதனால் கட்டாயமும் அல்ல. விருப்பம் உள்ளவர்கள் விரும்பிய தொகையை வழங்கலாம்.

திரு அட்மின் அவர்களுக்கு, அறுசுவைக்கு நன்கொடை என்று பார்த்ததும் உங்களின் மிக நல்ல முடிவைப் உடனே பாராட்ட வேண்டும் என்று தான் இந்தப் பதிவைப் போடுகின்றேன், இந்த முடிவை எடுக்க தாங்கள் எத்தனை ஆயிரம் முறை யோசித்திருப்பீர்கள் என்று என்னால் நன்கு உணர முடிகின்றது. அது அறுசுவை தளத்தின் மீது உங்களுக்கிருக்கும் பற்றைத்தான் காட்டுகின்றது. பரவாயில்லை நல்ல விசயத்திற்காகத் தானே உங்கள் கொள்கையை விட்டுக் கொடுத்துள்ளீர்கள் அதற்குத் தான் எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் கூறுகின்றேன். உலகத்துகெல்லாம் அறுசுவை உணவை வழங்கிக் கொண்டிருக்கும் அறுசுவை தளத்திற்கு இவ்வளவு காலம் கழித்தாவது நல்ல காலம் வந்ததுப் போன்று தான் உணர்கின்றேன்,அறுசுவை மென் மேலும் வளர எனது வாழ்த்துக்கள். நிச்சயம் நானும் என்னால் முடிந்த தொகையை வழங்குவேன் வழங்கிக்கொண்டிருப்பேன் என்று உறுதியளிக்கின்றேன். இந்த முயற்சியால் நமது நேயர்களின் பரி பூரண ஆதரவும் ஆசீரும் நமது தளத்திற்கு கிடைக்கும் என்றே நம்புகின்றேன்.நன்றி.

மிக்க நன்றி சகோதரி.

நீண்ட நாட்களாய் இருந்த தயக்கம் சூழல் காரணமாக இன்றுதான் அகன்றது. இந்த பதிவைக் கொடுத்துவிட்டேனே தவிர மனதின் ஓரத்தில் ஒரு மெல்லிய உறுத்தல் இருந்துகொண்டே இருக்கின்றது. அந்த உறுத்தல் காயமாகும்போது இதனை நீக்கிவிடுகின்றேன். :-)

அட்மின் அவர்களுக்கு,
நீங்கள் போட்டிருக்கும் தலைப்பில் தப்பில்லை. பணம் கொடுத்தால்தான் அறுசுவையைப் பார்க்க முடியும், என்ற நிலையை உருவாக்காமல் இருப்பதற்கு, உங்களுக்கு என்னுடைய நன்றிகள். இது நல்ல விஷயம்தான், விரும்புபவர்கள், முடிந்தவர்கள், தம்மால் முடிந்த உதவியை வழங்கி தம்மால் முடிந்த பங்களிப்பை செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

நாங்கள் இதை ஆதரிக்கிறோம் அதனால், நீங்கள் மனதில் எதையும் நினைத்து வருந்தத் தேவையில்லை. சமையலுக்கு அப்பால், எத்தனை பேருக்கு இத் தளம் மன ஆறுதலைக் கொடுக்கிறது, முக்கியமாக குடும்பச் சிக்கலில் சிக்கித் தவிப்பவர்கள் கூட, இத் தளத்தில், தம் மன எண்ணங்களைக் கொட்டியும் ஆலோசனைகளைப் பெற்றும் ஆறுதல் அடைகிறார்களே.... .

எல்லோருக்குமே பணம் செலுத்திப் பார்க்க குடும்பத்தில் அனுமதி கிடைக்காது. எனவே ஏதோ எம்மால் முடிந்த உதவியை முடிந்தவர்கள் வழங்குவோம்.
"சிறு துளிதானே பெருவெள்ளம்", சிறு தொகையாயினும், ஏதோ என்னால் முடிந்த தொகையை வழங்க நான்(நாங்கள்) தயார்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அட்மின் அண்ணா நீங்கள் சொல்லியிருப்பதில் எந்த தவறும் இல்லை.இந்த விஷயத்தில் நான் அதிராவை வழிமொழிகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்கள் நம்பவே மாட்டீர்கள். நான் நேற்றுத்தான் நினைத்தேன்! நீங்கள் என் இதை pay site ஆக்க மாட்டேன் என்கிறீர்கள். எப்படி கட்டுப்படி ஆகிறது என்று யோசித்து கொண்டிருந்தேன். இன்று அறுசுவை திறந்ததும் நன்கொடை என்று பார்த்த உடன் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை :)

இதற்கு நீங்கள் இவ்வளவு வருந்தி பதிவு போட வேண்டியது இல்லை சகோதரரே. இந்த தளம் வெறும் சமையல் குறிப்புகளுக்காக மட்டும் இல்லை. என் போன்ற நூற்றுகணக்கான சகோதரிகளை தோழிகளை ஒன்றாக இணைக்கும் தளம். எனக்கு ஒரு அக்கா இல்லையே என்ற ஏக்கத்தை செல்வி அக்கா மற்றும் மனோகரி அக்கா போன்றவர்கள் மூலமாக போக்கிய தளம். இது நியாயமான ஒரு விஷயம். நிச்சயம் என்னால் முடிந்ததை மனமார்ந்த மகிழ்ச்சியுடன் நான் அளிப்பேன்.

I think am quite intuitional :)

அன்பு சகோதரி
உமா

மேலே என்னுடைய தோழிகள் சொல்லியிருக்கறதை தான் நானும் சொல்லப்போரேன்,என்னால் முடிந்தது நான் தருகிறேன்.
என்னதான் நீங்க பக்கத்தில ஸ்மைலி போட்டிருந்தாலும் இதை சொல்ல எவ்வளவு சங்கடப்பட்டிருப்பீர்கள் என்பதை என்னால்(எங்கலால்) புரிந்துக்கொள்ள முடிகிறது.

அட்மின் அவர்களுக்கு,

இதில் நீங்கள் வருத்தப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. இங்கு பலரும் சொல்லி இருப்பதேதான் என்னுடைய கருத்தும்.

//மனதின் ஓரத்தில் ஒரு மெல்லிய உறுத்தல் இருந்துகொண்டே இருக்கின்றது. அந்த உறுத்தல் காயமாகும்போது இதனை நீக்கிவிடுகின்றேன். :-)//

அது பாட்டுக்கு இருந்து விட்டு போகட்டும். அதை நீக்க வேண்டாம் என்பதே என்னுடைய தாழ்மையன வேண்டுகோள்.

//"சிறு துளிதானே பெருவெள்ளம்", சிறு தொகையாயினும், ஏதோ என்னால் முடிந்த தொகையை வழங்க நான்(நாங்கள்) தயார். //

என்று அதிரா கூறியது போல் இத் தளத்தை பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான நேயர்களும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.

பாபு அண்ணா இந்த நாட்டில் எனக்கு அன்பையும் அரவணைப்பையும் தெளிவையும் ஒருங்கிணைய தருவது இந்த அறுசுவை மட்டும்தான்.வேலை படிப்பு எல்லாவற்றையும் விட்டு மாதக்கணக்கில் வீட்டில் நிற்கவேண்டிய நிலை வந்தபோது யன்னலூடாக இந்த பரபரப்பார உலகை பாத்துக்கொண்டே இருப்பேன்.அப்படியே இருந்து பைத்தியம் பிடிக்காமல் காப்பாற்றியது இந்த அருசுவைதான்.
நமக்கு இத்தனை பயன்களைத்தரும் அறுசுவையை வளர்க்க வாய்ப்புக்கிடைத்ததில் நமக்கு மிகவும் சந்தோசமே .இதில் நீங்கள் வருந்துவதற்கு எதுவுமே இல்லையே.

சுரேஜினி

ரொம்ப நாளாக நானே கூட நினைத்து கொண்டிருந்தேன். அதை நிங்க இப்ப சொல்லிட்டிங்க. நல்ல விஷயம் வரவேற்க்கிறே. கண்டிப்ப நானும் எல்லாரும் கூறுவதை போலவே முடிந்ததை செய்கிறேன். நல்ல விஷயம். இதற்க்கு நிங்க தயங்குவது தெரிகிறது ,கண்டியூ.

இப்ப எல்லாம் நிறய்ய bloogerஸ்ஸ்லேயே கூட கட்டனைத்தை வசூலிக்கிறார்கள் ஏன் என்றால் அதில் கூட ரெசிப்பி காம்படிஷன், ப்ரைசஸ், அவார்ட்ஸ் இப்படி செலவு செய்யதான் என்று சொல்லி வசூலிக்கிறார்கள். நன்றாகவே நடத்துகிறார்கள். என் தோழிக்கு கூட பெஸ்ட் ப்ளாக் என்ற அவார்ட் கூட கிடைத்துருக்கு. அட்மின் நிங்க தான் ரொம்ப லேட்...இதில் தயக்கமே இல்ல.நல்ல விஷயம் குட்லக்.

அண்ணா... நான் சொல்ல நினைத்ததை அதிரா சொல்லிட்டாங்க... அதயே ஏகப்பட்ட தோழிகள் வழிமொழிந்தும் ஆனது. :) கவலை வேண்டாம் அண்ணா. நல்லவர் சோதிக்கப்படுவார், கை விடப்படார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்