ஹாய் தோழிகளே

ஹாய் தோழிகளே என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ப்ளீஸ். நான் இப்போது 4 மாதம் கர்பமா இருக்ரேன்.எத்தனை மாததில் குழந்தையின் அசைவு தெரியும்.அதை உனர ஆவலாக இருக்ரேன்.இது எனக்கு முதல் குழந்தை அதனால் ஒன்னும் புரியல.
ப்ளிஸ் ப்ளிஸ் ப்ளிஸ்

அன்புடன் துஷி

முதலில் என் மனமார்ந்த நாள் வாழ்த்துக்கள் :) முதல் குழந்தையா? பேஷ் பேஷ் :) குழந்தையின் அசைவு 4 மாதத்திலேயே லேசாக தெரியும். முதலில் வயிற்றில் யாரோ கொஞ்சலாக கிள்ளுவது போல இருக்கும். Flutter என்று சொல்வோமே. அது போல. அதுதான் முதல் அசைவு. அதன் பிறகு உங்கள் மழலை அவர் பாட்டுக்கு குதித்து விளையாட ஆரம்பித்து விடுவார் :) ஆஹா அது இனிமையான சொர்க்கம். அந்த அனுபவத்துக்கு ஈடு இணையே கிடையாது தோழி :) ஆனால் மாதங்கள் ஏற ஏற அவர்கள் உதைக்கும் உதை இருக்கிறதே!! வலி எடுக்கும். ஆனால் சுகமான வலி. முழுதும் அன்பவியுங்கள். முதல் குழந்தை அனுபவம் மிகவும் special one! :)

Take care of you and your baby! All the very best for a wonderful and funfilled pregnancy :)

அன்புடன்
உமா

ஹாய் உமா ரொம்ப நன்றிப்பா.யா இது எனக்கு முதல் குழந்தை.4 மாதம் முடிந்து விட்டது இன்னும் ஒரு அசைவும் தெரியல அது தான் கேட்டேன்.4 மதமும் 1 கிழமையும்

ரொம்ப நன்றி உமா சந்தோஷமா இருங்க
அன்புடன்
துஷி

தோழி துஷி, எனக்கு இக் கருத்துக்கு பதில் தெரியாது.முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்
"வாழ்க வள்முடன்"

எனக்கு ஒரு பிரச்சனை (குழப்பம்) உள்ளது. அதர்க்காக தோழிகள் எனக்கு உதவவும்.
இன்றோடு 56 நாள் ஆகிறது. வீட்டில் யூருன் டெஸ்ட் பார்த்தோன். நெகட்டிவ் வருகிரது. 44ம் நாள் பார்த்த போதும் இதொதான் வந்தது.
ஆனால் எனக்கு இப்பவும் இடுப்பு, முதுகு, வலிக்கிரது. பர்க்கல் கூசி ஈருகல் வலிக்கிரது. அதிகம் நடந்தாள் துடை வலிக்கிரது.
என் கணவர் யூரின் டெஸ்டில் ஒரு சிலருக்கு தெரியாது அதனால் டாக்டரிடம் போகலாம் என்கிரார். இப்படி ஒரு சிலருக்கு இருக்குமா. செல்லுங்கள் please.......

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

உங்களுக்கு சரியான பதில் சொல்ல முடியாவிட்டாலும் நாட்கள் தள்ளி போவது எதனால் என்று டாக்டாரிடம் காட்டினால் தான் தெரியும்..எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது அதனால் உடனே மருத்துவரை சந்தித்து தகுந்த ஆலோசனை செய்யுங்கள்...நீங்கள் நினைத்தது போல் நடக்க வாழ்த்துக்கள்..

ஹாய் பிரபா டென்சன் ஆகமல் இருங்க.சிலருக்கு இப்படி இருக்கும் நீங்கள் டொக்ரரிடம் போவது தான் நல்லது.பயப்பிட தேவை இல்லை.டொக்ரரிடம் காட்டி விட்டு நல்ல செய்தி சொல்லுஙப்பா

anpudan
thushi

மேலும் சில பதிவுகள்