அசோகா 1

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பாசிப்பருப்பு - ஒரு கப்
தண்ணீர் -2 1/2 கப்
சர்க்கரை - 2 கப்
கோதுமை மாவு - ஒரு கப்
நெய் - 1 1/2 கப்
முந்திரிப்பருப்பு - 15
கிஸ்மிஸ் - 10
கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை
சாரப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி
ஜாதிக்காய்ப்பொடி - அரைத்தேக்கரண்டி


 

பிரஷர் குக்கரில் பாசிப்பருப்பைக் கழுவிப் போட்டு, இரண்டரைக் கப் தண்ணீர் விட்டு, வெயிட் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பருப்பு நன்றாக குழைவாக வேகவேண்டும். வெந்த பருப்பில் சர்க்கரைச் சேர்த்து, அது கெட்டியாக துவங்கியதும் கீழே இறக்கி வைக்கவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும், சலித்த சுத்தமான கோதுமை மாவைப் போட்டு வறுக்கவும்.
அந்த மாவுடனேயே முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து வறுத்து விடவும்.
மாவின் மீது சிறிது தண்ணீர் தெளித்தால் \"னொய்\" என்ற சப்தம் வரும். அதுவே சரியான பதம்.
அப்படி சரியான பதம் வந்த பிறகு இறக்கி, பாசிப்பருப்புக் கலவையில் கொட்டிக் கிளறவும்.
அத்துடன் கேசரிக்கலர் சேர்த்து, மீதமுள்ள நெய்யையும் ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும்.
அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிடவும்.


மேலும் சில குறிப்புகள்