இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

எனது தோழி ஒருத்திக்கு குழந்தை பிறந்து 7, 8 மாதங்களில் மீண்டும் கருவுற்றிருக்கிறாள். இப்போது 2 மாதங்களாகிறது. அவளுக்கு இந்த குழந்தையை பெற்று வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறாள். இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

ஹாய் தோழி இதை பற்றி எனக்கு சரிய தெரியாது இருந்தலும் தெரிந்து கொண்டவயை எழுதுகிரேன்.

13 கிழமையில் கரு கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.13 கிழமைக்கு மேலே என்றால் உங்கள் டொக்ரரிடம் போய் கலந்து ஆலோசியுங்கள். உங்கள் நண்பி ஆரோக்கியமா இருக்ரார்களா? 13 கிழமையில் கருவின் இதயம் துடிக்க ஆரம்பித்து விடும்
அது ஒரு உயிர் ஆகிவிடும் அது தான் அதற்கு மேலே செய்ய மாட்டர்கள்.
டொக்ரரின் ஆலோசனையும் உங்கள் நண்பியின் ஆரோகியமும் தான் முதல் பார்கவேனும்.

எத்தனயோ தோழிகள் குழ்ந்தை வேண்டும் என்ரு கஷ்ரப் படுரார்கள் எனக்கு உங்கள் கேள்வியை பார்த்தவுடன் கவலயாக இருந்தது .என்ன செய்வது தவிர்க முடியாத நிலையில் இதை செய்யலாம்.

அன்புடன்
துஷி

லலிதா துஷி சொல்லுவது சரி தான். நான் நீங்கள் இந்த பதிவை போட்டவுடன் பார்த்துவிட்டேன். ஆனால் எனக்கும் இதற்கான பதில் தெரிந்தும் சொல்லப் பிடிக்கவில்லை. தயவுசெய்து குழந்தையை அழிக்கவேண்டாம் என்று சொல்லுங்கள் லலிதா. ஒன்று நாம் கவனமாய் இருந்திருக்க வேண்டும். இப்போது அதை நினைத்து கவலைப்பட்டு என்ன செய்வது. பாவம்பா அந்த குழந்தை. எனக்கு குழந்தை சரியான வளர்ச்சியில்லை என்று 2 வருடம் முன்பு டி.என்.சி பண்ணும் போது கூட அய்யோ அதற்கு எப்படி வலித்ததோ என்று அழுதேன். தயவுசெய்து பெற்றுக்கொள்ள சொல்லுங்கள்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

Dear Madam,
Please tell your friend that don't abort the baby. It's God's gift. My sister got married before 2 and half years. She wants to get baby. But God didn't give the chance. Our both side family members are worrying and consulting the doctors. My sister and her husband's medical reports are very very normal.,Your friend is very lucky having this baby. Please Advise her!God bless that baby!

உங்க பிரண்ட் நிலை தெரியுதுமா ஆனா அவ்ங்க கேர்லசா இருந்ததுக்கு அந்த பச்சுலம் குழந்தையை அழிப்பது எந்த விதத்தில் நியாயம் இது ஒரு உயிரை கொலை செய்வதற்க்கு சமம் லலிதா வேணாம் அந்த பாவ காரியத்தை செய்ய சொல்லாதீங்க நல்ல முறையில் பெற்றுக்க சொல்லுங்க...குழந்தை வரும் முன் கேர்புல்லா வேணா இருக்கலாம் தப்பில்லை ஆனால் வந்தபின் அழிப்பது எந்த மதத்திலும் அனுமதிக்க மாட்டாங்க..அது மஹா பாவம்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமாம்பா வேண்டாம்னு சொல்லுங்க..அவங்க உடல்நிலை எப்படினு தெரியல..குடும்ப சூழ்நிலையும் தெரியல..எல்லோரும் சொல்ற மாதிரி கவனமா இருந்திருக்கணும் அப்படி இல்லாம இருந்ததற்க அந்த குழந்தைக்கு தண்டனையா? எனக்கும் இதில் உடன்பாடு இல்ல..குழந்தைய பெத்துகிட்டு வேணும்னா டிவின்ஸ் பிறந்ததா நினைச்சுக்க சொல்லுங்க..எதுவாக இருந்தாலும் இப்படி நேரத்த வேஸ்ட் பண்ணாமல் டாக்டர பார்க்க சொல்லுங்க..

படித்ததும் என் தூக்கமே போய்விட்டது.தெரியாமல் கர்பமாகிவிட்டேன் என்று சிலர் சொல்வார்கள் அது எப்படி என்பது எனக்கு புரியாத புதிர்.
வேண்டுமென்றால் ஒரு விஷயம் சொல்கிறேன் தோழியிடம் சொல்லுங்கள்...அபார்ஷன் செய்ததும் கருவை அப்படியே வெளியே எடுக்கும்பொழுது பல கருவிற்கும் உயிர் இருக்கும் அறுத்து வெளியே குப்பையில் எரிந்தபின் துடித்து சாகும்.இது என்ன ஒரு கொடூரம் ??கண் முன்னே என்ன நடக்கிறது என்று பார்க்காததால் இந்த மாதிரியான முடிவுகளுக்கு சீக்கிரம் செல்கிறார்கள்.வேண்டவே வேண்டாம்..அந்த பாவம் செய்வதை விட குழந்தையை சுமப்பது மேல்..3 மாத குழந்தையை வைத்து கூட கர்பமாகி குழந்தை பெற்று சுகமாக இருக்கிறார்கள் அது போல யோசிக்க சொல்லுங்கள்.

மக்களே தயவு செய்து நாம் பெண்கள் இந்த விஷயத்தில் அடுத்தவருக்கு விழிப்புணர்வு கொடுக்க முயல்வோம்..இன்னும் இந்த கொடுமை எங்கும் நடந்து கொண்டே இருக்கிறது
கருவை கலைப்பது என்பது நமக்கு ஏதோ கோலத்தை கலைப்பது போல ஒரு உணர்வு வளர்ந்த கருக்குழந்தையை கத்தரியால் வெட்டி வெட்டி தலை கை கால் உடல் என வெளிYஎ இழுத்து போடுவார்கள் ,ஆசிட் போன்ற திரவத்தால் கரித்து கொன்று விட்டு செய்வார்கள்....இதையெல்லாம் சொல்வதில் எனக்கு மிகுந்த வருத்தம் ஆனால் படித்தாவது கொஞ்சம் செய்பவர்கள் சிந்திக்கட்டுமே..
வருடக்காணக்காய் தவமிருந்து கர்ப்பமாகி கரு கலைந்தவர்கள் படும் பாடு ஒரு புறம் பெறாத குழந்தைக்காக அப்படி வருந்துகிறார்கள். சிலர் ஆறொகியமான கருவை தங்களது சுயநலத்திற்காக கொல்கிறார்கள்..
லலிதா நீங்க பயந்துடாதீங்க இதெல்லாம் எனக்கு மொத்தமா ஒரு நாள் சொல்லனும்னு நினைத்தது

ஏன் சொன்னார்கள் பெரியவங்க!!??

குழந்தை பிறந்த பிறகு தான் பல பெண்கள் ரொம்ப ஃபெர்டைலா இருப்பாங்க.. அதுக்கு தான் பச்ச உடம்புக்காரி பாத்து இருக்க சொல்லுங்கன்னு சொல்றது. எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை. எப்படி சொன்னாலும் இதனை நியாயபடுத்த முடியாது.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

லலிதா எனது தோழி ஒருவருக்கும் இதேமாதிரி 2 வது குழந்தை பிறந்து 7வது மாதத்தில் ஆக்சிடண்டாக 3வது குழந்தை உருவாகிவிட்டது.பராமரிப்புக்கும் அவருக்கு யாருமில்லை ஆனால் அவர் எனக்கு அதை சொல்லும்போது நான் ஆச்சரியமாக பார்ப்பேன் .அவ்வளவு சந்தோசப்பட்டார்.தனித்தனியே வளர்ப்பதைவிட இப்படி குறுகிய காலத்தில்3 பிள்ளைகளையும் கஸ்டப்பட்டு வளர்த்தேனென்றால் பிறகு ஜாலிதான் என்பார்.என்னே அதிசயம் ஐயப்பன் கருணை என்று கூறி நன்றிக்கடனுக்கு விரதம் வேறு கடைப்பிடிக்கிறார்.
அதே மாதிரி ஏன் நீங்களும் பொசிட்டிவா எடுத்துக்கொள்ளக்கூடாது???
நீங்கள் இதை சுவாரஸ்யமாக எடுத்துக்கொண்டால் இதில் சிரமத்தைவிட நிறைய சந்தோசம் கிடைப்பதை புரிந்து கொள்வீர்கள்.
அடுத்து 2 மாதக்கருவை நீங்களாக அழிப்பதால் அந்த பெண்ணின் உடலில் சுரந்த ஓமோன்கள் திடீரென்று களையப்படுவதால் அடுத்து 3 வருடங்களுக்கு குழந்தை கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது.அதாவது மாத்திரைகள் மூலம் சில திசுக்கள் அழிக்கப்பட்டு அவை மீண்டும் உருவெடுக்க நாட்கள் எடுக்கலாம்.
எல்லாவற்றையும் நம் மனம் தான் தீர்மானிக்கிறது.யோசித்து நல்ல முடிவெடுங்கள்

சுரேஜினி

anunissa
FAMILY PLANING ENDU IRUKKE ETHU NALLA MUREI

anunissa

மேலும் சில பதிவுகள்