குரோசே(crochet) கற்றுக் கொள்ளலாம் - 2

தேதி: December 15, 2008

4
Average: 3.4 (5 votes)

குரோசே பின்னலின் அடிப்படை பின்னல்களை கற்று தேர்ந்த பின்னர், எளிமையான முறையில் செய்யும் ஒரு அழகிய ஹேர் பேன்ட் மற்றும் கார்னேஷன் பூ செய்முறையை இங்கு பார்க்கலாம். இந்த குரோசே பின்னல் முறைகளை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை

 

பின்னல் நூல் - இரு நிறங்களில் (சிவப்பு, ஆரஞ்சு)
குரோசே ஊசிகள் : H/8 5.00 mm & ஏ/4 3.50 mm
பெரிய கண் உள்ள தையல் ஊசி (பின்னல் தேவைகளுக்காகவே செய்யப்பட்டது)
கத்தரிக்கோல்
பிளாஸ்டிக் இலைகள்
சிறிய குச்சி அல்லது கம்பி
சிறிய பூச்சாடி

 

ஹேர் பேன்ட் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் சிவப்பு நிற நூலில் H/8 ஊசியைக் கொண்டு 12 சங்கிலிகள் போட்டுக் கொள்ளவும்
ஊசியிலிருந்து மூன்றாவது சங்கிலியில் ஒரு இரட்டை குரோசே பின்னல் போட்டுக் கொள்ளவும். பின்னர் அதனை தொடர்ந்து வரும் ஒன்பது சங்கிலிகளிலும் இரட்டை குரோசே பின்னலை போட்டுக் கொள்ளவும்.
கடைசியாக இருக்கும் சங்கிலியில் மேலும் நான்கு இரட்டை குரோசே பின்னல்கள் போடவும். அதன் பின் தொடர்ந்து சங்கிலியின் கீழ் லூப்களில் மேலும் தனித்தனியே ஒன்பது இரட்டை குரோசே பின்னல்கள் போடவும்.
பின்னர் தொடுப்பு பின்னல்(முறை 1) மூலம் வரிசையின் ஆரம்ப பின்னலோடு சேர்த்து அதை நீள்வட்டமாக்கவும்.
மீண்டும் இரண்டு சாதாரண சங்கிலிகள் போடவும். பின்னர் அடுத்துள்ள சங்கிலியில் 2 இரட்டை குரோசே பின்னல்கள் போடவும். இதற்கு அடுத்து இருக்கும் சங்கிலியில் 3 இரட்டை குரோசே பின்னல்கள் போட்டுக் கொள்ளவும்.
இவ்வாறு தொடர்ந்து வரும் சங்கிலிகளில் மாற்றி மாற்றி போடவும். கடைசியில் பின்னலின் ஆரம்ப சங்கிலியுடன் தொடுப்பு பின்னல்( முறை 1) மூலம் இணைத்து இறுக்கி நூலை வெட்டி விடவும்.
அதன் பின் தொடுப்பு பின்னல் (முறை 2) மூலம் ஆரஞ்சு நிற நூலை இணைக்கவும்.
ஆரஞ்சு நிற நூலினால் இரண்டு சங்கிலிகள் போடவும். அடுத்து வரும் ஒவ்வொரு சங்கிலியிலும் மூன்று மூன்று இரட்டை குரோசே பின்னல்கள் போடவும்.
இறுதியில் ஆரம்ப சங்கிலியிடன் நூலை தொடுப்பு பின்னல் (முறை 1) மூலம் இணைத்து நூலை வெட்டவும்.
நறுக்கி விட்ட அனைத்து நூல்களையும் தையல் ஊசியால் அல்லது குரோசே ஊசியால் அடுத்துள்ள பின்னல்களில் கோர்த்து எடுக்கவும். இதைப் போல் செய்வதால் பின்னல்கள் எளிதில் அவிழாமல் இருக்கும்.
பின்னர் E/4 ஊசியால் சிவப்பு நிறத்தில் 50 சங்கிலிகள் போடவும். (அல்லது H/8 ஊசியால் தேவையான நீளத்திற்கு சங்கிலிகளை போடவும்)
பின்னர் தையல் ஊசியால் இந்த சங்கிலியை படத்தில் காட்டியது போல பூவின் நடுப்பகுதியில் கோர்த்து எடுக்கவும்.
எளிமையான முறையில் அழகிய ஹேர் பேன்ட் தயார்.
இதனை பின்னலின் அடியிலோ அல்லது கொண்டையை சுற்றியோ அல்லது போனி டெயிலிலோ வைத்து கட்டலாம். பார்க்க அழகாக இருக்கும்
கார்னேஷன் பூ: பூவின் நடுவில் கோர்த்த சங்கிலியின் இரு முனைகளையும் இழுத்து ஒன்றாக கட்டினால் படத்தில் காட்டியுள்ளது போல அழகான கார்னேஷன் பூ கிடைக்கும்.
பின்னர் இதனை ஒரு சிறிய குச்சில் அல்லது கம்பியில் வைத்து கட்டவும்.
கம்பியில் வைத்து கட்டிய கார்னேஷன் பூவை சிறிய பூச்சாடி ஒன்றில் பிளாஸ்டிக் இலையுடன் வைத்து அழகுபடுத்தலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

so nice,beautiful.உங்களுக்கு ஒரு அழகான கார்னேஷன் மலர் பொக்கே.பெற்றுக்கொள்ளவும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்கள் கார்னேஷன் பூ மிகவும் அழகாக இருக்கிறது. எனக்கு குரோசே அடிப்படை பின்னல் தெரியும். sweater பின்னுவது எப்படி ? எனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு sweater , socks பின்ன வேண்டும் என்று ஆசை. உதவி செய்யுகள்

அன்புடன், சோஃபியா

Naan indru pachai vellai colouril band seithu parthen.Miga nandra vanthulladu.Miga nandri thozhi.
Valthukkal.

nisarbanu

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta