ரவை தேங்காய் பணியாரம்

தேதி: December 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - 250 கிராம்
மைதா மாவு - 1/4 கப்
தேங்காய் - ஒரு மூடி
சீனி - 150 கிராம்
ஏலக்காய்தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 கப்


 

மைதா மாவு, ரவை இரண்டையும் சலித்து சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் சுத்தம் செய்த ரவையை போட்டு வாசனை வரும் வரை மூன்று நிமிடம் வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதே வாணலியில் தேங்காய் துருவலையும் போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையுடன், வறுத்த தேங்காய் துருவல், சீனி மற்றும் ஏலக்காய் தூள் போட்டு ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீரை சூடுப்படுத்தி அந்த தண்ணீரை ரவை கலவையுடன் சிறிது சிறிதாக தெளித்து பிசைந்து விடவும். ரவை கலவை உருண்டையாக பிடிக்கும் பக்குவத்திற்கு இருக்க வேண்டும்.
பின்னர் அதை உருண்டைகளாக பிடித்து தட்டில் காய வைக்கவும். அப்பொழுது தான் உருண்டையை மைதா மாவில் தோய்க்கும் போது உடையாமல் இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் சலித்த மைதா மாவை போட்டு அதில் நான்கு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி திக்காக கரைத்து கொள்ளவும். காய வைத்த ரவை உருண்டைகளை மைதா மாவில் தோய்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மைதாவில் தோய்த்த ரவை உருண்டைகளை போட்டு 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
தேங்காய் ரவை பணியாரம் தயார். இதை மைதாவில் தோய்க்காமல் வெறும் ரவை உருண்டையாகவும் சாப்பிடலாம்.
இந்த ரவை தேங்காய் பணியாரம் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. சாந்தா</b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

i am from malaysia. just want to know wht is maitha maavu?

flour no 1 iz maida

maida z a white flour,its made from wheat pulp

maida z white flour which come from wheat pulp.its mostly used in bakeries.brown flour cotain more fiber.wheat flour ,brown colour z made from wheat skin.my chef brother says like that.,

Maida maavu name is 'All purpose floor'. Its available in all stores.

ரேகா

பரோட்ட செய்கின்ர மாவு பெயர் தான் மைதாமாவு.

alhamdhulillah

மிகவும் நன்றாக இருக்கிறது

I LOVE ARUSUVAI.COM