உதவி

Dear friends,

எனகொரு Sugesstion தேவைபடுது,

என்னொட அக்கா,18 வையதிலேயே திருமணம் ஆகிவிட்டது.
+2 வரைக்கும் படிதிருகிறாள், இப்போ அவளுக்கு 31 + age.
இவ்வளவு நாட்களும் குடும்பதிற்காகவே தன்னை அர்பனித்து கொண்டாள்.
உடல் அளவிலும் சில மாட்றங்கள்.தற்போதைய நிலையில் அவளுக்கு ஒரு படிப்போ அல்லது வேலையோ தேவை. வேலை வேண்டுமென்றால் படிப்பு வேண்டும். வையதும் தாண்டி விட்டதால் என்ன படிப்பது , என்ன கௌரவமான வேலை செய்யமுடியுமென்று எனக்கு தெரியவில்லை.
உங்களுடய வழி காட்டுதல் வேண்டும். அத்தோடு உங்கலுக்கு சேலத்தில் யாராவது carrier consultant தெரிந்திருந்தால் சொல்லவும்.

நன்றி,
Latha

அக்கா, உங்க அக்காவுக்கு தையல் தெரிந்து இருந்தால் வீட்டிலேயே இருந்துக் கொண்டு தைத்து கொடுக்கலாம். அல்லது சிறு பிள்ளைகளுக்கு ட்யுஷன் எடுக்கலாம். பொறுமையான் ஆளாக இருந்தால் டே கேர் சென்டர் நடத்தலாம்

ஹய் அரசி,

உங்களொட idea நல்லா இருக்கு, ஆனா என்னொட அக்கா வீட்டிலிருந்து எதுவும் செய்ய விரும்பவில்லை.
எதாவது course மாதிரி படித்துவிட்டு பிறகு வேலை செய்யலாமென்று இருகிறாள்.beautician course கூட நான் சொன்னேன்,அதும் சரி வராது.வீட்டில் செஇவதென்றால் கொஞ்சம் problem.அதான்.

இருந்தாலும் இவ்வளவு அக்கரையா சொன்னதிர்க்கு
மிகவும் நன்றி தங்கையே.

நான் தமிழில் கொஞ்சம் week,ஏதாவது பிழை இருந்தால் எல்லோரும் adjust பன்னிகோங்க.

நன்றி,
Latha

லதா அவசரம் இல்லையே.. யோசித்து சொல்ல்றேன். அவங்க இந்தியால இருக்காங்க இல்லை??? +2 ல மேத்ஸ் எடுத்தாங்களா?எந்த ஊரில இருக்காங்க

"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அக்கா டெய்லரிங், எம்பிராய்டரி கோர்ஸ் முடித்து விட்டு தையல் வேலைக்கு போகலாம். ஏனென்றால் இப்பொழுது டெய்லர் தேவை அதிகமாக உள்ளது. அல்லது KINDER GARTEN கோர்ஸ் முடித்துவிட்டு நர்ஸரி ஸ்கூலில் வொர்க் பண்ணலாம்

ஹய் இலா,

அவசரமில்லை.
அக்கா first group தான். maths and biology.
அவங்க சேலம்.

நன்றி :)
Latha

ஹய் அரசி,

kindergarden course ஐடியா நல்லா இருக்கு.
இந்த course எங்க சொல்லி தராங்கனு தெரியுமா?
சேலம் அருகில் இருனந்தால் நலம்.

மட்ற எல்லோரும் உங்களுடைய ideas கொடுங்க.

நன்றி,
latha.

அக்கா நான் சென்னையில் இருக்கிறேன். அதனால் சேலத்தில் எங்கு உள்ளது என்று தெரியவில்லை. நான் உங்க அக்காவுக்காக நெட்டில் அட்ரஸ் தேடி சொல்றேன். ஓ கே யா

31 + age.இது ஒன்றும் பெரிய வயதில்லையே.எதுக்கு கவலை.நேசிங்க் கூட படிக்கலாமே.

சுரேஜினி

lathakumar
ஹய் லதா அக்கா,
என்னுடைய பெயரும் லதா தான்.உங்கள் அக்காவுக்கு சமையல் நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். அதணால் அவர்களை வடகம், அப்பளம், ஊறுகாய் தயாரித்து கடைகளுக்கு பொடலாம் நல்ல லாபம் உண்டு

lathakumar

அக்கா அன்னை தெரசா காலேஜ் இருக்கு. இன்னும் உங்களுக்கு அதிகமான டீடெய்ல்ஸ் வேணும்னா www.clickindia.com இந்த வெப்சைட் ஐ ஓபன் பண்ணி பாருங்கள்

மேலும் சில பதிவுகள்