குக்கரில் பருப்பை நேரடியாக வேகவைக்கும்போது விசில் வரும்போது தண்ணீர் வெளியில் வந்து வீணாகிவிடுகிறது. அப்படி ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து தெரிந்தவர்கள் உதவவும்.
குக்கரில் பருப்பை நேரடியாக வேகவைக்கும்போது விசில் வரும்போது தண்ணீர் வெளியில் வந்து வீணாகிவிடுகிறது. அப்படி ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து தெரிந்தவர்கள் உதவவும்.
ஹாய் சாய் கீதா..
பருப்பை குக்கரில் வேக வைக்கும் போது சிறிது எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.தண்ணீரின் அளவை கொஞ்சம் குறைத்துகுங்க.தண்ணீர் வெளியே வராது.
சாய் கீதா..
பருப்பு வேக வைக்கும் போது எப்போதும் தண்ணீர் பருப்பு மூழ்கும் அளவு மட்டுமே இருக்கவேண்டும். நல்லெண்ணெய், பெருங்காயம் சேர்த்து வேகவையுங்கள். வாசனையாக இருக்கும்.
அதுபோல் 1 விசில் வைத்து சிம்மில் 5 நிமிடம் வைத்தால் பருப்பு நன்றாக வெந்துவிடும்.
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
காஸ்கட்
கீதா தோழிகள் செல்வது போல் திட்டமாக தண்ணிர் வையுங்கள்.
காஸ்கட் இலகி இருந்தாள் அதுப்போல் தண்ணிர் வேலிஏரும்.
அதனால் உபயோகிக்காத நிலையில் காஸ்கட்டை தண்ணிரில் போட்டு வைக்கலாம். அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். உபயோகிக்கும் போது எடுத்துக்கோள்ளவும்.
இது பழய முறை. இதைதான் நானும் செய்வேன். ஆயிரம் இருந்தாலும் OLD is GOLD தான.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஹாய் மேனகா,உமா,ப்ரபா,!
பதில் கொடுத்த உங்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி!. நீங்கள் சொல்வதுபோல் செய்து பார்த்துவிட்டு தெரிவிக்கிறேன்.
HELLO SAI GEETHA AKKA
அக்கா தண்ணீர் கொதித்து கொஞ்சம் வற்றிய பிறகு சிறிது ஆயில் சேர்த்து மூடி போடுங்கள். தீயையும் குறைத்து வையுங்கள். உப்பு சேர்க்கவேண்டாம்.
ஹாய் அரசி!
ஆலோசனைக்கு மிக்க நன்றி அரசி!
வாழ்க
வாழ்க வளமுடன்
when u clean the rice first water u leave it then second time u wash the water that water is very use to dhalcooking seekeram cook agum
வாழ்க வளமுடன்
communicate to members
hi sai geethalakshmi i am also frm kuwait where u staying i am n maidanhawally pls give me ur mailid i am new in arusuvai pls i very eager to tak with all members but i do know how to communicate pls help me
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
hi saigeethalakshmi and
hi saigeethalakshmi and priya i m also from kuwait,st.tunis,hawally.i hope i will get friends here from this arusuvai.