கேரட் சோமாஸி (குழந்தைகளுக்கு)

தேதி: December 24, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கேரட் துருவல் - 1 கப்
2. தேங்காய் துருவல் (ட்ரை) - 1/2 கப்
3. பொடித்த சர்க்கரை - 3/4 கப்
4. மைதா மாவு - 1 கப்
5. டால்டா - 1/4 கப்
6. உப்பு - 1 சிட்டிகை


 

டால்டா, உப்பு சேர்த்து மாவை நன்று மிருதுவாக பிசையவும்.
கேரட், தேங்காய் ஈர பதமாக இருந்தால் தனி தனியா கடாயில் போட்டு லேசாக வறுத்து எடுக்கவும். (ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் தேவை இல்லை)
கேரட், தேங்காய், சர்க்கரை கலந்து வைக்கவும்.
மாவை சின்ன உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்தி போல் தேய்க்கவும்.
இதன் நடுவில் கேரட் கலவை வைத்து மடித்து மூடவும். ஓரம் நன்றாக அழுத்தி விடவும். இதை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்