பீட்ரூட் ஹல்வா

தேதி: December 25, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

பீட்ரூட் - ஒரு கிலோ
சர்க்கரை - 400 கிராம்
மில்க் மெயிட் - 200 கிராம்
பால் - 200 மில்லி
ஏலக்காய் – மூன்று
கிஸ்மிஸ் பழம் – கருப்பு (அ) மஞ்சள்
பாதாம் - 50 கிராம் (பொடிக்க) + 25 கிராம்
முந்திரி - 50 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
அக்ரூட் - 25 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை


 

பாலை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும். 50 கிராம் பாதாமை பொடித்து கொள்ளவும். 25 கிராம் பாதாம், முந்திரி, அக்ரூட் மூன்றையும் பொடியாக நறுக்கி அதனுடன் கிஸ்மிஸ் பழத்தையும் சேர்த்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் பட்டர் போட்டு உருகியதும் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
வதக்கிய பீட்ரூட்டுடன் காய்ச்சிய பாலை ஊற்றி ஏலக்காய் சேர்த்து வேக விடவும்.
பீட்ரூட் முக்கால் பாகம் வெந்ததும் பொடித்து வைத்திருக்கும் பாதாம் பவுடரை சேர்த்து கிளறவும்.
பாதாம் பவுடர் சேர்த்த பின்னர் சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்.
சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை நன்கு கிளறி, பின்னர் சர்க்கரையை சேர்க்கவும்.
சர்க்கரை சேர்த்த பின்னர் கலவை தண்ணீர் போல் இளகி விடும் அப்போது கிளறி விட்டு தண்ணீரை வற்ற விடவும். பின்னர் அதில் இரண்டு மேசைக்கரண்டி நெய்யை சேர்த்து கிளறவும்.
இறுதியாக மில்க் மெயிட்டை ஊற்றி நன்கு கைவிடாமல் கிளறவும். மில்க் மெயிட் சேர்த்த பின்னர் அப்படியே விட்டால் அடி பிடித்துவிடும்.
கலவை ஒன்றாக சேர்ந்து சற்று கெட்டியானதும் வறுத்து வைத்துள்ள பருப்பு வகைகளை சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான பீட்ரூட் ஹல்வா ரெடி.
அறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

நட்ஸ் வகைகள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல், வெறும் பாதாம், முந்திரி கூட சேர்க்கலாம். குழந்தைகளுக்கு செய்யும் போது எல்லாவற்றையும் அரைத்தே செய்யவும். அப்படியே பிரெட், தோசை, சப்பாத்தியில் வைத்து கொடுக்கலாம். சர்க்கரை இல்லாத பால் கோவா சேர்ப்பதாக இருந்தால் மில்க் மெயிட் சேர்க்க தேவையில்லை. இது நல்ல ரிச்சான கலர்புல் ஸ்வீட், சுவைத்து மகிழுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஜலீலா மேடம் ,,
இதில் மில்க் மெய்த் என்பது condensed milk ?? எனக்கு இது புரிய மாட்டேங்குது.
நீங்க பதில் சொன்ன அடுத்த நொடி செய்துடுவேன்

அங்க படத்தில இருக்கறத வைத்து ஒரு குத்து மதிப்பா சொல்றேன்

Sweetened Condened Milk

"Every day I get up and look through the Forbes list of the richest people in America. If I'm not there, I go to work." -Robert Orben

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆமாம் இலா,
எனக்கும் அப்படி தான் தோனுது..
நன்றி

அக்கா இப்ப அவுட் ஆப் ஸ்டேஷனில் இருக்கங்க வந்து பதில் சொல்லுவாங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

டியர் பாலம்மு இலா சொன்னது சரி, மில்க் மெயிட் என்றால் ஸ்வீட்டண்ட் கண்டெண்ஸ்ட் மில்க் தான் அது.
ஜலீலா

Jaleelakamal

ஜலீல கலர்ஃபுல் அல்வா.பார்க்கவே அழகாக உள்ளது.செய்து பார்த்து விட்டு மீண்டும் வருகின்றேன்.படத்தில் இருக்கும் சுட்டீஸ் யார்?க்யூட் குட்டீஸ்..
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா நல்மா? ரொமப் நாள் கழித்து உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.
பீட்ரூட் ஹல்வா நாங்க அடிக்கடி செய்வது, செய்து பாருங்கள்.
என் பையனும், தங்கை பையன்கலும்.
ஜலீலா

Jaleelakamal

கூகுள் ஓப்பன் செய்து ஐடியலுக்கு போய் விட்டீர்கள்.ஃபிரீ ஆக இருந்தால் வாருங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website