களி

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பச்சரிசி - 5 கப்
வெல்லம் - 1 1/2 கிலோ
தேங்காய் - ஒன்று
நெய் - ஒரு கப்
முந்திரி - 100 கிராம்
திராட்சை - 50 கிராம்
ஏலக்காய் - 20 கிராம்


 

பச்சரிசியை நன்றாக சிவக்க வறுத்து அதை மிஷினில் கொடுத்து ரவை மாதிரி உடைத்துக் கொள்ளவும்.
ஒன்றரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒன்றரை கிலோ வெல்லத்தைப் போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்கு கரைந்து கொதித்து வரும்போது உடைத்த பச்சரிசி ரவையை அதில் கொட்டி பொங்கல் போல் நன்கு கிளறவும்.
கெட்டியான பிறகு கீழே இறக்கி நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைப் போட்டு சிறிது நெய்யும் சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளவும். ஏலப்பொடியினையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்