குரோசே பின்னலில் எளிமையான ஹேர் பான்ட் செய்வது எப்படி?

தேதி: December 27, 2008

5
Average: 4.2 (5 votes)

குரோசே பின்னலின் மூலம் எளிமையான முறையில் செய்யும் ஒரு அழகிய ஹேர் பேன்ட் செய்முறையை இங்கு பார்க்கலாம். இந்த குரோசே பின்னல் முறைகளை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

 

பின்னல் நூல் - இரு நிறங்களில் (நீலம் & கருநீலம்)
பின்னல் ஊசி - G/6 4.25mm (அல்லது எதாவது ஒரு அளவில்)
கத்தரிக்கோல்

 

நீல நிற நூலில் ஆறு சங்கிலிகள்(chains) போட்டு ஊசியிலிருந்து இரண்டாவது சங்கிலியில் தனி குரோசே பின்னல் போடவும். தொடர்ந்து அடுத்து வரும் சங்கிலிகளில் நான்கு தனி குரோசேக்கள் போடவும். (மொத்தமாக ஐந்து தனி குரோசேக்கள்)
பின்னர் மூன்று சங்கிலிகள் போட்டு திருப்பவும். பின் நடுவிலுள்ள மூன்றாவது சங்கிலியில் ஒரு இரட்டை குரோசே பின்னல் போடவும். பின் ஒரு சங்கிலி போடவும். பின் அதே சங்கிலியில் மீண்டும் ஒரு இரட்டை குரோசே பின்னல் போடவும் - 'V' பின்னல்(V stitch). பின்னர் ஒரு சங்கிலி விட்டு கடைசி சங்கிலியில் ஒரு இரட்டை குரோசே பின்னல் போடவும். பின் மூன்று சங்கிலிகள் போட்டு மீண்டும் இதேப்போல தொடர்ந்து செய்யவும்.
இதைப் போலவே தொடர்ந்து தேவையான அளவிற்கு பின்னியதும் நூலை நறுக்கி முடித்து விடவும்.
பின்னர் இரு முனைகளையும் இணைத்து தைத்து விடவும்.
பூ செய்வதற்கு கருநீல நிற நூலில் 3 சங்கிலிகள் போட்டுக் கொள்ளவும்.
பின் முதலாவது சங்கிலியோடு இணைப்பு / தொடுப்பு பின்னலால் இணைத்து அதை ஒரு வட்டமாக்கவும்.
பின்னர் வட்டமாக 10 தனி குரோசேக்கள் போட்டு இணைப்பு / தொடுப்பு பின்னல் மூலம் முதலில் உள்ள தனி குரோசேவுடன் இணைக்கவும்.
பின்னர் முதலாவது சங்கிலியில் நான்கு இரட்டை குரோசேக்கள் போடவும். அடுத்துள்ள சங்கிலியில் தனிக்குரோசே போடவும். (இதழ் ஒன்று) இவ்வாறு சுற்றிவர ஐந்து இதழ்கள் செய்யவும். பின் இணைப்பு/தொடுப்பு பின்னலால் முதலில் உள்ள இதழுடன் இணைத்து நூலை வெட்டி விடவும்.
மெல்லிய நீல நிற நூலை சிறிய நாலைந்து நூலாக மடித்து நடுவில் அதே நிறநூலால் கட்டவும். (போவ்(bow) மாதிரி)
பின்னர் இதனை கருநீல பூவின் நடுவில் சொருகி கீழே முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
அதன் பிறகு இந்த பூவை ஹேர் பான்டின் மேல் வைத்து இறுக்கமாக கட்டி விடவும்
இப்போது அழகான ஹேர் பான்ட் தயார். சிறு குழந்தைகளிற்கு அவர்களின் ஆடைகளின் நிறத்திற்கேற்ப செய்து போட அழகாக இருக்கும்.
இதைப் போல் வெவ்வேறு நிறங்களிலும் விருப்பத்திற்கேற்ற வடிவங்களிலும் செய்துக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நர்மதா,
ஹெயார் பான்ட் அழகாக உள்ளது. உங்கள் சமையலையும் நான் அடிக்கடி சுவைக்கிறேன், நன்றி.
செபா.

super and easy to learn,நீங்க art & craft டீச்சரா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நர்மதா மேடம் உங்க குரோசே வொர்க் ரொம்ப ஈசியா இருக்கு நானும் கத்துக்கபோறேன்

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta