(ஆல் பர்ப்பஸ் க்ரீம்) புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவா!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவா!!!
(வீட்டிலேயே பேஷியல்) மசாஜ் செய்யும் போது ஆலிவ் ஆயிலுக்கு பதில் ஹெர்பல் ஆல் பர்ப்பஸ் க்ரீம் வித் அலோவெரா -ஆயுர் ப்ராண்ட் பயன்படுத்தலாமா? அது நல்ல ப்ராண்ட் தானா?
நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். ஆயுர் நல்ல பிராண்ட் தான். நமது முகத்தில் ஊடுருவும் க்ரீம் நல்ல க்ரீமாக இருந்தால் போதுமானது. இந்த பிராண்ட் க்ரீம்தான் உபயோகிக்க வேண்டும் என்றில்லை. ஆனால் பேஷியல் செய்யும்போது அந்த க்ரீம் கொண்டு எளிதாக மசாஜ் செய்வதற்கு ஏற்றவாறு, க்ரீம் கொஞ்சம் ஆய்லி தன்மையோட இருக்கறது அவசியம். பேர் அண்ட் லவ்லி மாதிரியான க்ரீம்களை உபயோகப்படுத்தி மசாஜ் செய்யமுடியாது. அப்படிப்பட்ட க்ரீம்களை முகத்தில் வெச்சு மசாஜ் செய்ய நினைச்சு தேய்ச்சா முகத்தில் ஈசியா சுருக்கம் விழுந்துடும். நீங்க உபயோகப்படுத்தும் க்ரீம் அப்படிப்பட்ட வகையா இல்லாம இருந்தா தாராளமா உபயோகப்படுத்தலாம். சீக்கிரமே ஸ்கின்னில் மறைஞ்சுப் போகற க்ரீமா இருந்தா முகம் இழுபடும். கவனமாக தேர்ந்தெடுங்கள்.

மேலும் சில பதிவுகள்