கடாய் காளான்

தேதி: December 30, 2008

பரிமாறும் அளவு: 2 - 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (9 votes)

 

பட்டன் காளான் - 250 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன்
மல்லித்தூள் - ஓன்னறை டீஸ்பூன்
மல்லி இலை, புதினா, கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு


 

முதலில் காளான் மூழ்கும் அளவு கொதிநீர் விட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். வடிகட்டி நான்காக கட் பண்ணிகொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா, கறிவேப்பிலை பொடியாக கட் பண்ணிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,மல்லி, புதினா, கறிவேப்பிலை, காளான், உப்பு சேர்த்து பிரட்டி கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி விடவும்,பத்து நிமிடத்தில் ஆகிவிடும்.
சுவையான கடாய் காளான் ரெடி.


இதனை நாண் அல்லது ப்ரெட் டோஸ்ட், ஆரஞ்சு ஜூஸ் உடன் பரிமாறவும். சுவைக்கு எல்லோரும் மயங்கி விடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Mam,
U didnt mention when to add tomato. Kindly mention it mam

Aim @ top atleast u will get the bottom of it

Madam,

Thank you for such wonderful receipe...I tried and it was delicious...

My family conveyed their compliments to you :)
Love,
Dhivya

Be happy, make others happy

நன்றி ஆசியா, கடாய் காளான் செய்து சாப்பிட்டு உங்களுக்கு பதிவு போடமல் இருக்க முடியவில்லை. முதல் முறை ரொம்ப நன்றாக இருந்தது. இதன் சுவைக்காவே இந்த பதிவு.மிக்க மகிழ்ச்சி .

அன்புடன்,
ரமணி-ka

We tried this receipe today,tasted fabulous and awesome one.All of us liked verymuch and enjoyed it.Thanks for the recipe.

இந்த ரெசிப்பியை செய்து பார்த்து பின்னூட்டமும் அளித்தமைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

போட்டோ இணைத்தமைக்கு நன்றி ,மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Hi aasiya,

very gd dish, i have one doubt, mushroom is a veg or non veg food.

pls clarify

வெஜ் தான் தோழி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்னைக்கு எங்க வீட்டில் கடாய் மஷ்ரூம் அண்ட் சப்பாத்தி. சூப்பரா இருந்தது. இது வரைக்கும் நான் மஷ்ரூம் sour cream சேர்த்துதான் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா செய்வேன். இது ரொம்ப நல்லா இருந்தது ஆசியா. நான் மஷ்ரூம் தனியாக வேக வைக்கவில்லை. வெங்காயம் தக்காளி வதக்கி விட்டு எல்லா மசாலாவும் சேர்த்து விட்டு நறுக்கி வைத்த மஷ்ரூம் போட்டு சிறிது வதக்கி தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்தேன். I think its the combination of such spices give such a wonderful taste to this dish! And very healthy choice too, compared to cooking it with sour cream!

ரொம்ப நன்றி ஆசியா :)

அன்புடன்
உமா

உமா செய்து பார்த்து சிறந்த பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.எனக்கு தூத்துக்குடியில் உமான்னு ஒரு ஃப்ரெண்ட் உண்டு.தெர்மல் பவர் ஸ்டெஷன் காம்ப் -2 குவார்ட்டர்ஸில் எனக்கு திருமணம் ஆன புதிதில் 4 வருடம் இருந்தோம்,இன்னும் தொடர்பில் இருக்காங்க,உமான்னு பார்க்கும்போதெல்லாம் அவ்ங்க நினைவு வரும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அப்படியா ஆசியா? நான் இந்தியா வரும்போதெல்லாம் தூத்துக்குடிக்கு செல்வேன். திருச்செந்தூர் கோவிலுக்கு! இனிமேல் உங்களுக்கு சிட்னியிலும் உமான்னு ஒரு தோழி இருக்கன்னு நினைச்சிகுங்க :)

அன்புடன்
உமா

ஆசியா அக்கா .. நான் 12த் வரை ஹோலி கிராஸ். வீடு கேம்ப் 1 - டைப் 3 பிளாக் 10. அப்புறம் கோவைக்கு பெர்மனன்டா மூவ் ஆகிட்டோம். எனக்கும் பலர் அங்க தெரியும் எங்க எதிர் வீட்டு மீனா அக்கா கல்யாணம் ஆகி கேம்ப் 2 தான் .உமா நீங்க எங்க கிளாஸ் மேட் உமா இல்லியே உமா ஹரிஹரன்??

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நாங்களும் கேம்ப் 2, 5/7 ல கொஞ்சம் நாள் இருந்தோம்ல...

உங்களுக்கும் கேம்ப் -2 தெரியுமா?அதன் ஸ்பெசல் ,அதன் அமைதி,அங்குள்ள கடற்கரையும்,ஒப்பன் ஏர் தியேட்டர் தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நிஜமாத்தாங்க.. ரொம்ப அருமையான இடம்.. காம்ப்பவுண்ட் தாண்டி எதிரே இருக்கிற கடற்கரை.. ஜன்னல் கதவை திறக்க முடியாதபடி வீசுற காத்து, இரவு நேரம் மொட்டை மாடியில இருந்து சுற்றிப் பார்த்தா தெரியுற மின்மினி விளக்கு வெளிச்சங்கள்.. ஏதோ ஒரு வெளிநாட்டுல இருக்கிற மாதிரி தோணும்.. கடற்கரை ஓரமா நடந்தே ஹார்பர் வரை வருவோம்.. ஓபன் ஏர் தியேட்டர்ல பனியில நனைஞ்சபடியே "பூ விழி வாசலிலே" படம் பார்த்தது இன்னும் பசுமையா நினைவில இருக்கு.. (நான் சொல்றது 1987 ல..:-))

அட்மின் நீங்க எல்லாரையும் கலாய்ச்சி பிட்டு போடறதால நீங்க சொல்லறத நம்பனும்ன்னா ஒரு டெஸ்ட். உங்க கேம்ப் 2 க்கு வர்ர டவுன் பஸ் நம்பர் என்ன :))

ஆசியா அக்கா நீங்க தான் சரியா தவறான்னு சொல்லனும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நானும் தூத்துகுடிக்கு வந்திருக்கேன். எனக்கு 3+1 ப்ரண்ட்ஸ் அந்த ஊரில் இருந்து. மூணு பேரில் ஒருத்தியோட அப்பா, ஹார்பரில் வேலை பார்த்தார். சோ, ஒரு நாள் ஹார்பர் போய், சல்ஃபர் இம்போர்ட் பன்ன வந்த (ரொம்ப பெரிய ஷிப் அது) கப்பலுக்குள்ளயும் போய் கிச்சன், மாலுமி ரூம் ஒன்றையும் விடவில்லை. ரொம்ப ரொம்ப ஜாலியா எஞ்ஜாய் பண்ணி, அப்படியே ஷிப்போட மாலுமி மாதிரி அந்த சீட்ல உக்காந்து ஃபோட்டொவெல்லாம் எடுத்து மறக்க முடியாத கல்லூரி வாழ்க்கை அது கிள்ளிகுளத்தில். இந்த தடவ வீட்டுக்கு போன எல்லா படத்தையும் எடுத்து ஸ்கேன் பன்னி லேப்டாப்ல வச்சிக்கலாம்னு இருக்கேன் (அப்பதான அப்பப்ப பார்க்க வசதியா இருக்கும்)
இன்னொரு ப்ரண்டு அப்பா தெர்மலதான் வொர்க் பண்ணினார். அவங்க வீட்டுக்கு பக்கதிலெயெ கொஞ்ச தூரத்திலேயெ சி ஷொர் ரொம்ப, அருமையான, ரம்யமான இடம் அது. ரொம்ப நேரம் அங்க இருக்க ஆசை பட்டோம் ஆனா அப்ப ஏதொ சென்சிட்வான இடம் என்று ப்ரெண்ட் உடனே போகலாம்னு எல்லோரையும் கூட்டிகிட்டு வந்துட்டா.

அந்த நாலு பேருமே கேம்ப், பிளாக் டைப் இது பத்தியெல்லாம் சொல்லியிருக்காங்க. ஆனா எனக்கு நாபகம் இல்ல (அப்பவும், இப்பவும்).

indira

கடாய் காளானுக்கு அடியில என்ன நடக்குது

indira

இந்திரா!!!
ரெண்டுகால் மனிஷர் தான் நடக்கினம் என்று தெரியுது.... கறையான் மாதிரி ஒரு இடமும் மிச்சமில்லை:).... எல்லா இடத்திலும் அரட்டையும் அரிப்பும்தான்.... பிறந்தாப் பிறக்கணும் அதிரா மாதிரி..:)

ஐயையோ ஆசியா மன்னிக்க வேணும் இத் தலைப்பில் தலையிட்டதற்கு. இத் தடவை அதிரா உண்மையாகவே எஸ்கேப்.... இனிப் பிடிச்சுப்பாருங்கோ பார்ப்போம்...........

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்னங்க இது.. இந்த அளவுக்கு நம்பிக்கை இல்லேன்னா என்ன செய்யறது.. நம்பிக்கைதான் வாழ்க்கையில் முக்கியம்.. அதான் கடல் எதிரே இருக்கும், காத்து வீசும்.. பார்த்த படம், பனி பெய்ஞ்சது வரைக்கும் சொல்றேன் நம்ப மாட்டேங்கிறீங்களே.. கேட்டை தாண்டினவுடனே செக் போஸ்ட் எல்லாம் இருக்கும்ங்க.. :-) மொட்டை மாடியில இருந்து பார்த்தா தெர்மலோட ரெண்டு பெரிய சிம்னி புகையை கக்குறது ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரு பக்கம் ஸ்பிக், இந்த பக்கம் தெர்மல், அடுத்த பக்கம் ஹார்பர்னு ஒரே லைட் மயமா இருக்கும். என்ன சொன்னாலும் நம்ப மாட்டீங்க.. நான் யாரோ எழுதியிருக்கிற Blog ஐ படிச்சிட்டு இந்த கதையெல்லாம் விடுறேன்னு சொல்லப்போறீங்க.. அப்படித்தானே..

இப்ப என்ன பஸ் நம்பர்தானே வேணும்.. என் டைரியில அதுவும் இருக்கு.. சொல்றேன்.. TNW 3267, சிவப்பு கலர் பஸ், ஒரு பக்கத்துல பெயிண்ட் கொஞ்சம் போயிருக்கும். இரண்டாவது சீட் பின்னாடி S.K. Ramesh ன்னு கோடு போட்டு எழுதியிருக்கும். ட்ரைவர் பேர்கூட மணிமுத்து(நாடார்).. போதுமா?

அன்பு தம்பி பாபு,
நெசமாவா? இங்க அதே எண்ல ஒரு ஆட்டோ ஓடிட்டிருக்கு :-) (ஒருவேளை டவுன் பஸ் தான் சின்னதாச்சோ என்னமோ ? )
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஓ.. அதை இப்ப ஆட்டோவாக்கி பாண்டிச்சேரிக்கு அனுப்பிட்டாங்களா..?!! இருக்கலாம். இருக்கலாம்.. டெக்னாலாஜி ஹேஸ் இம்ப்ரூப்வ்டு சோ மச் ஆ..

(இப்படி அநியாயத்துக்கு என் குறிப்புக்கு கீழே நீயும் அரட்டை அடிக்கிறியேன்னு ஆசியா அக்கா மனசுல நினைச்சதை இங்க கேட்குறதுக்கு முன்னாடி ஒரு தகவல்.. புது சைட்ல குறிப்புகள் பக்கம், வடிவமைப்பு, இண்டர்னல் டெக்னாலஜி, பிரிவுகள் எல்லாமே மாறப்போவுது. அதனால குறிப்புகள் எல்லாத்தையும் மறுபடியும் புதுசா சேர்க்கணும். குறிப்புகளை நாங்க சேர்த்துட முடியும். ஆனா அந்த குறிப்புகளுக்கு கீழே உள்ள கமெண்ட்ஸை சேர்க்க முடியாது. சேர்க்கணும்னா மறுபடியும் ஒவ்வொருத்தர் பெயர்லயும் வந்து அந்த குறிப்புகளை தேடி கண்டுபிடிச்சு, அதுக்கு கீழே சேர்க்கணும். இது நடைமுறையில ஈஸியான விசயம் இல்லை. அதனால குறிப்புகளுக்கு கீழே உள்ள பின்னூட்டம் எதுவும் இருக்காது. உறுப்பினர்கள் அனுப்பின படங்களை குறிப்புகளுக்கான படமா பயன்படுத்திப்போம். செய்து பார்த்து அனுப்பிய படங்களுக்குன்னே தனியா ஒரு செக்சன் கொண்டு வந்துடுவோம். அதனால இந்த பதிவுகள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குதான்.. அதனால பொறுத்தருள்க.. :-))

இலா, தெர்மல் குவார்ட்டர்ஸ்ல நான் கொஞ்ச நாள் இருந்தது உண்மைதான். கொஞ்ச நாள்ங்கிறது ஒரு 20 அல்லது 25 நாள். அந்த 5/7 ல இருந்தது எங்க அக்கா. அக்கா ஆத்துக்காரர்(அத்தான்) தெர்மல்ல AE ஆ இருந்தார். 88ல மேட்டூர் தெர்மலுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி, இப்ப EE ஆகி, இன்னைய வரைக்கும் அங்கதான் கரண்ட் தயாரிச்சுக்கிட்டு இருக்கார் :-)

87 மே மாசம் நான் அங்க இருந்தேன். அப்ப நீங்க காலேஜ் முடிச்சுட்டு சம்மர் லீவுல இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் ;-)

மேட்டூருமா?? விட மாட்டீங்களா எந்த ஊரயும்.. அப்பாவும் அங்க SE- aaga இருந்தார் before he moved to chennai as CE and retired இப்ப தான் ரொம்ப சமீபத்தில. He still has friends in Mettur. He told me the farming lands are cheaper in mettur

// 87 மே மாசம் நான் அங்க இருந்தேன். அப்ப நீங்க காலேஜ் முடிச்சுட்டு சம்மர் லீவுல இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் ;-)

குசும்பு தானே!!!! நான் அப்ப ஸ்கோல் தான் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நாங்க 92- 97 -ல் தூத்துக்குடியில் இருந்தோம்.நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சப்பாத்திக்கு இந்த டிஷ் செய்தேன். ரொம்பநல்லா இருந்தது.எனக்கு காளான் பிடிக்கும்.நன்றி.

சவுதி செல்வி

மகிழ்ச்சி.ரொம்ப நல்ல இருக்கும்,கொஞ்சம் ஹெவியாக மசாலா கொடுத்தால் தான் காளான் நல்ல இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இதுவும் நன்றாக இருந்தது நன்றி.

indira

பிசியாக இருக்கும் போதும் வந்து சமைத்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நானும் இப்படி தான் செய்வேன். ஆனால் மஷ்ருமை இத்துடன் சேர்த்து வேகவைப்பேன்.
மஷ்ருமில் தண்ணீரில் போட்டு வேகவைத்தால் அது இன்னும் தண்ணீரை இழுத்து கொள்ளும் தன்மை உடையது. அதனால் சில சமயம் சாப்பிடும் பொழுது ரப்பர் மாதிரி ஆகிவிடும் .
மஷ்ருமை கழுவ கூடாது. அதனை பேப்பர் டவளால் துடைத்தால் போதும்.எதே எனக்கு தெரிந்தது…
உங்கள் அனுபவத்திற்கு முன் நான் சின்ன குழந்தை…
அன்புடன்,
கீதா ஆச்சல்

நன்றி.ஆனால் வெந்நீரில் போட்டு அலசினால் தான் சுத்தமாக தெரிகிறது,ப்ரவுனாக தண்ணீர் அழுக்கு கழந்து வந்து விடும்.வடிகட்டி விடவேண்டும்.பட்டன் மஷ்ரூம் எனக்கு அப்படியே பந்து மாதிரி இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்கள் பகுதியில், தக்காளி சேர்ப்பதுபற்றி நீங்கள் குறிப்பிடவில்லையே, எல்லாவற்றையும் ஒன்றாகப் போடும்போது தக்காளியையும் சேர்க்கவேண்டும் அப்படித்தானே?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிக்க நன்றி.டைப் பண்ணும்போது வீட்டு போயிருக்கும்.சரி செய்து விடுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா, நான் கடாய் காளான் செய்திட்டேன், ஸ்டெப் பை ஸ்டெப் படங்களும் எடுத்துவிட்டேன். சூப்பர் சுவை. ஆனால் உங்கள் படம் போல இல்லாவிட்டாலும் திட்ட வேண்டாம்:). இன்னும் வனிதாவின் படங்களே அனுப்பவில்லை. இதை விரைவில் அனுப்ப முயற்சிக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என் குறிப்பை முதன் முதலில் ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்து அசத்திய தோழி அதிராவிற்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுதலும்.மிக்க மகிழ்ச்சி.அதிரா உங்களை நான் பார்த்து இருக்கிறேன்.அழகான உடுப்பில் ஸ்டைலாய் கண்ணாடியுடன் அசத்தலாய் இருக்கீங்க.பிரிட்டன் நாட்டுமங்கை போல் இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நாங்க கேம்ப் 2 ,டைப் 2 பிளாக் 9 நான்கு வருடங்கள்,என் கணவர் mrt -2 division -னில் A.E.எனக்கு அந்த கேம்ப் -2 வாழ்க்கை மிகப்பிடிக்கும்,உலகத்தில் எனக்கு சந்தோஷமான ,பிடித்த இடங்களில் அதுவும் ஒன்று.அதன் பின்பு துபாய் எலக்ட்ரிசிட்டி போர்ட்,இப்ப அபுதாபி எலெச்ட்ரிசிட்டி.என் ஃப்ரெண்ட் உமா வேலாயுதம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எனக்கும் பிடிச்ச இடம் பிடிச்ச நேரம் என் லைப்ல. அம்மாவும் பிள்ளையும் வெளில காத்தடிக்கும் போது நிக்காதீங்க காத்து தூக்கிட்டு போகும் . இப்ப எல்லாம் காத்தடிச்சா என்னையில்ல பிடிச்சிக்கிறாங்க :((

அட்மின் நெசமாலுமா? இல்லை கலாய்க்கிறீங்களா

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இல்லை இலா. நான் பிறந்தது படித்தது எல்லாமே சென்னை மாநகரம்! என் அப்பா திருநெல்வேலியில் ஒன்றரை வருடங்கள் இருந்தார்கள். அப்போதுதான் திருச்செந்தூர் அறிமுகமானது. இப்போது எங்கள் குலதெய்வம் மாதிரி செந்தூர் முருகன் :)

உமா

சாரி இலா. நீங்க என்னைத்தான் கேட்டேங்கன்னு நெனச்சிட்டேன் :( மன்னிச்சிக்கோங்க!

ஆசியாக்கண்டத்திற்கு,ஆஸ்ட்ரேலியா கண்டத்தில் ஒரு தோழியா?மகிழ்ச்சி.அதுவும் good girl.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆமாம். இந்த ஆசிய கண்டத்துக்கு ஆஸ்திரேலியா continent குட் கேர்ள் தோழிதான் :)

ஆசியா அக்கா,
கடாய் காளான் அருமையாக இருந்தது சப்பாதிக்கு.நன்றி.
அருணா.

aruna

செய்து பார்த்து கருத்து சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா அக்கா,
நலமா? மகள் மற்றும் ஊரில் அனைவரும் நலம்தானே?! நேற்று இரவு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உங்க கடாய் காளான் செய்தேன். சூப்பரா இருந்தது. நான் செய்வதும் கிட்டத்தட்ட இதுபோலதான், ஆனாலும் கூடவே கரம் மசாலா, சீரகத்தூள், பொதினா இலை எல்லாம் போட்டது, ரொம்ப சுவை கூட்டி அருமையாக இருந்தது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

தொடர்ந்து என் குறிப்புக்களை செய்து பார்த்து பின்னூட்டம் தெரிவிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா ஆன்டி கடாய் காளான் செய்வதற்கு எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது நன்றி