USA தோழிகள்

USA வில் என்ன இடம் பார்க்கலாம், எந்த ரெஸ்டாரன்ட்டில் எது நல்லா இருக்கும்? போன்ற கருத்துகள் குறவும்? நான் USAவில் சில இடங்களை சுற்றி பார்க்க இருக்கிறேன் ? நான் East Coast இருக்கிறேன்.

நன்றி
ஜெயஸ்ரீ

ஹாய் ஜெயா,
எப்படி இருக்கிங்க? USயில் எங்கு இருக்கிங்க?

USயில் வாழும் தோழிகள் கொஞ்சம் இந்த பக்கம் வாங்க பா.

என்ன இப்ப யூ எஸ்க்கு ஒரு தனி த்ரெட் ரெடியா?
ஈஸ்ட் கோஸ்ட்ல எந்த ஸ்டேட் ஜெயஸ்ரீ ?
அப்ப எனக்கு தெரிஞ்சா சொல்றேன். இப்ப ரொம்ப குளிர் இல்லையா ஃக்ரோசரி ஸ்டோர் போகறதே ஒரு டிரிப் மாதிரி இருக்கு :))
கீதா நேத்து நைட் தான் நியூயார்க்ல இருந்து வந்தேன். இன்னைக்கு போன் பண்ணறேன்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆமாம் இலா யூஸ் க்கு தனி த்ரெட் பா..எல்லோரும் கொஞ்சம் இந்த பக்கம் வாங்க பா

நானும் யூஸ் ல தான் இருக்கேன், நியூஜெர்ஸி ல..இங்க இப்போ ரொம்ப குளிர் அதிகமா தான் இருக்கு, இப்போ வந்தால் எல்லா இடமும் பார்க்க ரொம்ப கஷ்டம்..அது மட்டும் இல்லாமல் நீங்க எத்தன நாள் வர போறீங்க?னு தெரியல..இதுக்கு முன்னால நீங்க எந்த இடமெல்லாம் பார்த்து இருக்கீங்கனு தெரியல..இது எல்லாம் தெளிவா விளக்கமா சொன்னால் தோழிகள் உங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களும் சொல்லுவாங்க.. இலா சொன்ன மாதிரி இப்போ காய்கறி வாங்க போறதே ஒரு டிரிப் போன மாதிரி தான் இருக்கு, அதும் குழந்தை இருந்தால் அந்த டிரிப் கூட போக முடியாது..உங்கள பயமுறுத்தல பா, யோசிச்சு செய்யுங்க பா..

ஹாய் சந்தோ!!!
உங்களுடன் பேசி நாளாகுது. மகன் சுகமா?? ரெண்டு நாள் ஜெர்சி/லாங் ஐலன்ட் ட்ரிப். எடிசனில் ஒரு ஷாப்பிங் போனோம். ஜெயஸ்ரீ இருப்பது ஈஸ்ட் கோஸ்ட்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன் பா, அவனுக்கென்ன சந்தோசம என் உயிர எடுத்துட்டு இருக்கான், பதில் சொல்ல முடியல பா..நீங்க இங்க வந்திருந்தீங்களா? முதலில் சொல்லிருந்தால் பார்த்திருக்கலாமே? ஆனால் இங்க அடிக்கிற குளிருக்கு நாங்க இவனையும் வச்சிட்டு எங்கயும் போறது இல்லபா...எடிசன் ல ஷாப்பிங்கா? இங்க வந்து ஒரு வருஷம் ஆச்சு பா ஆனால் இன்னும் எடிசன் போனதே இல்ல.எங்க என்ன கிடைக்கும்?உங்களுக்கு டைம் இருந்தால் கொஞ்சம் எடிசன் பத்தி சொல்லுங்க..

சந்தோ
இந்த டிரிப் ல எப்படியும் ஒரு 30 பேர் பார்த்தோம் இன்னும் வர்ரேன்னு சொல்லி போக முடியலை பலர் வீட்டுக்கு. அடுத்த முறை வரும்போது சொல்லிட்டு வர்ரேன். எடிசன் ஜெர்சி சிட்டி மாதிரி தான் எல்லாமே இருக்கு. சனிக்கிழமை ஒரு காதுக்கு சின்ன ரிங் வாங்கினேன். ஒரு குந்தன் செட் வாங்கினேன் சேல் போட்டு இருந்தாங்க

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சந்தோ,
எப்படி இருங்கிங்க? உங்கள் பையன் எப்படி இருக்கிர்ரு?
எடிசனில் நம்மூர் ஹோட்டல் சரவண பவன் இருக்கு. இன்னும் கொஞ்சம் துரத்தில் (North Brunswick) அஞ்சப்பர் ஹோட்டல் இருக்கும். நாங்கள் இங்கு இருந்து எடிசன் அடிக்கடி வருவோம் சரவண் பவனில் சாப்பிட.

ஹாய் தோழிகளே என்னனயும் உங்கள் அரட்டையில் சேர்த்து கொள்ளுங்கள்.நான் california laஇருகேன்.யாராவது அங்கு இருந்தால் உரையாட நலமாக இருக்கும்.

saranya

indrae sei nandrae sei

US குள் மாநில வாரியாக பிரித்து புதிய திரெட் துவங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.

உதாரண்த்திற்கு,

"வட சிகாகோ தோழிகளே"
தென் சிகாகோ தோழிகளே
விஸ்கான்சின் தோழிகளே
கலிபோர்னியா தோழிகளே

என்று.

ஹி.ஹி ஏதோ என்னாலான உதவி.

மேலும் சில பதிவுகள்