புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், குடும்பத்தினருடன் புத்தாண்டை இனிதாக கொண்டாட என் வாழ்த்துக்கள். விடா முயற்சி, உழைப்பு, நல்ல எண்ணங்கள், தன்னைப் போல பிறரையும் நினைத்தல், நம்மால் முடிந்த உதவிகளை உழைக்க இயலாத முதியோர்கள், உடல் ஊனமுற்றோருக்கு செய்தல், அடுத்தவரின் முக, உடல் அழகை பழிக்காமல் இருப்பது, அடுத்தவர் மனம் புண்படாத பேச்சு, வாரத்தில் ஒரு நாளாவது டீவிக்கு கண்டிப்பாக ஓய்வு கொடுப்பது, வீட்டை மாற்றி அலங்கரித்து புத்துணர்ச்சியாக வைத்திருக்கச் செய்வது, புதிய சில (பல)) புத்தங்களையாவது வாசிப்பது, நமது உடலை முழுதாக ஒரு முறை மருத்துவமனை சென்று செக்கப் செய்து கொள்வது, உடற்பயிற்சி, நல்ல சத்தான உணவை சாப்பிடுவது, திட்டமிடுதல் இவற்றில் நம்மால் முடிந்த சிலவற்றையாவது கடைபிடிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று உறுதி கொள்ளுங்கள். நமது வாழ்வின் எதிர்காலத் திட்டங்களுக்கான சேமிப்பு, பென்ஷன் பிளான், இன்சூரன்ஸ், மொத்த குடும்பத்தினருக்கும் ஏற்ற ஹெல்த் பாலிசி, குழந்தைகளுக்கான கல்வித்திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யாவிடில் இனி ஆரம்பிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கலாம். இந்த விஷயங்கள் நாம் ஏற்கனவே செய்ய ஆரம்பித்திருந்தாலும், யாருக்காவது பயனுள்ளதாக இருக்குமே என்று இங்கே எழுதுகிறேன். மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். அனைவரும் வாழ்த்துக்களோடு தங்களால் இயன்ற ஏதாவது வருங்காலத்திற்கான திட்டங்களைப் பற்றியும் அல்லது நல்ல விஷயங்களையும் எழுதினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்களோடு அந்த தகவல்களும் அனைவரையும் சென்றடையும். இது எனது வேண்டுகோள் மட்டுமே.

நம் எல்லோரின் வாழ்க்கையும் நல்ல பல மாற்றங்கலுடன் இந்த புத்தாண்டில் தொடங்கி வெற்றி மேல் வெற்றி அடைய உலகில் வாழும் அனைத்து அறுசுவை நெஞ்சங்களையும்,அறுசுவை குடும்பத்தையும் மனமார வாழ்த்துகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

lovely
ஹாய்,
சாந்தியும் சமாதான்மும் உலகில் உள்ள அனைவர்மீதும்
உண்டாகட்டும் புத்தம் புதிதாய் பிறக்கபோகும் புத்தாண்டில்
புவியெங்கும் புன்னகையுடன் கூடிய மகிழ்ச்சி பொங்கட்டும்
வரும் ஆண்டில்[நாளை] இருந்து மனம் நெகில்வடைய்ச்செய்யும்
விசய்ங்களை செய்ய ஆசைபடுகிறேன்

நம்மால் முடிந்தவரை கல்விகற்க வைக்கவேண்டும்
ஊனமுற்றோருக்கு உதவ வேண்டும்

நாவாலோ மனதாலோ யாருக்கும் எவ்வித கெடுதலும்
செய்யாமல் இருக்கவேண்டும்

தேவைக்கு மேல் அதிகமானதை தவிற்க்க வேண்டும்

பிறர் நலம் வேண்டும்,பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டும்

பிரியமான ப்ரண்ஸ்களை பிரியாதிருக்க வேண்டும்

கணவன் என்கிற கடலுக்குல் என்னாலும் கலந்திருக்க வேண்டும்

உலகத்தின்ல் உள்ள எல்லாரும் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசத்துடனும் வாழ

எல்லாம் வ்ல்ல இறைவனை அனுதினமும் பிராத்தித்துக்கொண்டே
இருக்கவேண்டும்

பொங்கட்டும் மகிழ்ச்சி அடையுங்கள் ஆனந்தம்

மகிழ்ச்சியுடன் வரவேற்கும் மலிக்கா
புத்தாண்டை மட்டுமல்ல உங்கள் அனைவரையும்தான்

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

மல்லிகா உங்கள் வரிகளுக்கு என் வந்தனம் எல்லோரும் இதை கடைப்பிடிக்க முயற்ச்சி செய்வோம் [வாழ்த்துக்களுடன் தாஜ்]

ஹாய் அருசுவைக்கும் மற்றும் அனைத்து தோழிகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டே வருக
எங்கள் இல்லங்களில் இன்பம் பெருக.......

வாங்க ஜெயலெஷ்மி அருசுவை தோழிகள் அனை வருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.ஜெயா புத்தாண்டு ஸ்பெஷல் என்னப்பா.மலிகா கலக்குரீங்கப்பா

ஹாய் எப்படி பா இருக்கீஙக? ஆமாம் பா ஸ்வீட் செய்யனும். இன்னும் டிசைடு பண்ண்லப்பா..சொல்றேன் பா.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அறுசுவை தோழியர், தோழர், அட்மின் அனைவருடைய குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு அனைவரின் இல்லத்திலும் பதினாறு வகை செல்வங்களையும், நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு சேர்க்க எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

புதிதாக அறுசுவையில் இணைந்திருக்கும் அனைத்துத் தோழியருக்கும் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

அனைது சகோதர சகோதரிகளுக்கும்,அறுசுவை நிர்வாகிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சோதனைகளும் வேதனைகளும் தொலையட்டும்
சாதனைகளும் மேன்மைகளும் பெருகட்டும்
மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கட்டும்
வசந்தம் என்றும் நிலவட்டும்
இனிய புத்தாண்டே வருக!வளங்கள் அனைத்தும் தருக!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்