பால் ரவா உருண்டை

தேதி: January 2, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - 1 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - 2
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 2 தேக்கரண்டி


 

முதலில் ரவையை 1 தேக்கரண்டி நெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.
பாலினை நன்றாக காய்ச்சவும்.
ஏலக்காயை பொடித்து வைக்கவும்.
பால் கொதித்த பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.
பின் அதில் ரவையை மீதம் உள்ள நெய்யுடன் சேர்த்து வேகவிடவும்.
ரவை நன்றாக வெந்த பிறகு கடைசியில் ஏலக்காய் தூவி கிளறி விடவும்.
இந்த பால் ரவையை கொஞ்சம் நேரம் ஆறவிடவும்.
பின் இதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
இப்பொழுது சுவையான பால் ரவா உருண்டை ரெடி.


ஓரிஸா மாநிலத்தில் பண்டிகையின் பொழுது செய்யும் ஒரு வித ஸ்வீட்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹலோ கீதா ஆச்சல்,
இன்று இது செய்து பார்த்தேன்... நெய் ரொம்ப கம்மியாக ஒரு ஸ்வீட்! எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
வித்தியாசனமான குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி ஸ்ரீ.
இதனை என்னுடைய தோழிவீட்டில் சாப்பிட்டது. மிகவும் சுவையாக இருந்த்து. அதன் பிறகு ஏனோ என்னால் இது நாள் வரை வீட்டில் செய்ய முடியவில்லை…
அன்புடன்,
கீதா ஆச்சல்