சந்திரகலா

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா - ஒரு கப்
பால்கோவா - ஒரு கப்
சீனி - ஒரு கப்
முந்திரி - 10
திராட்சை - 10
நெய் - 2 தேக்கரண்டி
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் லிட்டர்


 

சிறிது நெய்யில் முந்திரியை பொடியாக நறுக்கிப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நெய்யில் மைதாவைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கோவாவை உதிர்த்து முந்திரி, திராட்சை, ஏலப்பொடி ஆகியவற்றுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதுதான் பூரணம்.
மைதாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மெல்லியதாக வட்ட வடிவில் தேய்த்து, அதில் பூரணத்தை சிறிது வைத்து, சமோசா வடிவத்தில் மடித்து, ஓரங்கள் பிரிந்து விடாதபடி ஒட்டவும்.
இதே போல் அனைத்து மாவினையும் சமோசாக்கள் போன்று செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், மிதமானத் தீயில் செய்து வைத்துள்ள சமோசாக்கள் அனைத்தையும் பொரித்து எடுக்கவும்.
சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு, கம்பிப் பாகாய் காய்த்துக் கொள்ளவும்.
பொரித்து எடுக்கும் சமோசாக்களை சர்க்கரைப் பாகில் புரட்டி எடுத்து, ஒரு தட்டில் அடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்