ஆலு கோபி

தேதி: January 4, 2009

பரிமாறும் அளவு: 4- - 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
காலிஃப்ளவர் - கால் கிலோ
சில்லி பவுடர் - முக்கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1 (கட் பண்ணியது)
கடுகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி இலை - கொஞ்சம்.


 

உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளதுண்டுகளாய் கட் பண்ணிகொள்ளவும்.
காலிஃப்ளவரை சிறிய பூக்களாக பிரித்துக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, காலிஃப்ளவருடன் உப்பு, சில்லி பவுடர், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து மிக்ஸ் செய்து ஆவியில் வேக வைக்கவும். (குக்கரில் தனியாக ஒரு பாத்திரத்தில் 2 விசில் வைக்கவும்).
ஒரு பேனில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு, சீரகம் போட்டு வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஆவியில் வெந்த உருளைக்கிழங்கு, காலிஃப்ளவரை சேர்த்து வதக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான ஆலு கோபி ரெடி.


சப்பாத்தி ,நான் உடன் பரிமாறவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செய்தேன் ரொம்ப நன்றாக இருந்தது.

மிக்க நன்றி. நான் அடிக்கடி செய்வேன்.சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

I am doing this regularly in my home nowadays . Very Simple and chat-pat subzi ... Thanks for this Recipe
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிக்க மகிழ்ச்சி.ரொம்ப சிம்பிள்,சூப்பர் டேஸ்டாக இருக்கும்.சீரகம் போடுவது தான் இதன் ஸ்பெஷாலிட்டி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.